என் மலர்
விளையாட்டு
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.
ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 7-6 (10-8) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர் 4-6, 6-4, 6-3 என இத்தாலி வீரர் மேட்டியோ பிரேட்டேனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- பெங்களூரு தரப்பில் எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.
3-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்கியது.
இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களமிறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது.
இதில் ராக்வி பிஸ்ட் (1), கனிகா அகுஜா (3), ரிச்சா கோஷ் (28), ஜார்ஜியா வரேஹம் (6) ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரிஅரைசதம் அடித்து அசத்தினார். இவர் 81 ரன்களில் அவுட் ஆனார்.
இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.
- ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
- இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக விளையாடுகின்றன. இந்த முறை அணிகளிடையே 74 போட்டிகள் இந்தியா முழுக்க 13 நகரங்களில் நடைபெற இருக்கிறது.
ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில காலமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளன. அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐ.பி.எல். தொடருக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீலம் மற்றும் தங்க நிறங்களை கொண்டிருக்கும் புதிய ஜெர்சி அணிந்தபடி வீரர்கள் காட்சியளிக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருப்பதோடு, மும்பை அணியின் கொடி மற்றும் கிட் உள்ளிட்டவையும் காண்பிக்கப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கியவர்களில் டோனி டி சொர்சி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான ரியான் ரிக்கில்டன் மற்றும் கேப்டன் பவுமா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் பவுமா 58 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வேன் டெர் டூசென் 52 ரன்களை எடுத்தார்.
மறுப்பக்கம் ரிக்கில்டன் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடிய ஏய்டன் மார்க்ரம் 52 ரன்களை எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அசமதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.
- இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், லபுசேன், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜம்பா, நாதன் எல்லீஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித், ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த பேட்டர் ஸ்மித் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி:
பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
- மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது.
- ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
மும்பை விதர்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்கள் குவித்தது.
இதனால் விதர்பா 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. யாஷ் ரத்தோட்டின் சதத்தின் மூலம் (151) விதர்பா அணி 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சர்துல் தாகூர் - ஷம்ஸ் முலானி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்தார். 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனது. ஷம்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஷர்துல் 66 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மோஹித் அவஸ்தி- ராய்ஸ்டன் டயஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவஸ்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
- போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
- குஜராத் அணி 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
இதில் குஜராத்- கேரளா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி முதல் இன்னிங்சில் 457 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர்களான பஞ்சால்- ஆர்யா தேசாய் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்தது.
ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சால் 148 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பரபரப்பான கட்டத்தில் 446 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. இன்னும் 12 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்சில் கேரளா அணியை விட குஜராத் அணி முன்னிலை பெற்றுவிடும். அப்படி எடுத்து விட்டால் குஜராத் அணி வெற்றி பெற்று விடும். ரஞ்சி டிராபி போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் குவித்துள்ளார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
அந்த வகையில் கடைசி ஜோடி விளையாடியது. கடைசியாக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நாக்வஸ்வல்லா அதிரடியாக விளையாடுவார். அந்த பந்து சில்லி பாய்ண்டில் இருந்த கேரள வீரரின் ஹெல்மெட்டில் பட்டு சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த சச்சின் பேபி கையில் சிக்கியது.
கேரள வீரர்கள் அவுட் என தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பேட்டர்கள் இருவரும் அவுட்டா இல்லையா என்பது போல களத்தில் நின்றனர். நடுவர்கள் இருவரும் ஆலோசித்து அவுட் என தெரிவித்தனர்.
2 முன்னிலையை பெற்றதால் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உறுதி ஆகிவிட்டது. இன்று கடைசி நாள் என்பது குஜராத் அணி 2-வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு இல்லை. கேரளா அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கேரளா அணி ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
- தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார்.
இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அதிரடி ஆட்டக்காரரான இவர் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
தற்போது தொகுப்பாளராக இருக்கும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சி.எஸ்.கே. அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமங் இருந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி, பந்துவீச்சு ஆலோசகராக எரிக் சிமோன்ஸ் மற்றும் பீல்டிங் / பேட்டிங் பயிற்சியாளராக ராஜீவ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் பீல்டிங் பயிற்சியாளராக 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.






