என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
- பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
- கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
Next Story