என் மலர்
விளையாட்டு
- 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.
புளோயம்பாண்டீன்:
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2022-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடைபெற்றது.
இதுவரை 14 போட்டிகள் நடந்துள்ளது. இந்தியா அதிகபட்சமாக 5 தடவையும், ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென்ஆப்பி ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.
15-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. அமெரிக்கா, வங்காளதேசம், அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. நாளைய தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா-அயர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் ('பி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வென்றார்.
- ஜோகோவிச், காஸ்பர் ரூட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்லோவோக்கியா வீரர் லூகாசுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை லூகாஸ் 6-3, 6-4 என கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4-வது 7-6 (7-5) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் ஸ்வரேவ் 7-6 (10-7) என போராடி வென்றார்.
இறுதியில் ஸ்வரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டி சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.

மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை ரூட் கைப்பற்றினார். இறுதியில் ரூட் 6-3, 6-7, 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்றார்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று அடிலெய்டுவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அதன்பின், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்தது ஆடியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 30 ரன்னிலும், க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கவாஜா 45 ரன்னில் அவுட்டானார். க்ரீன் 14 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். அவர் 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டும், ரோச், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
- நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, பிரன்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மெல்போர்ன்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி 37 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீரர் டாமஸ் மசாக் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாயோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), செபாஸ்டியன் பயஸ் (அர்ஜென்டினா), கரன் கச்சனோவ் (ரஷியா), தாமஸ் மார்ட்டின் எட்ச்வெர்ரி (அர்ஜென்டினா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 0-6, 2-6 என்ற நேர்செட்டில் 16 வயது ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதேபோல் முன்னாள் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட வீராங்கனையான மரியா டிமோபீவாவிடமும் (ரஷியா), 8-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் எலினா அவனிஷியானிடமும் வீழ்ந்தனர்.
மற்ற ஆட்டங்களில் ஹாடட் மையா (பிரேசில்), ஸ்டாம் ஹூன்டெர் (ஆஸ்திரேலியா), அலிசியா பார்க்ஸ் (அமெரிக்கா), பார்பரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), லிசி சுரென்கோ (உக்ரைன்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), டியானி பேரி (பிரான்ஸ்), அனஸ்டாசியா ஜகாரோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.
- சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
- 3-வது டி20 போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் டோனி சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.
பெங்களூரு:
சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி இருந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் (72 ஆட்டம்) வெற்றி பெற்றிருந்தது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் முதல் சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமனில் முடிந்ததால் 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
பெங்களூரு:
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. பவர் பிளேயில் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
5வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களைக் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்னும், ரிங்கு சிங் 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி ஆடியது. முதல் 3 வீரர்களும் அரை சதம் கடந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 1 ஓவரில் 15 ரன்கள் எடுத்ததால் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது.
இதனால், வெற்றியை தீர்மானிக்க 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனவே ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது ஷிவம் துபேவுக்கும் அளிக்கப்பட்டது.
2-வது சூப்பர் ஓவர் வரை வீசி கடைசி கட்டம் வரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கு கடும் சவால் அளித்த ஆப்கானிஸ்தான் அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச போட்டிகளில் 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது. ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரோகித் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் யாதவ், மேக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்த போது ரோகித் மேலும் ஒரு சாதனையை படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் (1572 ரன்கள்) பிடித்தியுள்ளார். விராட் கோலி கேப்டனாக 1570 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
- ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரோகித் - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய ரோகித் 41 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ரோகித் சதமும் ரிங்கு சிங் அரை சதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
- இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
முதல் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் பேடில் பட்டு 2 பவுண்டரி கிடைத்தது. இது நடுவரால் லெக் பைய்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால் முதல் ஓவர் முடியும் வரை ரோகித் 0 ரன்னில் இருந்தார். இதனையடுத்து 2-வது ஓவர் ஓமர்சாய் வீசினார். உடனே லெக் அம்பயராக இருந்த வீரேந்தர் சர்மாவிடம் இது குறித்து நக்கலாக ரோகித் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.
அதில் ஏய் வீரேந்தர் முதல் பந்தை லெக் பைசாக கொடுத்தாயா? அந்த பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளேன் என சிரித்தப்படி கூறினார். நடுவரும் அதற்கு சிரித்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் தொடங்கியது.
- இதில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெங்களூரு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
- டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
- இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.






