என் மலர்
விளையாட்டு
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இதில் முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே டபிலோ அதிரடியாக ஆடினார். இதனால் டபிலோ 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 5, 6, 7-வது இடங்களில் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.
- சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
- அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ஆனார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொரில் ஹோம் கிரவுண்டில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
மேலும், இந்த போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதே போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து பிராவோ 44 விக்கெட்டுகளையும், மார்கெல் 36 விக்கெட்டுகளையும், ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், பொலிஞ்சர் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
- கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை குவித்தார்.
- பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.
டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார்.
இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
- தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.
- சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.
- கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சி.எஸ்.கே. அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணி.
ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். தொடரில் ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 52 வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஆவது வெற்றியை பெற்றுள்ளது.
சேப்பாக்கத்தில் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
- டேரில் மிட்செல் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 22 ரன்களையும், மொயின் அலி 10 ரன்களையும், ஷிவம் தூபே 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 42 ரன்களை குவித்தார்.
ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துகிறார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அடுத்த மூன்று அணிகள் எவை என்பதை நிர்ணயிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை ரிங்கு சிங் புகழ்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி, தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் பகிர்ந்துள்ளார்.
அதில் 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை அவர் புகழ்ந்துள்ளார்.
- போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
- சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
?? Requesting the Superfans to Stay back after the game! ??
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
Something special coming your way! ??#CSKvRR #YellorukkumThanks ?? pic.twitter.com/an16toRGvp






