search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலியை பார்த்து கத்துக்கோங்க - இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர் அட்வைஸ்
    X

    விராட் கோலியை பார்த்து கத்துக்கோங்க - இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர் அட்வைஸ்

    • பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார்.
    • விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.

    ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான டி திலீப் ஆப்கானிஸ்தான் தொடருக்கான சிறந்த இந்திய பீல்டரை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் பார்த்தோமென்றால் 2 பேர் தொடர்ந்து சீரான பீல்டிங்கை செய்து வந்துள்ளனர். அதில் ஒருவர் ரிங்கு சிங், மற்றொரு வீரர் விராட் கோலி.

    உலகக்கோப்பை தொடரின் 2 முறை சிறந்த பீல்டருக்கான விருதை விராட் கோலி வென்றார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ய வேண்டாம் என்று ஷார்ட் லெக் மற்றும் பைன் லெக் திசையில் பீல்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

    உலகக்கோப்பையில் சிறந்த பீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார். பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×