என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
    • இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (76) 3,000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

    இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை பண்ட் முறியடித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 63 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்து இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.
    • இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 359/3 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), ஷுப்மான் கில் (127) சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 65 ரன்கள் எடுத்தார்.

    இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.

    2002ல் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர்.

     

    சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.

    கங்குலி, "இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, பந்த் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம், 2002 இல் முதல் நாள் களம் இதை விட சுட்டறு வித்தியாசமாக இருந்தது" என்றும் கருத்து தெரிவித்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    • நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
    • நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    பாரிஸ்:

    பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

    நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். 2வது செட்டை ரிபாகினா 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 7-6 (8-6) என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.

    3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.

    இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
    • காயம் காரணமாக 2-வது செட்டில் இருந்து பவுலா விலகினார்.

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசாவும் சீன வீராங்கனை வாங் சின்யுவும் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டில் இருந்து காயம் காரணமாக பவுலா விலகினார். இதனால் சீன வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் துனிசிய வீராங்கனை ஆன்ஸ் ஜபேரும் மோதினர். இந்த ஆட்டத்தில் மார்கெட்டா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் டேனியல் மெட்வதேவ், அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.
    • மற்றொரு ஆட்டங்களில் அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்), அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெர்லின்:

    பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டேனியல் மெட்வதேவ்(ரஷியா ), அமெரிக்கா வீரர் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெட்வதேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டங்களில் அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்), அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) வீரர்கள் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து கில், ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.

    • கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார்.

    இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் விளையாடிய 495 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களை எடுத்தனர்.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 4-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 177 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணிக்காக அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக பத்து 50+ ரன்களை அடித்த வீரர் எனும் ராய் தியாஸின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ராய் தியாஸ் 23 இன்னிங்ஸில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்திருந்தார்.

    கமிந்து மெண்டிஸ் 22 இன்னிங்ஸ்களில் 10 முறை 5+ ஸ்கோரை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் திலிப் மெண்டிஸ் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
    • வங்கதேசம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது.

    காலே:

    இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் குவித்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பதும் நிசங்கா 187 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷாத்மான் இஸ்லாம் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேச அணி இதுவரை 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடை

    • இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
    • இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார்.

    லீட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சாய் சுதர்சனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய வீரரான ஹர்திக் பாண்ட்யா, " நீ இதற்கு தகுதியானவன், சாய். நன்றாக செல்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

    சாய் சுதர்சன் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×