என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ரன் அவுட் ரசியத்தை ரிஷப் பண்ட், ஜாகீர் கானிடம் ஜாலியாக பேசிய தோனி- வைரலாகும் வீடியோ
    X

    ரன் அவுட் ரசியத்தை ரிஷப் பண்ட், ஜாகீர் கானிடம் ஜாலியாக பேசிய தோனி- வைரலாகும் வீடியோ

    • பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை தோனி அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
    • அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது.

    முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்" என்று சொன்னார்.

    அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என தோனியிடம் ஜாலியாக கூறினார்.

    Next Story
    ×