என் மலர்
விளையாட்டு
- கஜகஸ்தான் வீராங்கனையை ரஷிய வீராங்கனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரிபாகினா 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.
இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.
இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரிபாகினாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 3-வது சுற்றை எட்டினார்.
- வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் அடிலெய்டுவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டும், ரோச், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 35.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 6.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது நாளில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 82 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து. 34 ரன்கள் வரை அடுத்த விக்கெட்டை இழக்காமல் விளையாடிய அந்த அணி 35 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா- குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 33 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 10.5 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 88 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார்.
- விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.
ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான டி திலீப் ஆப்கானிஸ்தான் தொடருக்கான சிறந்த இந்திய பீல்டரை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் பார்த்தோமென்றால் 2 பேர் தொடர்ந்து சீரான பீல்டிங்கை செய்து வந்துள்ளனர். அதில் ஒருவர் ரிங்கு சிங், மற்றொரு வீரர் விராட் கோலி.
உலகக்கோப்பை தொடரின் 2 முறை சிறந்த பீல்டருக்கான விருதை விராட் கோலி வென்றார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ய வேண்டாம் என்று ஷார்ட் லெக் மற்றும் பைன் லெக் திசையில் பீல்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
உலகக்கோப்பையில் சிறந்த பீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார். பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.
என்று அவர் கூறினார்.
- ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார்.
- இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதல் நடந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும் 2-வது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார்.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
- கடைசி போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
பெங்களூர்:
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டம் இருமுறை சூப்பர் ஓவர் சென்றது. இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
இந்த போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகினார்.அவர் டி20 போட்டிகளில் முதன்முறையாக டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து இருந்தால் அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 12000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டி இருப்பார்.
டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அளவில் சர்வதேச போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன முழு நேர பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இதுவரை சச்சின் 34 டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்தார். அதை முறியடித்த கோலி 35 டக் அவுட்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டக் அவுட் ஆன அனைத்து இந்திய வீரர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜாகிர் கான் 44, இஷாந்த் சர்மா 40, ஹர்பஜன் சிங் 37, அனில் கும்ப்ளே 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து தற்போது விராட் கோலி 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்.
- ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.
- இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் ஜடேஜாவை பின் தொடர்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். இதை தனது ஸ்டோரியில் வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஸ்டோரியில் ஒரே அணியா செயல்பட்டால் கனவை நிறைவேற்றலாம். 7.8 மில்லியன் எங்க ஜெர்சி நம்பரை போலவே என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. வெற்றியை தேடி தந்த ஜடேஜாவை தூக்கி டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் கோப்பையை எம்எஸ் டோனிக்கு அர்பணிப்பதாக ஜடேஜா போட்டி முடிந்தவுடன் பேட்டியளித்தார்.

இருவரும் இந்திய அணியில் இருந்து சிஎஸ்கே வரை மிகவும் நட்பாக இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இருவரும் சில சில சேட்டைகளில் ஈடுப்பட்டு வந்தது சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

மேலும் இந்த தொடருக்கு முன்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
- 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்
மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).
குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.
தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.
2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.
2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.
இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
திருமணம் கடினமானது.
விவாகரத்து கடினமானது.
உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.
கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
- அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.
கர்நாடகாவில் ஒரு உலகம்- ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இந்த போட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
இதில் சச்சின் டெண்டுல்கர்- யுவராஜ் சிங் தலைமையில் 2 அணிகள் களமிறங்கினர். ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய போட்டி என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 (41) ரன்கள் எடுத்தார். இறுதியில் யூசுப் தான் அதிரடியாக 38 (24) ரன்களும் கேப்டன் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (10) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். ஒரு உலகம் சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஒரு உலகம் அணியில் நமன் ஓஜா 25 ரன்களில் வாஸ் வேகத்திலும் சச்சின் டெண்டுல்கர் 27 ரன்கள் ரன்களில் முத்தையா முரளிதரன் சுழலிலும் அவுட்டானார்கள். அடுத்த வந்த அல்வீரோ பீட்டர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மறுமுனையில் உப்புள் தரங்கா 29, சுப்பிரமணியம் பத்ரிநாத் 4, ஹர்பஜன் 4 ரன்களில் அவுட்டானார்கள்.
தொடர்ந்து அசத்திய அல்விரோ பீட்டர்சனும் 74 (50) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய சகோதரர் யூசுப் பதான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த இர்பான் பதான் போட்டியை முடித்து வைத்தார். இதன்மூலம் சச்சின் தலைமையிலான அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
- சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார். இதனையடுத்து நடந்த 3 செட்டையும் சீன வீரர் அதிரடியாக வீழ்த்தினார். சுமித் நாகல் 2-6, 6-3, 7-5, 6-4 என தோல்வியடைந்தார். இந்த போட்டி இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் நடந்தது.
ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
- தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
சென்னை:
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2018-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது.
கடைசியாக 2022-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தப் போட்டி நடைபெற்றது.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் இந்தப்போட்டி நடைபெற உள்ளது.
ஸ்குவாஷ் போட்டி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ளது.
சென்னையில் நேரு ஸ்டேடியம், நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலைக்கழக மைதானம், நேரு பார்க், மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ரேஞ்ச், எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ், நீச்சல் ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் 20 விளையாட்டுகள் நடக்கிறது. கோகோ, கூடைப்பந்து உள்ளிட்ட 6 விளையாட்டுகள் திருச்சி, மதுரை, கோவையில் உள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) முழு வீச்சில் செய்து வருகிறது. தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சிகள் 1½ மணி நேரம் வரை நடைபெறும். கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.
- 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.
புளோயம்பாண்டீன்:
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2022-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடைபெற்றது.
இதுவரை 14 போட்டிகள் நடந்துள்ளது. இந்தியா அதிகபட்சமாக 5 தடவையும், ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென்ஆப்பி ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.
15-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. அமெரிக்கா, வங்காளதேசம், அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. நாளைய தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா-அயர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் ('பி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.






