என் மலர்
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வரேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






