என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENGvsIND 5th Test மூன்று நாள் இடைவெளியில் அடுத்த டெஸ்ட் என்பது மிகக் கடினம்: பென் ஸ்டோக்ஸ் வேதனை..!
    X

    ENGvsIND 5th Test மூன்று நாள் இடைவெளியில் அடுத்த டெஸ்ட் என்பது மிகக் கடினம்: பென் ஸ்டோக்ஸ் வேதனை..!

    • 4ஆவது டெஸ்டுக்கும் 5ஆவது டெஸ்டுக்கும் இடையில் 3 நாட்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.
    • ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை தொடங்கியது.

    5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். மேலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாசன், கார்ஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் முதல் டெஸ்டுக்கும் 2ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூன் 25 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 7 நாட்கள் ஓய்வு இருந்தது. ஆனால் 2ஆவது டெஸ்டுக்கும் 3ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூலை 7 முதல் 9 வரை 3 நாட்கள் மட்டுமே ஓய்வு இருந்தது.

    அதேவேளையில் 3ஆவது டெஸ்டுக்கும் 4ஆவது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் ஓய்வு இருந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

    இந்த நிலையில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் 3 நாட்கள் இடைவெளி ரொம்ப குறைவு. வீரர்கள் காயத்தில் இருந்து மீள்வதற்கான காலஅவகாசம் போதாது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் இடையிலான இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும். இரண்டு போட்டிக்கு 17 நாட்களும், 2 போட்டிகளுக்கு தலா 3 நாட்களும் இடைவெளி உள்ளது. மொத்தமாக உள்ள 23 நாட்களை குறைந்த பட்சமா ஐந்து நாட்களாக நிலையானதாக இருக்க வேண்டும்.

    இது இரண்டு அணிகளுக்கும் மிகவும் கடினமானது. பந்து வீச்சாளர்கள் ஏராளமான ஓவர்கள் வீச வேண்டிய நிலை உள்ளது. அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×