என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: முதன்முறையாக பவர்பிளேயில் அசத்திய சிஎஸ்கே
- மார்கிராம் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.
- பூரன் 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே முதன்முறையாக பவர்பிளேயில் 50 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.






