என் மலர்
விளையாட்டு
இந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாதான் என்று பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டுடிருக்கும்போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை அபார பீல்டிங் மூலம் நெருக்குடிக்கு உள்ளாக்க முடியும். அவர் களத்தில் எப்போதுமே ஒரு மிரட்டலாக இருப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜா இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட பப்புவா நியூ கினியா அணி தகுதிப் பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இந்த இரண்டு அணிகளையும் தவிர மேலும் நான்கு அணிகள் குரூப் நிலைக்கு தகுதி பெறும். குரூப் நிலையில் இலங்கை, வங்காளதேசம் உள்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இந்த இரண்டு அணிகளையும் தவிர மேலும் நான்கு அணிகள் குரூப் நிலைக்கு தகுதி பெறும். குரூப் நிலையில் இலங்கை, வங்காளதேசம் உள்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணம் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் வீரேந்தர் சேவாக். 41 வயதாகும் இவர் 1999-ம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனார். முதல் போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
அதன்பின் டெஸ்ட் போட்டியில் 2001-ல் அறிமுகம் ஆனார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து சேவாக்கை தொடக்க வீரராக களம் இறக்கினார் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி. தொடக்க வீரராக களம் இறங்கிய சேவாக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கொரு இடத்தை வகுத்துக் கொண்டார்.
தற்போதும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த பேட்ஸ்மேன் என்ற பெருமை கங்குலியால் கிடைத்தது என சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தரவரிசையில் இருந்து தொடக்க பேட்ஸ்மேனாக மாறுவதற்கு சவுரவ் கங்குலியின் பணி முக்கியமானது. அவர் என்னிடம் வந்து தொடக்க வீரராக களம் இறங்குகிறீர்களா? என்று கேட்ட பின்புதான் எல்லாமே மாறியது.
ஆனால் அவர் கேட்டதும், நீங்கள் ஏன் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. உங்களுடன் தொடக்க வீரராக சச்சின் உள்ளாரோ? என்று என்னுடைய ரியாக்சன் எளிமையாக இருந்தது.
தொடக்க இடம் காலியாக இருப்பது குறித்து சவுரவ் கங்குலி என்னிடம் தெளிவாக எடுத்துக் கூறினார். நான் அந்த இடத்தில் களம் இறங்கி வியைாடினால், என்னுடைய நிரம் நிரந்தரம் என்பது உறுதியாக இருந்தது.
ஆனால், உங்களது யோசனைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விரும்புகிறேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு கங்குலி, மிடில் ஆர்டர் வரிசையில் ஏதாவது ஒருவர் காயம் அடையும் வரை காத்திப்பேன் என்று தெரிவித்தார்.

அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன், மிடில் ஆர்டர் தரவரிசையில் வாய்ப்பு வழங்குவேன் என்றார்.
இது மிகவும் நியாயமான அணுகுமுறை. கேப்டன் மீது வீரர்கள் நம்பிக்கை வைப்பதை இது தெளிவாக காட்டுகிறது. கங்குலி கொடுத்த உறுதி எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது. எனது முன்னேற்றத்திற்குப் பின்னால் கங்குலி அதிக அளவில் இருந்தார். அதனால் என்னால் முயற்சி செய்து பார்க்க முடிந்தது. தற்போது நான் இப்படி இருப்பதற்கு கங்குலிதான் காரணம்’’ என்றார்.

அவர் முடிந்த அளவிற்கு என்னுடைய மனதை மாற்ற முயற்சி செய்தார். பின்னர், தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்ய மூன்று அல்லது நான்கு வாய்ப்புகள் தருகிறேன். நீங்கள் அதில் ஜொலிக்காவிடில், தொடர்ச்சியாக விளையாடலாம்.

அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன், மிடில் ஆர்டர் தரவரிசையில் வாய்ப்பு வழங்குவேன் என்றார்.
இது மிகவும் நியாயமான அணுகுமுறை. கேப்டன் மீது வீரர்கள் நம்பிக்கை வைப்பதை இது தெளிவாக காட்டுகிறது. கங்குலி கொடுத்த உறுதி எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது. எனது முன்னேற்றத்திற்குப் பின்னால் கங்குலி அதிக அளவில் இருந்தார். அதனால் என்னால் முயற்சி செய்து பார்க்க முடிந்தது. தற்போது நான் இப்படி இருப்பதற்கு கங்குலிதான் காரணம்’’ என்றார்.
சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
2-வது போட்டி அக்டோபர் 30-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது. முதல் போட்டியில் பங்கேற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2-வது போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.
அவரது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஸ்டார்க் சகோதரர் பிராண்டன் சிறந்த உயரம் தாண்டுல் வீரராவார். கடந்த வருடம் நடைபெற்ற கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்டார்க் இல்லாததால் பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் இலங்கை பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 100 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 36 பந்தில் 64 ரன்களும், மேக்ஸ்வெல் 28 பந்தில் 62 ரன்களும் விளாசினார்.
இலங்கை அணியின் கசுன் ரஜிதா நான்கு ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 75 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கள் ஓவர்கள் வீசி அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் எனற் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் துருக்கி பந்து வீச்சாளர் 70 ரன்களும், அயர்லாந்து வீரர் 69 ரன்களும், தென்ஆப்பிரிக்கா வீரர் 68 ரன்களும் விட்டுக்கொடுத்துள்ளர்.

வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நாளை மறுநாள் இந்தியா வருகிறது.
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 7-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது போட்டி 10-ந்தேதி நாக்பூரிலும் நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் -இ ரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
பி.சி.சி.ஐ. இது தொடர்பாக வங்காளதேசத்திடம் பரிந்துரை செய்துள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் முதல் முறையாக பகல்- இரவு டெஸ்ட் நடைபெறும்.
இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு சேர்மன் அக்ரம்கான் கூறும்போது “இந்தியா - வங்காளதேச அணிகள் கொல்கத்தாவில் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவாக நடத்த பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாளில் எங்களது முடிவை அறிவிப்போம்”என்றார்.
இந்தியாவில் இதுவரை பகல் - இரவு டெஸ்ட் நடைபெற்றது இல்லை. பி.சி.சி.ஐ.யின் பரிந்துரையை வங்காளதேசம் ஏற்றுக் கொண்டால் முதல் முறையாக நடைபெறும்.
பகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்தியா எப்போதும் விரும்பியது இல்லை. கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகல்-இரவு டெஸ்டை கொண்டு வர விரும்பினார். இதற்கு கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்ததாக கங்குலி சமீபத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்துதான் கொல்கத்தா டெஸ்டை பகல்-இரவாக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் முதல் முறையாக 2015 டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இதுவரை பகல்-இரவாக 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு உண்டு, ஆதலால் டோனி குறித்து விமர்சிக்க வேண்டாம் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘மூத்த வீரர் டோனி குறித்து இப்போது நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்களே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ரவிசாஸ்திரி கூறியதாவது:-
டோனி குறித்து பேசுபவர்களில் பாதி பேருக்கு அவர்களது ஷூவின் லேஸ் கூட கட்டத் தெரியாது. தேசிய அணிக்காக டோனி செய்துள்ள சாதனையை பாருங்கள். டோனி கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் ஏன் அவசரப்படுகிறார்கள்? ஒருவேளை அவர்களுக்கு பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாமல் இருக்கலாம். டோனி விரைவில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விடுவார் என்பதை அவர் உள்பட அனைவரும் அறிவர். அது எப்போது நடக்குமோ அப்போது நடக்கட்டும். அவர் பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பது, அவரை அவமதிக்கும் செயலாகும்.
இந்திய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியுள்ள அவருக்கு ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்பது தெரியாதா? டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போது என்ன சொன்னார். விக்கெட் கீப்பிங் பணியை விருத்திமான் சஹாவிடம் வழங்கும் அளவுக்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். அவரது கணிப்பு சரியாக அமைந்தது.
சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது வீரர்களின் ஓய்வறைக்கு வந்த டோனி, அறிமுக வீரராக களம் இறங்கிய உள்ளூர் வீரர் ஷபாஸ் நதீமை சந்தித்து அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசி விட்டு சென்றார். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு உண்டு. அதனால் அவர் பற்றிய இத்தகைய விவாதங்கள் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை தொடங்கியது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என முடிவு செய்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை திணறடிக்கும் வகையில் ரன்களை குவித்தனர்.
அவர்களில் பின்ச் 64 ரன்கள் எடுத்து (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ஆட்டமிழந்த நிலையில், மறுபுறம் வார்னர் அதிரடியாக விளையாடினார். அவருடன் மேக்ஸ்வெல் கைகோர்த்து 62 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்திருந்த நிலையில் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின் வார்னருடன் இணைந்து டர்னர் விளையாடினார். வார்னர் ஆட்டமிழக்காமல் சதம் பூர்த்தி செய்துள்ளார். அவர் 56 பந்துகளில் 100 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து உள்ளார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 233 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 234 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியில் ஆரம்பத்தில் இருந்து ரன்களை சேர்க்க வீரர்கள் தவறி விட்டனர். தொடக்க ஆட்டக்காரர்களான குணதிலகா (11) மற்றும் மென்டிஸ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ராஜபக்சா (2), பெரேரா (16), பெர்னாண்டோ (13), சனாகா (17), சில்வா (5), சன்டாகன் (6), ரஜிதா (0) ரன்கள் எடுத்து வெளியேறினர்.
அந்த அணியின் மலிங்கா 13 ரன்களுடனும், பிரதீப் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டார். அடுத்த போட்டி வருகிற புதன்கிழமை பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.
கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கோவா:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி, ஒடிசா எப்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணி வீரர் ரிதிம் தியாக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதற்கு பிறகு யாரும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஹெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்து 1-1 என சமனிலைக்கு கொண்டு வந்தார்.
கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் அஸ்மோ கியான் 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்சி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய தொடரில் தமிம் இக்பால் சொந்த காரணங்களால் பங்கேற்க மாட்டார் என வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டாக்கா:
வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஷிபம் டுபே, ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய தொடரில் சொந்த காரணங்களால் தமிம் இக்பால் பங்கேற்க மாட்டார். தமிம் இக்பாலுக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியை சந்தித்தது.
இதில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் இந்திய ஜோடி ஜப்பானின் ஹிரோயுகி எண்டோ-யுடா வடானபே ஜோடியை எதிர்கொள்கிறது.
பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை சந்தித்தார்.
இதில் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் 21-16, 24-26, 21-17 என பி.வி.சிந்துவை போராடி வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.