search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி
    X

    டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
    • கடைசி போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார்.

    பெங்களூர்:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டம் இருமுறை சூப்பர் ஓவர் சென்றது. இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

    இந்த போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகினார்.அவர் டி20 போட்டிகளில் முதன்முறையாக டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து இருந்தால் அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 12000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டி இருப்பார்.

    டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அளவில் சர்வதேச போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன முழு நேர பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இதுவரை சச்சின் 34 டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்தார். அதை முறியடித்த கோலி 35 டக் அவுட்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டக் அவுட் ஆன அனைத்து இந்திய வீரர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜாகிர் கான் 44, இஷாந்த் சர்மா 40, ஹர்பஜன் சிங் 37, அனில் கும்ப்ளே 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து தற்போது விராட் கோலி 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்.

    Next Story
    ×