என் மலர்
விளையாட்டு
- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது.
- சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஆபகானிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆடும் லெவனில் அதிரடி ஆட்டக்காரர் கிளாசன் இடம் பெறவில்லை.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி அதன் பிறகு வென்றதில்லை.
சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மும்பை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மாவுக்கு யுஸ்வேந்திர சாஹல் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரூ. 60 கோடி வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
2025-ம் ஆண்டு நிலவரப்படி தனஸ்ரீ வர்மாவின் நிகர மதிப்பு 24 கோடி. அவர் தனது பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் நல்ல சம்பளம் பெறுகிறார். 6.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சாஹலின் நிகர சொத்து மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து கேப்டனாக ரோகித் சர்மா 100-வது வெற்றியை பெற்றார்.
- ஒருநாள் போட்டியில் 38 வெற்றியும், 20 ஓவர் போட்டியில் 50 வெற்றியும் கிடைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதன்படி வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை ரோகித் கடந்தார்.
அவர் இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் 261 இன்னிங்சில் பேட்டிங் செய்து 32 சதம் உள்பட 11,029 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய உலக அரங்கில் 10-வது வீரர், இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்து 4-வது வீரர் ஆவார்.
அத்துடன் விராட் கோலிக்கு (222 இன்னிங்ஸ்) அடுத்து இந்த ஸ்கோரை அதிவேகமாக எட்டிப்பிடித்த வீரர் என்ற சாதனையாளர் பட்டியலிலும் இணைந்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து கேப்டனாக ரோகித் சர்மா 100-வது வெற்றியை பெற்றார். முகமது அசாருதீன், டோனி, விராட் கோலிக்கு பிறகு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளைப் பெற்ற 4-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார்.
அவர் தலைமையில் டெஸ்டில் 12 வெற்றியும், ஒருநாள் போட்டியில் 38 வெற்றியும், 20 ஓவர் போட்டியில் 50 வெற்றியும் கிடைத்துள்ளது.
- இந்தியா- ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடருடன் பேட் கம்மின்ஸ் எந்த தொடரில் விளையாடவில்லை.
- தற்போது காயம் சரியாகி உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதன்படி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ந் தேதி முடிகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்வில்லை. இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
கம்மின்ஸ் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் போட்டிகளை பயன்படுத்த உள்ளதாகவும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த செப்டம்பரில் நடந்த ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்தும் அவ்விரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்க அணி எழுச்சி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்றால் முதலில் இன்றைய ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டியது முக்கியமாகும். பந்துவீச்சில் ககிசோ ரபடா, யான்சென், கேஷவ் மகராஜ் மிரட்டினால் தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்கும்.
சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முகமது நபி, நங்கேயலியா கரோட், நூர் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சை தான் அதிகம் சார்ந்து இருக்கிறது. பேட்டிங்கில் குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போல் அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால், பரபரப்புக்கு குறைவிருக்காது.
- மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த இணை உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருக்கும் சாத்விக் சாய்ராஜ் இன்னும் அந்த விருதை பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக் கேல்ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தையும், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான காசி விஸ்வநாதன் (வயது 65) தனது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லி செல்வதற்காக ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் இருந்து ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு நேற்று காலை காரில் சென்றார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தகவல் அறிந்த சாத்விக் விமானம் மூலம் மாலை சொந்த ஊர் திரும்பினார். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.
- ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது.
- பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் உள்ள இந்தியா, வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியது.
துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் சதம் அடித்தார்.
வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
எந்தவொரு போட்டிக்கு முன்பும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேசிங்கின்போது வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே நாங்கள் இருந்திருக்கிறோம். எங்களது அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. இறுதிக்கட்டத்தில் சுப்மன் கில், கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினார்கள்.
முகமது சமியின் பந்துவீச்சு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அவரிடம் உள்ள தரம் பற்றி எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது. பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.
சுப்மன் கில்லின் தரத்தை நாங்கள் அறிவோம். அவர் சமீப காலமாக அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால்அவரது ஆட்டத்தை பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி வரை அவர் பேட்டிங் செய்ததை பார்க்க நன்றாக இருந்தது.
அக்சர் பட்டேலின் ஹாட்ரிக் வாய்ப்பின்போது கேட்சை தவறவிட்டு விட்டேன். இதனால் அக்சர் படேலை இரவு உணவுக்கு நான் அழைத்துச் செல்லலாம்.
அது எளிதான கேட்ச். என்னுடைய தரத்திற்கு அந்த கேட்சை நான் பிடித்திருக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இது போன்று நடக்கும்.
ஆடுகளம் அடுத்த போட்டிகளில் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு நான் மைதான பராமரிப்பாளர் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே மைதானத்தில் இந்திய அணி நாளை மறுநாள் (23-ந்தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஐசிசி தொடரில் (ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) முகமது ஷமி 19 இன்னிங்சில் மொத்தம் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்சில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்), ஜடேஜா (43 விக்கெட்) ஆகியோர் இருக்கின்றனர்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, எல்-சால்வடாரின் மார்சலோ-குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்களில் அசாருதீன் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவரும் தலா 156 கேட்ச் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (448ல் 218), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (375ல் 160) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் திடீரென விலகினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என பெலிக்ஸ் கைப்பற்றினார். அப்போது மெத்வதேவ் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெலிக்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.






