என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஷேக் ரஷீத் 27 ரன்னிலும், ரவீந்திரா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி வீரர்கள் ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துபே மற்றும் தோனி சிறப்பாக ஆடினர்.

    துபே 37 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களும், தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

    இறுதியில் சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    • மார்கிராம் 6 ரன்னிலும், பூரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நூர் அகமது 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

    லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ்- ரிஷப் பண்ட் ஜோடி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முயன்றனர். இருந்தாலும் ஜடேஜா வீசிய 10ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். 12.1 ஓவரில் லக்னோ அணி 100 ரன்னைத் தொட்டது. ஜடேஜா வீசிய 14ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    16ஆவது ஓவரில் லக்னோவிற்கு 9 ரன்கள் கிடைத்தது. 17வது ஓவரை நூர் வீசினார். இந்த ஓவரில் லக்னோ 3 ரன்கள் மட்டுமே அடித்தது. 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தையும், 3ஆவதை பந்தையும் சிக்கருக்கு தூக்கினார். அத்துடன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 18 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 139 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் 2 சிக்சருடன் 16 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை பதிரனா வீசினார். 2ஆவது பந்தை பதிரானா வைடாக வீசினார். இதில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது அப்துல் சமாத் ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். பண்ட் 49 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது.

    சிஎஸ்கே அணி சார்பில் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கலீல் அகமது மற்றும் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மார்கிராம் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.
    • பூரன் 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே முதன்முறையாக பவர்பிளேயில் 50 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

    • புள்ளிகள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான்.

    இம்பேக்ட் பிளேயர் ஆப்சன்:- ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ரச்சின் ரவீந்திரா, ஷெய்க் ரஷீத், ராகுல் திரிபாதி, ஜடேஜா, விஜய் சங்கர், ஓவர்டன், எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.

    இம்பேக்ட் பிளேயர் ஆப்சன்:- ஷிவம் துபே, நகர்கோட்டி, சாம் கர்ரன், தீபக் ஹூடா, ராமகிருஷ்ணா கோஷ்.

    • என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது.
    • பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று களமிறங்கி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

    கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது என டெல்லி அணி வீரர் கருண் நாயர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது.

    மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது. நான் நன்றாக ஆடினேன். ஆனால், என்னுடைய அணி தோற்றுவிட்ட பிறகு, எனது இன்னிங்ஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை.

    என கருண் நாயர் கூறினார்.

    • லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார்.
    • லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

    இந்நிலையில் லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக அணியுடன் இடம்பெறவில்லை. அவர் பெங்களுருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மயங்க் நாளை லக்னோ அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    இவர் அணியின் இடம்பெற்றால், ஆவேஸ் கான் நீக்கப்படலாம்.  

    • இந்த போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
    • தீபக் சாஹர், போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கருண் நாயர் அதிரடியாக விளையாடினார்.

    டெல்லி:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர். ரோகித் சர்மா இதையெல்லாம் ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார்
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் 303 ரன்கள் குவித்தார்.

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய கருண் நாயரின் பழைய எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    அந்த பதிவில், "டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கமுடியுமா?" என்று பதிவிட்டிருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் குவித்த கருண் நாயருக்கு அதற்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதன்பின்பு உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் மீண்டும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

    • சி.எஸ்.கே. அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் சி.எஸ்.கே. அணி உள்ளது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்) , கொல்கத்தா (8 விக்கெட்) என தொடர்ச்சியாக தோற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே அணி 2-வது வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.

    சி.எஸ்.கே. கேப்டனாக பணியாற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எஞ்சிய போட்டிகளில் சி.எஸ்.கே. அணியில் இணைந்து கொள்வார். வருகிற 20-ந் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. 

    ஆயுஷ் மத்ரே ஏற்கனவே தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 17 வயதான இவர் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்

    இதன்மூலம் பிரித்விஷாவின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத அவர் ருதுராஜூக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பும்ரா பந்துவீச்சில் கருண் நாயர் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசினார்
    • ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார்.

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார்.

    ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார். இதனையொட்டி டைம் அவுட் நேரத்தில் கருண் நாயரிடம் பும்ரா வாங்கிக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் கருண் நாயர் பேசினார்.

    இந்த வாக்குவாதத்திற்கு நடுவே ரோகித் மைதானத்தில் சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.
    • மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இதன்மூலம் ஐபிஎல்-ல் இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு போட்டியில் கூட தோற்றதே இல்லை என்ற சாதனையை மும்பை அணி தக்க வைத்துள்ளது.

    மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
    • சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது. சொந்த மண்ணில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் இறங்குகிறது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (4 அரைசதத்துடன் 349 ரன்கள்) சூப்பர் பார்மில் இருக்கிறார். மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ஆயுஷ் பதோனியும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். இதுவரை 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் அடுத்தடுத்து தோற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி இதுவரை 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மெச்சும் வகையில் இல்லை.

    முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி தொடரில் இருந்து விலகினார். கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்னில் முடங்கியது. ஷிவம் துபே (31 ரன்), விஜய் சங்கர் (29 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சி 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். இதனால் சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் லக்னோ அணி தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் வலுவான லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், ஒரு ஆட்டத்தில் சென்னையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அல்லது ஹிமாத் சிங், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி.

    சென்னை: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×