என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பரத் அருணின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
    • இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பரத் அருண். அவர் 2022-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.

    பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 4ஆவது டெஸ்டுக்கும் 5ஆவது டெஸ்டுக்கும் இடையில் 3 நாட்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.
    • ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை தொடங்கியது.

    5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். மேலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாசன், கார்ஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் முதல் டெஸ்டுக்கும் 2ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூன் 25 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 7 நாட்கள் ஓய்வு இருந்தது. ஆனால் 2ஆவது டெஸ்டுக்கும் 3ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூலை 7 முதல் 9 வரை 3 நாட்கள் மட்டுமே ஓய்வு இருந்தது.

    அதேவேளையில் 3ஆவது டெஸ்டுக்கும் 4ஆவது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் ஓய்வு இருந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

    இந்த நிலையில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் 3 நாட்கள் இடைவெளி ரொம்ப குறைவு. வீரர்கள் காயத்தில் இருந்து மீள்வதற்கான காலஅவகாசம் போதாது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் இடையிலான இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும். இரண்டு போட்டிக்கு 17 நாட்களும், 2 போட்டிகளுக்கு தலா 3 நாட்களும் இடைவெளி உள்ளது. மொத்தமாக உள்ள 23 நாட்களை குறைந்த பட்சமா ஐந்து நாட்களாக நிலையானதாக இருக்க வேண்டும்.

    இது இரண்டு அணிகளுக்கும் மிகவும் கடினமானது. பந்து வீச்சாளர்கள் ஏராளமான ஓவர்கள் வீச வேண்டிய நிலை உள்ளது. அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.
    • இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்க உள்ள நிலையில் அந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன என்பதை பார்க்கலாம்.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்த தொடரில் முதல் 4 டெஸ்டுகளிலும் பேட்ஸ்மேன்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுவரை 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதி டெஸ்ட் நடக்கும் ஓவலில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் 2014-ம் ஆண்டில் இருந்து (கடைசி 11 டெஸ்ட்) இங்கு நடந்துள்ள அனைத்து டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது.

    இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இங்கு இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இதில் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.

    1971-ம் ஆண்டு அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் 2-வது இன்னிங்சில் பக்வத் சந்திரசேகரின் சுழல் ஜாலத்தை (6 விக்கெட்) சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 101 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்டில் கிடைத்த முதல் வெற்றி இது தான். அந்த வகையில் ஓவல் மைதானம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இந்த மைதானத்தில் மற்றொரு வெற்றி 2021-ம் ஆண்டில் கிட்டியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

    2007-ம் ஆண்டில் 664 ரன்கள் எடுத்தது இங்கு இந்தியாவின் அதிகபட்சமாகும். 2014-ம் ஆண்டில் 94 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். இந்திய தரப்பில் 10 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்ததும் அடங்கும்.

    இங்கிலாந்து அணி இங்கு 106 டெஸ்டுகளில் விளையாடி 45-ல் வெற்றியும், 24-ல் தோல்வியும், 37-ல் டிராவும் சந்தித்துள்ளது. 1938-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 903 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தத்தில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1896-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 44 ரன்னில் முடங்கியது மோசமான ஸ்கோராகும்.

    இங்கிலாந்தின் லியோனர்ட் ஹட்டன் (364 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1938-ம் ஆண்டு), தென் ஆப்பிரிக்காவின் அம்லா (311 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு) முச்சதம் விளாசியுள்ளனர். விக்கெட் வேட்டையில் இங்கிலாந்தின் இயான் போத்தம் (52 விக்கெட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (50 விக்கெட்) டாப்-2 இடங்களில் உள்ளனர்.

    • டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.
    • பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா (804 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (798 புள்ளி) 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (706 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார்.

    டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடந்த முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (இ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

    லீட்ஸ்:

    2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.

    இந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை யூசப் பதான் சிக்சர் விளாசி முடித்து வைத்தார். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஓய்வு அறையில் இருந்த ஷிகர் தவான் நடனமாடி கொண்டாடினார். மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் யூசப் பதான் வெளியில் இருந்து போட்டியை ரசித்த சிறுவர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஸ்வேரெவ் 7-6 (8-6), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஆடம் வால்டனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்த ஆட்டத்தில் மெட்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஸ்வேரெவ் 7-6 (8-6), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஆடம் வால்டனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் மெட்வதேவ் (ரஷ்யா) மற்றும் டாலிபோர் ஸ்வ்ர்சினா (செக்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மெட்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கோகோ காப் (அமெரிக்கா), சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.
    • முதல் செட்டை கோகோ காப்பும், 2-வது செட்டை டேனியல் காலின்ஸும் கைப்பற்றினர்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காப்பும், 2-வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் காலின்ஸும் கைப்பற்றினர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

    இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த செட்டில் 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் காலின்ஸை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
    • புள்ளிப்பட்டியலில் 4 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்தது.

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

    அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

    • 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும்.
    • 4ஆவது போட்டியை போன்று பேட்டிங் செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். இதனால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீரை அறிவுறுத்துகிறேன். இது போன்று பேட்டிங் (4ஆவது போட்டி) செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இது இளம் வீரர்களை கொண்ட அணி. அணி கட்டமைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் 4ஆவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்க்கும்போது, லார்ட்ஸ் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கவலைப்படும்.

    மான்செஸ்டர் டெஸ்டிடில் 5ஆவது நாள் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தது, லார்ட்ஸ் மைதானத்தில் 190 இலக்கை எட்டியிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் பல டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு நல்லது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட இருந்த நிலையில், காயத்தால் விலகினார்.
    • ஓவல் மைதானத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு இருந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தால் வாய்ப்பு எட்டவில்லை. இதனால் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றார்.

    தற்போது காயம் குணமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5ஆவது போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதனால் 5ஆவது போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டார். இதனால் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே ஆகாஷ் தீப் 4ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவரும் 5ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் களம் இறங்கினால் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    ×