என் மலர்
விளையாட்டு
- விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.
ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவரில் 76 ரன்கள் விளாசியது.
10 ஒவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
சுழற்பந்து வீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கிய அடிக்க முயன்ற சூர்யகுமார் கேட்ச் ஆகி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஷிவம் டுபே களம் இறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது.
13-வது ஓவரின் 2-வது பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரிஷப் பண்ட் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் டுபே ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 4வது சுற்று முடிந்து காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினியுடன் மோதினார்.
இதில் ரிபாகினா முதல் செட்டை 1-6 என இழந்தார். அடுத்த செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 4-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி இத்தாலி வீராங்கனை பாவ்லினி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.
அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.
கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தார்.
- எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அண்மையில் ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தது உலக அளவில் பேசுபொருளானது.
இது தொடர்பாக எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ரொனால்டோ பதிவிட்ட கமெண்ட், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கமெண்ட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
அந்த கமெண்டிற்கு 38 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதியில் வென்றது.
பாரீஸ்:
கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-பெல்ஜியத்தின் சாண்டர் ஜில்-ஜோரன் லீகன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி ஜோடியை எதிர்கொள்கிறது.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதின.
- 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை சந்திக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி விவரம் வருமாறு:
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஐபிஎல் தொடங்கிய காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
- தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் தனது திறமையான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்.
இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸின் உயர் செயல்திறன் மையத்தின் (Chennai Super Kings High Performance Centre) பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அகாடமிகளை கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். அவரின் வருகை உயர் செயல்திறன் மையத்திற்கும், எங்களுடைய அகாடமிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பூஸ்ட்-ஆக அமையும்" என்றார்.
அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடைபெறுகிறது. அப்போது அஸ்வினை மீண்டும் ஏலம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆக்சனில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.
டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக டோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நாங்கள், அவருடைய ரசிகர்கள் அவர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இறுதியான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிப்போம்" என்றார்.
- விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன்.
- இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும். அமெரிக்க ரசிகர்களுக்கு இது சூப்பர் பவுல் (Super Bowl) போன்று இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாகித் அப்ரிடி கூறுகையில் "முதன்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் சூப்பர் பவுல் போன்றதாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும்.
நான் எப்போதுமே இந்தியாவில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்புவேன். விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன். நான் இதுபேன்ற போட்டிகளில் விளையாடும்போது நான் ஏராளமான அன்பை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன். இரண்டு பக்க வீரர்களும் அதுபோன்று பரஸ்பர அன்பை பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம். இரண்டு அணிகளும் அதிக திறமைகளை கொண்டதுதான். அன்றைய நாளில் வீரர்கள் ஒன்றிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியம். இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றும் தொடர் முழுவதும் இது தேவை. நெருக்கடியை கையாளும் அணி முதல் இடத்தை பிடிக்க முடியும்.
இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேசிய கால்பந்து லீக் தொடர் பிரபலம். இதன் இறுதிப் போட்டியை சூப்பர் பவுல் என அழைப்பாளர்கள். கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி இங்குள்ள மியாமி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 15-21, 21-15, 14-21 என தோல்வியை சந்தித்தார்.
- வென்-சிக்கு எதிராக முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து சீன தைபே வீராங்கனை வென்-சியை எதிர்கொண்டார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து சீன தைபே வீராங்கனை ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
முதல் கேம்-ஐ 15-21 என இழந்தார். ஆனால் 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி கேம்-ல் பிவி சிந்து 14-21 என தோல்வியடைந்தார். இதனால் 1-2 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
வென்-சிக்கு எதிராக முதன்முறையாக பிவி சிந்து தோல்வியை சந்தித்துள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான ரூட்டாபர்னா பண்டா- ஸ்வேதாபர்னா பண்டா கொரிய ஜோடியிடம் 12-21, 9-21 எனத்தோல்வியை சந்தித்தது.
- இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை.
- இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்று அயர்லாந்து அணி வீரர் ரோஸ் அடேர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளோம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்.
அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்.
என்று கூறினார்.
- 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
- முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.
முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.
அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
- பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
- இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.






