என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சாம் கரணை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர்.
    • அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார்

    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரண் தனது நீண்ட நாள் காதலி இசபெல்லா கிரேஸிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்தார். இசபெல்லாவும் இதனை ஏற்றுக்கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

    ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சாம் கரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் விளையாடிய காலத்தில் அவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் டிரேட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்கியுள்ளது.

    இதனால் அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.

    இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.

    இரு நாட்களுக்குள் ஆஷஸ் போட்டி முடிவுக்கு வருவது வரலாற்றில் இது 6-வது முறை மட்டுமே. 1888-ல் 3 முறை, 1890, 1921 ஆண்டுகளில் தலா ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக ஸ்டெப்ஸ் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் -ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். மார்க்ரம் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் ரிக்கல்டன் 35 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கேப்டன் பவுமா- ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் குவித்துள்ளது.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதன்படி பவுமா 41 ரன்னிலும் ஸ்டெப்ஸ் 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முல்டர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி சோர்ஸி 28 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
    • டெல்லி அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2024-ம் ஆண்டுக்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றன. இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஏலம் நடக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகிய நிலையில் மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த லானிங்கை ஏலத்திற்கு முன்பு கழற்றி விட்டது. அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லயன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கிராலி டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு டக்கெட் மற்றும் போப் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

    டக்கெட் 28 ரன்னிலும் போப் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்படி ரூட் 8, ஹரி ப்ரூக் 0, ஸ்டோக்ஸ் 2, ஸ்மித் 15 என வெளியேறினர்.

    இதனையடுத்து அட்கின்சன் - கார்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. கார்ஸ் 20 ரன்னிலும் அட்கின்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் ஜேக் வெதரால்ட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹெட்டுடன் லெபுசென் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் அவர் 83 பந்தில் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    • ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.
    • ஸ்மிருதி மந்தனா நாளை (23-ந்தேதி) தனது காதலனை கரம் பிடிக்கிறார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.

    மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

    நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் வட இந்திய பாரம்பரியமான திருமணத்துக்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சி நேற்று மாலை ஸ்மிருதி மந்தனாவின் வீட்டில் நடைபெற்றது.

    இதில் சக வீராங்கனைகள் ரிச்சா கோஷ் , ஷ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங் , ஷிவாலி ஷிண்டே ,ஷபாலி வர்மா, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் மணப்பெண் தோழிகள் போல உடையணிந்துள்ள புகைப்படங்களை ஜெமிமா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

    • மார்க்ரம் 38 ரன்களிலும் ரிக்கல்டன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
    • இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் -ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். மார்க்ரம் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் ரிக்கல்டன் 35 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கேப்டன் பவுமா- ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பண்ட் செயல்படுகிறார்.

    கவுகாத்தி:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    2008 -2014 ஆண்டுகளில் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். 2022-ல் கே.எல்.ராகுல் 3 போட்டிகளை வழிநடத்தினாலும், அவற்றிலும் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அட்கின்சன் - கார்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லயன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கிராலி டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு டக்கெட் மற்றும் போப் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

    டக்கெட் 28 ரன்னிலும் போப் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்படி ரூட் 8, ஹரி ப்ரூக் 0, ஸ்டோக்ஸ் 2, ஸ்மித் 15 என வெளியேறினர்.

    இதனையடுத்து அட்கின்சன் - கார்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. கார்ஸ் 20 ரன்னிலும் அட்கின்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது.
    • அவருக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை விட்டுக்கொடுத்தது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

    மேலும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கேவில் தோனியுடன் நேரம் செலவிடப் போவதை யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    மேலும் "தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன். யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எனவும் கூறினார்.

    • அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.

    இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் அணிகள் விவரம் வெளியாகியுள்ளது. தரவரிசை அடிப்படையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்று உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    இரு அணிகளும் ஆசிய கோப்பை போட்டியில் சமீபத்தில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது, பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

    தற்போது இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பையில் மீண்டும் மோத உள்ளன. அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.

    நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்னதாக அமெரிக்கா, நமீபியா அணிகளுடன் இந்தியா விளையாடும். இறுதி 'லீக்' ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கும்.

    இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் உள்ளன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்புக்கு மாற்றப்படும். மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அரைஇறுதி நடைபெறலாம். போட்டி குறித்த அட்டவணை விவரம் வருகிற 25-ந்தேதி மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன்.
    • இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இன்று (நேற்று) காலை எழுந்ததும், ஆஷஸ் போட்டியை டி.வி.யில் பார்த்தோம். இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

    விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன். தற்போது நாங்கள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இது 1-1 அல்லது 2-0 என்று முடியவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். சமனுக்கு பதிலாக தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பு உருவாகும்' என்றார்.

    ×