என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை சங்ககாரா தொடங்கினார்.
    • சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககாரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

    ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது. .

    தற்போது குமார் சங்ககாரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.

    அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
    • சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. 

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

    அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ராவல்பிண்டி:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 45.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 212 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றி அசத்தியது. பகர் சமான், ரிஸ்வான் அரை சதம் கடந்தனர்.

    ஆட்ட நாயகன் விருது வாசிம் ஜூனியருக்கும், தொடர் நாயகன் விருது ஹரிஸ் ராப்புக்கும் வழங்கப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இதில் இந்தியா அணி எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025 - 2027) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில் 100 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி (66.67 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி (66.67 சதவீதம்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த இந்திய அணி (54.17 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 'ஏ' 132 ரன்னில் சுருண்டது.
    • இந்தியா 'ஏ' தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கிடையில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 'ஏ' 132 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் ரிவால்டோ மூன்சாமி அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்தார். இந்தியா 'ஏ' அணி சார்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 'ஏ' அணி களம் இறங்கியது. அபிஷேக் சர்மா 22 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் அடிக்க இந்தியா 'ஏ' 27.5 ஓவரிலேயே 135 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    • நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான்.
    • நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். இந்தியா முதல் இன்னிங்சில் அடித்த 189 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    முதல் நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதமாக இருந்தது. அதிக அளவில் டர்ன் ஆனது. பந்து பிட்ச் ஆன சில பகுதிகளில் பள்ளம் ஏற்படுவபோன்று, மேற்பகுதி சேதமாகியது. இதனால் மோசமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் கவுதம் கம்பீர் ஆடுகளம் குறித்து கூறுகையில் "ஆடுகளம் அவ்வளவு மோசமான வகையில் சேதமடையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான். நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார். நாங்கள் என்ன விரும்பினோமோ, அது கிடைத்தது. நன்றாக விளையாடாதபோது, இதுதான் நடக்கும்" என்றார்.

    • நியூசிலாந்து முதலில் விளையாடி 269 ரன்கள் விளாசியது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியால் 262 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் (119) 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கான்வே 49 ரன்களும், பிரேஸ்வெல் 35 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜான் கேம்பல் 4 ரன்களிலும், அதானஸ் 29 ரன்களும், அடுத்து வந்த கீசி கார்ட்டி 32 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    ரூதர்போர்டு 55 ரன்கள் விளாசினார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிரீவ்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்டு அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி 2 ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 49ஆவது ஓவரில் 12 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் டஃபி வீசிய அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. கிரீவ்ஸ் 24 பந்தில் 38 ரன்கள் எடுத்தும், ஷெஃபர்டு 19 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    சதம் விளாசிய டேரில் மிட்செல் ஆட்ட நாயகன் விருது வென்றார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 2ஆவது போட்டி நேப்பியரில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    • 1997-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிட்ஜ்டவுனில் 120 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.
    • 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 147 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    இந்தியாவால் 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. குறைந்த இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியடைந்த 2ஆவது போட்டி இதுவாகும்.

    1997-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிட்ஜ்டவுனில் 120 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    தற்போது 124 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    2024-ல் நியூசிலாந்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 147 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    2015-ல் காலேயில் இலங்கைக்கு எதிராக 176 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    குறைந்த பட்ச இலக்கை நிர்ணயித்து அதற்குள் எதிரணியை ஆல்அவுட் ஆக்கியதில் தென்ஆப்பிரிக்காவின் 2ஆவது வெற்றி இதுவாகும்

    1994-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு 117 இலக்கு நிர்ணயித்து, அதற்குள் அந்த அணியை சுருட்டி வெற்றி பெற்றது.

    1997-ல் பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் 146 இலக்கு நிர்ணயித்து அதற்குள் பாகிஸ்தானை சுருட்டியது.

    2000-த்தில் இலங்கைக்கு எதிராக கண்டியில் 177 இலக்கை நிர்ணயித்து அதற்குள் இலங்கை அணியை சுருட்டியது.

    இந்தியாவில் மிகக் குறைந்த இலக்கு நிர்ணயித்து வெற்றி பெற்ற அணிகள் விவரம்

    2004-ல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு 107 இலக்கு நிர்ணயித்தது. இதை எட்ட முடியாமல் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

    தற்போது இந்தியா 124 இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    2024-ல் வான்கடேயில் இந்தியாவுக்கு 147 இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து. அதை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    1996-ல் அகமதாபாத்தில் இந்தியா தென்ஆப்பிரிக்காவுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதை எட்ட முடியாமல் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது. 

    • இந்தியாவின் வெற்றிக்கு 123 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா.
    • இந்திய அணியால் 93 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினர். 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா மட்டும் அரைசதம் அடித்தார்.

    முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 159 ரன்னில் சுருண்டது. இந்தியா 189 ரன்கள் சேர்த்தது. 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா 124 இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்தியாவை கடந்த 15 வருடத்திற்கு பின் வீழ்த்தியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 8 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்கள் சேர்த்தது.
    • இந்தியா 93 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    30 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 29 ரன்களுடனும், போஸ்ச் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது.

    பவுமா- போஸ்ச் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. போஸ்ச் 25 ரன்கள் அடித்தார். பவுமா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஒட்டுமொத்தமாக இந்தியாவைவிட 123 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். ஜுரல் 13 ரன்னிலும், பண்ட் 2 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் குல்தீப் யாதவ் 1 ரன்னிலும், சிராஜ் ரன்ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 2ஆவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2ஆவது இன்னிங்சில் ஹார்மர் 4 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சுப்மன் கில் 2ஆவது இன்னிங்சில் களம் இறங்கவில்லை.

    ×