என் மலர்
விளையாட்டு
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 4 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
கிறிஸ்ட்சர்ச்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் சவுத்தி, மேட் ஹென்ரி, பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவடில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக இப்திகார் அகமதுவும், தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் பின் ஆலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று நேற்று நடந்தது.
- இதில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இகா ஸ்வியாடெக் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட லிண்டா நோஸ்கோவா அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடினார்..
இறுதியில், லிண்டா நோஸ்கோவா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறினார்.
- இந்தியா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
- இதில் மலேசியா ஜோடியை வென்று இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்துவருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசிய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்தனர்.
- சௌமி பாண்டே நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா- வங்காளதேசம் அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என நோக்கத்துடன் களம் இறங்கின.
டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடங்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் கிங் ஒரு பக்கம் சிறப்பாக விளையாட மறுபக்கம் அர்ஷின் குல்கர்னி (7), முஷீர் கான் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு ஆதர்ஷ் சிங் உடன் கேப்டன் உதய் சஹாரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் அரைசதங்களால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 5 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 167 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சௌமி பாண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா 25-ந்தேதி அயர்லாந்தையும், 28-ந்தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.
- தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- ரெயில்வேஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட போட்டியான இதில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. கோவை எஸ்.ஆன்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான ஜெகதீசன் முதல்நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 155 ரன்களுடனும், முகமது அலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முகமது அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
சாய் கிஷோர் ஆட்டமிழந்த பிறகு எம். முகமது 20 ரன்னிலும், அஜித் ராம் 17 ரன்னிலும், வாரியார் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜெகதீசன் 245 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ரெயில்வேஸ் அணி களம் இறங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தமிழ்நாடு அணி 363 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ்நாடு அணி 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. திரிபுராவுக்கு எதிரான 2-வது போட்டி டிராவில் முடிந்தது.
- தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன்-பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் ஒரு ரசிகை பீர் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன்-பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதிபடி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணி 16.5 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் போது ஒரு ரசிகை பீர் அருந்துவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு கிளாஸ் பீரை ஒரு மடக்கில் குடிப்பதை காண முடிந்தது.
சாதரணமாக போட்டியை ரசித்துக் கொண்டிருந்த அந்த பெண், அவரை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் தெரிவதை கண்டு முதலில் கையில் இருந்த குளிர்பானத்தை குடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த பெண் திரையில் காண்பிக்கப்பட்டதும் பக்கத்தில் முதியவரிடம் இருந்து மறுபடியும் ஒரு கிளாஸ் பீரை குடித்து சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இதற்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
- 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது
இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்
2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி
ஜோ ரூட்
2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி
சுனில் கவாஸ்கர்
2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி
அலஸ்டர் குக்
2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி
விராட் கோலி
1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி
கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.
- 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- ஒரு ரன்னை எடுக்க சென்ற ரிஸ்வான் பேட்டை தவற விட்டு கை விரல்களால் கீரிஸ் கோட்டை தொட்டார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது.
முன்னதாக இத்தொடரின் 3-வது போட்டியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறி கையிலிருந்த பேட்டை தவற விட்டு பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். இதனால் எதிர்ப்புறம் இருந்த கிரீஸ் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட 2 ரன்களை எடுத்தார். கை விரல்களால் கீரிஸ் கோட்டை ரிஸ்வான் தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அதை பார்த்த இந்திய வீரர் ஷிகர் தவான் "கபடி கபடி கபடி" என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு ரிஸ்வானை கலாய்த்துள்ளார். இந்த பார்த்த ரசிகர்களும் அவர்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.
- இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.
இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.
என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
- டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.
- இந்த தம்பதியருக்கு இஷான் என்ற 5 வயது மகன் உள்ளார்.
பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை மணந்தார் சோயிப் மாலிக்
லாகூர்:
ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.
இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.
இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Alhamdullilah ♥️"And We created you in pairs" وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا pic.twitter.com/nPzKYYvTcV
— Shoaib Malik ?? (@realshoaibmalik) January 20, 2024
- ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
புதுடெல்லி:
ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்-எட்வர்ட் வின்டர் ஜோடியுடன் மோதியது.
இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.






