என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை.
    • நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர்கள் வரை சென்று ரசிகர்களுக்கு விருது படைக்கிறது. இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அமலில் இருக்காது என பல்வேறு தகவல்கள் வந்தது. ஆனால் 2027 வரை இந்த விதி இருக்கும் என பிசிசிஐ தெரிவித்தது.

    இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது, ஐபிஎல் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இதற்குமேல் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போட்டிகளும் விறுவிறுப்பாகவே உள்ளன என கூறினேன்.

    ஆனாலும் அந்த விதி அமலுக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவுகிறதுதான். ஆனாலும் நான் பேட்டிங்கும் செய்கிறேன். கீப்பிங்கும் செய்கிறேன். எனவே நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.
    • தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன்.

    மும்பை :

    ஐபிஎல் 2025 -ம் ஆண்டு சீசன் தொடரில் டு பிளிஸ்சிஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதியை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விதி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை தருவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    இது குறித்து டெல்லி அணியின் துணை கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

    டெல்லி லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் அற்புதமான போட்டியாக அமைந்தது. பல கிரிக்கெட் வீரர்கள் பல ரசிகர்கள் ஐபிஎல் இருக்கும் புதிய விதி குறித்து புகார் அளிக்கிறார்கள். ஆனால் இந்த போட்டியை பார்த்த பிறகு புதிய விதி ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    ஐந்து விக்கெட்டுகள் விழுந்தவுடன் போட்டி அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் புதிய வீரர் ஒருவர் வந்து ஆட்டத்தை மாற்றிவிட்டார். நானாக இருந்தால் மசாலா டீ அருந்தி இதுபோல் இருக்கும் போட்டியை ரசித்துப் பார்ப்பேன்.

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஆடுகளத்தை பார்த்தேன். பந்து கொஞ்சம் நிதானமாக தான் பேட்டிற்கு வந்தது. ஐந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு இந்த இலக்கை எட்டுவது முடியாத காரியம் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய பழைய மூளை போட்டி முடியும் வரை லீக் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பை விட்டு விலக மாட்டாய் என்று கூறியது. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வரும்போது அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    தற்போது இந்திய அணியில் பல வீரர்கள் அபாரமாக விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்த இரண்டு வீரர்களும் பந்தை வெகு தூரத்திற்கு அடித்தார்கள். இந்த போட்டியை பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.

    மோகித் சர்மா அடித்ததிலேயே மிகவும் முக்கியமான ரன்னாக அவருடைய வாழ்க்கையில் இதுவாகத்தான் இருக்கும். மூத்த வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் பல கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. ஐபிஎல் பாணியே இதுதான். நான் ஒரு அணியில் நீண்ட காலம் தங்கி இருப்பேன். அதன் பிறகு ஏலம் நடக்கும் மீண்டும் புதிய அணிக்கு சென்று புதிய அத்தியாயத்தை தொடங்குது.

    சிஎஸ்கே அணியில் இருந்து ஆர்சிபிக்கு சென்றது ஒரு நல்ல அத்தியாயம் தான். ஆனால் தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன். இன்னும் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்பது புதிய அணியை பொறுத்துதான் இருக்கிறது.

    என்று டுபிளிசிஸ் கூறியுள்ளார்.

    • இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
    • பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்.

    அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது.

    என்று கோயங்கா கூறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, செக் நாட்டின் ஆடம் பாவ்லாசெக்-பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-4), 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன்.
    • என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது.

    அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம்- அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக கடைசி வரை அசுதோஷ் சர்மா வெற்றிக்காக போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அசுதோஷ் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்சர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

    எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது என கூறினார்.

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார். 

    • குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    • ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற 28-ந் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.

    இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் வேதனையடைந்தனர். மும்பை- சென்னை அணிகளுக்கான ஆட்டத்திற்கும் இதேபோல் தான் உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வாங்குவது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நிர்வாகம் கொடுக்கும் இணையதளத்தின் உள்ளே சென்றாலே 3 லட்சம் பேர் காத்திருப்பதாக மெசெஜ் வருகிறது. காத்திருந்தால் கூட டிக்கெட் பெற இயலவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக சென்னை போட்டிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் லட்ச கணக்கில் விற்பனை செய்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்தும் வாங்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் எக்ஸ் தளம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ள தனது நம்பருக்கு கால் செய்யுங்கள் அல்லது மெசெஜ் செய்யுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


    உடனே டிக்கெட்டுக்காக அதனையும் ரசிகர்கள் யோசிக்காமல் செய்கிறனர். இதனால் பெரிய அளவில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். டிக்கெட் இல்லாமலே தன்னிடம் டிக்கெட் இருப்பதாக கூறி ஏமாற்று வேலையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். டிக்கெட் வேண்டும் என்ற ஆசையில் முதலில் கேட்டவுடன் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகின்றனர். பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் அனைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

    மேலும் பலர் ஒரு டிக்கெட்டை பல பேருக்கு அனுப்பி வைத்து விட்டு அனைவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கடைசியில் டிக்கெட்டை கொடுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உஷாரக இருக்க வேண்டும்.

    இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
    • டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது.

    www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது. ஆன்லைன் முன்பதிவு ஓபன் ஆன சில நொடிகளில் காத்திருப்பு வரிசை 3 லட்சத்தை கடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    காத்திருப்பு வரிசை 3000 வரை சென்று கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது என மெசெஜ் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

    • கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • ‘ஏ’ கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
    • ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

    'ஏ' கிரேடில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அதிரடி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா 'பி' கிரேடிலும், ஸ்ரேயங்கா பட்டீல், திதாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் சி பிரிவிலும் உள்ளனர். ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    • போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும்.
    • கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது.

    ஆக்லாந்து:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

    ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதன் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை தோற்கடித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

    போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும். கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண்பது இது 3-வது முறையாகும்.

    ×