என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
    X

    இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்

    • கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார்.

    இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் விளையாடிய 495 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களை எடுத்தனர்.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 4-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 177 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணிக்காக அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக பத்து 50+ ரன்களை அடித்த வீரர் எனும் ராய் தியாஸின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ராய் தியாஸ் 23 இன்னிங்ஸில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்திருந்தார்.

    கமிந்து மெண்டிஸ் 22 இன்னிங்ஸ்களில் 10 முறை 5+ ஸ்கோரை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் திலிப் மெண்டிஸ் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×