என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல்- SA முதல் நாள் உணவு இடைவேளை வரை 156/2
- மார்க்ரம் 38 ரன்களிலும் ரிக்கல்டன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் -ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். மார்க்ரம் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் ரிக்கல்டன் 35 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து கேப்டன் பவுமா- ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.






