என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மோதிக் கொண்ட பேட்டர்கள்: 3 முறை ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்ட பீல்டர்கள்- வைரலாகும் வீடியோ
    X

    மோதிக் கொண்ட பேட்டர்கள்: 3 முறை ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்ட பீல்டர்கள்- வைரலாகும் வீடியோ

    • இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது பேட்டர்கள் மோதிக் கொண்டனர்.
    • க்ரீஸ் திரும்புவதற்குள் 3 முறை ரன்அவுட் செய்ய தவறி விடுவார்கள்.

    மாநில, தேசிய அளவில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் சிறுபிள்ளைத்தனம் போன்று இருக்கும். என்னடா இப்படி விளையாடுகிறார்கள் என்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் நடைபெற்றுள்ளது.

    ரெய்காட் ராயல்ஸ்- கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி புனேயில் நடைபெற்றது. ரெய்காட் சேஸிங் செய்யும்போது, பேட்டர்கள் இரண்டு ரன்கள் ஓட முயன்றனர். 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது இருவரும் ஆடுகளத்தின் மையப் பகுதியில் மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    அப்போது பீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். விக்கெட் கீப்பரும் பந்தை பிடிப்பார். உடனே ஸ்டம்பில் அடித்திருந்தால் ரன்அவுட் ஆகும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பந்து வீச்சாளரிடம் பந்து தூக்கி போட்டுவிடுவார். பந்து வீச்சாளர் பந்தை பிடித்து அடிக்க தவறிவிடுவார். அதற்குள் ஒரு பேட்டர் க்ரீஸ் வந்து விடுவார்.

    உடனே அருகில் நின்ற பீல்டர் பந்தை எடுத்துக் கொண்டு மறுமுனையில் ரன்அவுட் செய்ய ஓடுவார். அதற்குள் கீழே விழுந்த மற்றொரு பேட்டர் எழுந்து பேட் இல்லாமல் க்ரீஸ் நோக்கி ஓடுவார். அப்போது பீல்டர் பந்தை எறிய, அது ஸ்டம்பில் படாமல் சென்றுவிடும். இதனால் மூன்று முறை ரன்அவுட் மிஸ் ஆகிவிடும்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×