என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 165 ரன்கள் குவித்தது.

    திருநெல்வேலி:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 18-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சோனு யாதவ், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.

    அதிகபட்சமாக அத்னன் கான் 26 ரன்னும், சோனு யாதவ் 23 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நெல்லை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி, தொடர் தோல்விக்குப் பிறகு நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    கோவை அணி சார்பில் திவாகர் 3 விக்கெட்டும், புவனேஸ்வரன், சித்தார்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினார்.
    • சோனு யாதவ், ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 18ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்தது. ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜிதேந்தர் குமார் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சச்சின் 10 ரன்னிலும், சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபக்கம் லோகேஷ்வர் நிலைத்து நின்று ஆட, 4ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவரில் கோவை 105 ரன்கள் எடுத்திருந்தது.

    16 ஓவரில் 22 ரன்கள் அடித்த கோவை, சோனு யாதவ் வீசிய 17ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. லோகேஷ்வர் மட்டும் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

    கோவைக்கு18ஆவது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரில் 7 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க கோவை 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினர்.

    • 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
    • 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147), ரிஷப் பண்ட் (134) சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே ஒரு இன்னிங்சில் சதம் விளாசி மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை பட்டியில் இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக,

    * 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    * 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.

    * 2006-ல் வெஸ்ட் இண்டீஸ் கிராஸ் ஐஸ்லெட்டில் சேவாக், ராகுல் டிராவிட், கைஃப் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    * அதன்பின் தற்போது ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    • ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதம் விளாசினர்.
    • பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதத்தால் இந்தியா 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்திருந்தது.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 11 ரன்னிலும், பும்ரா ரன்ஏதும் எடுக்காமலும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க இருந்தது. பேட்டர்கள் தயாரான போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    • சுப்மன் கில் 147 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ரிஷப் பண்ட் 134 ரன்கள் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.

    ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.

    ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுப்மன் கில் 150 ரன்னைக் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பசீர் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்று பவுண்டரில் லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    சுப்மன் கில் 227 பந்தில் 19 பவுண்டரி, 1 சிக்சருடன் 147 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்தது. சுப்மன் கில்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 8 வருடம் கழித்து களம் இறங்கிய கருண் நாயருக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 178 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 1 ரன்னில் வெளியேறினார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    2ஆவது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்துள்ளது. கில் ஆட்டமிழக்கும்போது இந்தியா 430 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கடைசி 25 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • எம்.எஸ். டோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் அடித்துள்ளார்.
    • ரிஷப் பண்ட் 44 போட்டிகளில் விளையாடி 7 சதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 7ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனி 6 சதம் அடித்துள்ளார். இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

    எம்.எஸ். டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4876 ரன்கள் அடித்துள்ளார். 33 அரைசதம் அடித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் இந்த போட்டிக்கு முன்னதாக 43 போட்டிகளில் 75 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2948 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதம், 15 அரைசதம் அடங்கும். தற்போது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

    • 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • சதம் அடிக்க 146 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.

    ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.

    • இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது பேட்டர்கள் மோதிக் கொண்டனர்.
    • க்ரீஸ் திரும்புவதற்குள் 3 முறை ரன்அவுட் செய்ய தவறி விடுவார்கள்.

    மாநில, தேசிய அளவில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் சிறுபிள்ளைத்தனம் போன்று இருக்கும். என்னடா இப்படி விளையாடுகிறார்கள் என்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் நடைபெற்றுள்ளது.

    ரெய்காட் ராயல்ஸ்- கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி புனேயில் நடைபெற்றது. ரெய்காட் சேஸிங் செய்யும்போது, பேட்டர்கள் இரண்டு ரன்கள் ஓட முயன்றனர். 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது இருவரும் ஆடுகளத்தின் மையப் பகுதியில் மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    அப்போது பீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். விக்கெட் கீப்பரும் பந்தை பிடிப்பார். உடனே ஸ்டம்பில் அடித்திருந்தால் ரன்அவுட் ஆகும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பந்து வீச்சாளரிடம் பந்து தூக்கி போட்டுவிடுவார். பந்து வீச்சாளர் பந்தை பிடித்து அடிக்க தவறிவிடுவார். அதற்குள் ஒரு பேட்டர் க்ரீஸ் வந்து விடுவார்.

    உடனே அருகில் நின்ற பீல்டர் பந்தை எடுத்துக் கொண்டு மறுமுனையில் ரன்அவுட் செய்ய ஓடுவார். அதற்குள் கீழே விழுந்த மற்றொரு பேட்டர் எழுந்து பேட் இல்லாமல் க்ரீஸ் நோக்கி ஓடுவார். அப்போது பீல்டர் பந்தை எறிய, அது ஸ்டம்பில் படாமல் சென்றுவிடும். இதனால் மூன்று முறை ரன்அவுட் மிஸ் ஆகிவிடும்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
    • சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியின்போது சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் (black socks) அணிந்து விளையாடியுள்ளார். ஐசிசி விதியின்படி ஒரு வீரர் வெள்ளை, க்ரீம (Cream) அல்லது வெளீர் சாம்பல் (light grey) ஆகிய கலர் கொண்ட சாக்ஸ்தான் அணிய வேண்டும். ஒருநாள் போட்டிக்கும் இந்த விதி அடங்கும்.

    ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரணங்கள் விதிகளின் பிரிவு 19.45 இன் படி, ஒரு வீரர் மேற்கூறிய வண்ணங்களின் சாக்ஸ் அணிய வேண்டும். இதனை சுப்மன் கில் மீறியுள்ளார். இதற்காக ஐசிசி அவருக்கு 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுதற்கு தடை விதிப்பதற்கான ஒரு புள்ளி பெறவும் வாய்ப்புள்ளது.

    எனினும், அவருடைய சாக்ஸ் அதிக ஈரப்பதம் ஆகி அல்லது வழக்கத்திற்க மாறாக தற்செயலாக அணிந்திருந்தால் அபராத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    • அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வென்றனர்.
    • 5 பிரிவில் தங்கப் பதக்கம் கிடைத்தது.

    23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.

    பிரியான்ஷி பிரஜாபாத் (50கி), ரீனா (55கி), ஸ்ரீஷ்டி (68கி), பிரியா (76கி) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

    நேஹா ஷர்மா (57கி), தன்வி (59), பிரகதி (62கி), சிக்ஷா (65) , ஜோதி பென்வால் (72கி) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஹினாபென் கலிஃபா (53கி) வெண்கல பதக்கம் வென்றார்.

    கிரேக்கோ-ரோமன் பிரிவில் சுமித் (63கி) தங்கப் பதக்கம் வென்றார். நிதேஷ் (97), அங்கித் குலியா (72கி) வெண்கல பதக்கம் வென்றனர்.

    ஃப்ரீஸ்டைல் பிரிவில் விக்கி (97கி) தங்கப் பதக்கம் வென்றார்.

    நிகில் (61கி), சுஜீத் கல்கல் (65கி), ஜெய்தீப் (74கி) சந்தர்மோகன் (79கி), சச்சின் (92கி) தங்கப் பதக்கத்திற்காக மோத உள்ளனர்.

    • முதல் இன்னிங்சில் 148 ரன்கள் விளாசினார்.
    • 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் குவித்தார்.

    இலங்கை- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (148), முஷ்பிகுர் ரஹிம் (163) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 187 ரன்கள் விளாச 485 ரன்கள் குவித்தது.

    10 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதுடன் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. ஷான்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹிம் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷான்டோ அபாரமாக விளையாடி சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அவர், 2வது இன்னிங்சில் சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

    வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 125 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேசம் 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கடைசி நாளான இன்று 37 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

    ×