search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Under-19 Cricket"

    • 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

    புளோயம்பாண்டீன்:

    19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2022-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடைபெற்றது.

    இதுவரை 14 போட்டிகள் நடந்துள்ளது. இந்தியா அதிகபட்சமாக 5 தடவையும், ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென்ஆப்பி ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    15-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. அமெரிக்கா, வங்காளதேசம், அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. நாளைய தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா-அயர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் ('பி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

    ×