என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 64 ரன்கள் விளாசினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    டி20 உலகக் கோப்பையில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் கொல்கத்தாவில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பிரெண்டன் கிங், ஷாங் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரெண்டன் கிங் 30 பந்தில 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 22 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ரோவ்மன் பொவேல் 14 பந்தில் 24 ரன்களும், ரூதர்போர்டு 13 பந்தில் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் கர்ரி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    • முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது
    • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடுகிறது.
    • சொந்த நாட்டில் விளையாடுவது கனவை விட பெரியது என்கிறார் ரஷித் கான்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ரஷித் கான் கூறியதாவது:-

    உண்மையை சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது எனக்கும், அணிக்கும், ஒவ்வொரு தனிப்பட்ட வீரருக்கும் இது உலகக் கோப்பையை விடப் பெரியது.

    நாங்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறோம். அப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் வீரர்களை எப்படி வரவேற்கிறார்கள், அவர்கள் கிரிக்கெட்டை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை இந்த உலகமே பார்க்கும்.

    சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒரு கனவை விடவும் மேலானது.

    இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றதில்லை. ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    • ஹெட்மையர் 64 ரன்கள் விளாசினார்.
    • 12.2 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது வெஸ்ட்இண்டீஸ்.

    டி20 உலகக் கோப்பையில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் கொல்கத்தாவில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பிரெண்டன் கிங், ஷாங் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரெண்டன் கிங் 30 பந்தில 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 22 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ரோவ்மன் பொவேல் 14 பந்தில் 24 ரன்களும், ரூதர்போர்டு 13 பந்தில் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்துள்ளது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் கர்ரி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
    • இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்நிலையில், U19 உலக கோப்பையுடன் இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே கட்டிப்பிடித்து தூங்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    • ஆட்ட நாயகன் விருதை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
    • எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 பந்துகளில் 175 ரன் குவித்து சாதனை படைத்தார். இதில் 15 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடங்கும்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யவன்ஷி கூறியதாவது:-

    எனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்தப் போட்டிக்காக நான் கடந்த 8 மாதங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டேன்.

    ஆட்ட நாயகன் விருதை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப்போட்டியில் எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை. மற்ற ஆட்டத்தை போலவே இறுதிப்போட்டியை நினைத்தோம். எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • பகீம் அஷ்ரப் 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்து பாகிஸ்தா னையை வெற்றி பெற வைத்தார்.

    டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கியது. கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் ஏ அணியில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதின

    டாஸ் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கெல் லெவிட் 15 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்தார். பாஸ் டி லீட் 25 பந்தில் 30 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 29 பந்தில் 37 ரன்களும், கொலின் ஆக்கர்மேன் 14 பந்தில் 20 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டும் முகமது நவாஸ், அப்ரார் அகமது, சைம் ஆயுப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரிலேயே 24 ரன்களை பகீம் அஷ்ரப் விளாசினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வென்றது.

    கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்த பகீம் அஷ்ரப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
    • பாகிஸ்தான் அணியில் சல்மான் மிர்சா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கியது. கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் ஏ அணியில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கெல் லெவிட் 15 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்தார். பாஸ் டி லீட் 25 பந்தில் 30 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 29 பந்தில் 37 ரன்களும், கொலின் ஆக்கர்மேன் 14 பந்தில் 20 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டும் முகமது நவாஸ், அப்ரார் அகமது, சைம் ஆயுப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.
    • இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் U19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.

    பட்டம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சீனியர் வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் விளையாடினர்.
    • கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு தலைமை விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், திரைப்பட நடிகர் மணி ஆகியோர் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தனர்.

    கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி, நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர். அப்போது நடிகை தேவயானிக்கு வீசப்பட்ட ஒரே பந்தில் அவர் கிளீன் போல்டானார்.

    தொடர்ந்து நடிகர் தேவயானி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு நடராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம்.

    இன்று முதல் டி20 உலககோப்பை தொடங்குகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற்று உலககோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பெண்கள், ஆண்கள் பிரிவினர் காலிறுதியில் தோல்வி அடைந்தனர்.

    கிங்டாவோ:

    6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது.

    இதேபோல், ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதன்மூலம்இந்திய அணி காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

    • டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
    • இதேபோல், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகள் நடக்கவுள்ளன.

    மும்பை:

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

    வரும் 20-ம் தேதி வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 4-ம்தேதி முதல் அரையிறுதி, 5-ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது.

    பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும். இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் தேதி நடத்தப்படும்.

    லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்தும், மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்தும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.

    ×