என் மலர்
விளையாட்டு
பிசிசிஐ தலைவர் கங்குலியின் கோரிக்கையை ஏற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக பகல்-இரவு போட்டியை நடத்தி காட்டியது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஒரு போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலியா விரும்பியது. ஆனால், இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயராகவில்லை என பிசிசிஐ அவர்களது கோரிக்கையை நிராகரித்தது.
தற்போது பிசிசிஐ-யின் தலைவராக பதவி ஏற்றுள்ள கங்குலி, இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் பகல்-இரவு டெஸ்ட் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட விராட் கோலி சம்மதம் தெரிவித்ததாக கங்குலி கூறியிருந்தார்.
இதனால் உடனடியாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த இருக்கிறோம். நீங்கள் இந்த டெஸ்டில் விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
உறுதியாக வங்காளதேச கிரிக்கெட் போர்டு இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவை அறிவிக்கி்றோம் என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேசம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

தோள்பட்டை காயம் காரணமாக பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் பைனல்ஸ் தொடரில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார்.
பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் தலைசிறந்த முன்னணி 8 வீராங்கனைகளுக்கு இடையில் ஆண்டுதோறும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த வருடத்திற்கான பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷென்சென்னில் நடைபெற்று வருகிறது. ஒரு பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா இடம் பெற்றிருந்தார். நேற்று முன்னதினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஒசாகா பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார்.
இதில் கடும் சிரமத்திற்குப்பின் ஒசாகா 7(7)-6(1), 4-6, 6-4 என வெற்றி பெற்றார். இன்று ஆஷ்லே பார்ட்டியை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால், தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து ஒசாகா விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கிகி பெர்ட்டென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரின்போது பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும் என பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு அக்தர் அட்வைஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மூன்று பேர் 19 வயதிற்கு உட்பட்டோர். இதனால் பாகிஸ்தான் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவில் எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் நாம் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் என்பதை பாகிஸ்தான் இளம் வீரர்கள் அசத்தலான பந்து வீச்சால் தெரியப்படுத்த வேண்டும் என அக்தர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ‘Back Foot’ சென்று விளையாட வைக்க விரும்பினால், அவர்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும். இந்த நோக்கம் மிகமிக முக்கியமானது. ஓவருக்கு இரண்டு பந்துகளை பேட்ஸ்மேனின் கழுத்து மற்றும் தலையின் பக்கவாட்டை தாக்க வேண்டும்.
கேப்டன் பந்து வீச்சாளர்களை விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தும் நோக்கத்தில் பந்து வீசும்படி கொண்டு செல்லக்கூடாது. பாதுகாப்பான கேப்டனை நான் விரும்பியதில்லை. பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது, கேப்டன் கட்டாயம் அட்டாக் நோக்கத்தில் இருக்க வேண்டும்’’ என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனியின் ஓய்வு குறித்த ‘ஹேஷ்டேக்’ டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இரண்டு முறை இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்று பெயரெடுத்த டோனி, தற்போது கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான இந்திய அணி அறிவிக்கப்படும்போது, டோனியை நாங்கள் கடந்து வந்து விட்டோம் என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். இதனால் டோனி இனிமேல் அணிக்கு திரும்பினாலும், அது அவரின் வழியனுப்பும் தொடராகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து டுவிட்டரில் #DhoniRetires என்ற ஹேஷ்டேக் டிரென்ட் ஆகி வருகிறது.
இது எம்எஸ் டோனியின் ரசிகர்கள் எரிச்சலடையச் செய்துள்ளது. ஒரு ரசிகர் ‘‘எப்போது ஓய்வு பெற வேண்டும் என அவருக்குத் தெரியும். தயது செய்து டுவிட்டர் முட்டாள்களே வெளியேறுங்கள்’’ என ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் பல ரசிகர்கள் டோனிக்கு ஆதரவாக டுவிட் செய்து வருகின்றனர்.

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியை கடந்த கால இந்திய அணியுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என அம்லா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது.
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி அணிதான் தலைசிறந்த இந்திய அணி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள இந்திய அணியை கடந்த அணியுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என ஹசிம் அம்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசிம் அம்லா கூறும்போது ‘‘நான் தெண்டுல்கர், டிராவிட், லஷ்மண், கங்குலி, சேவாக் ஆகியோருக்கு எதிராக விளையாடிள்ளேன். உலகளவில் இதைவிட சிறந்த பேட்டிங் வரிசை இருக்க முடியாது.
தற்போதுள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் ஒரு சீரான அணியாக உருவாகியுள்ளனர். சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு எதிராக விளையாடும்போது, அது சிறந்த அணியாக இருந்தது.
அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சிறந்த பந்து வீச்சாளர்கள். நான் கடந்த 10 வருடங்களாக சிறந்த கிரிகெட் வீரர்களுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். ஒவ்வொரு அணியையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி மற்றும் விராட் கோலிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20 கிரிக்கெட் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற 3-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணி மீது கேரளா மாநிலம் கோழிக்கோட்டை மையமாக வைத்து இயங்கும் ஆல் இந்தியா லஷ்கர் இயக்கம் தாக்குதல் நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ.-க்கு பெயரிடப்படாத கடிதம் வந்துள்ளது.
இதனால் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளும்படி டெல்லி போலீஸ்க்கு என்.ஐ.ஏ. வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடிதத்தில் விராட் கோலி பெயர் இடம் பெற்றிருந்தாலும், அவர் வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித் ஷா, அத்வானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் பெயரும் இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய தொடருக்கான வங்காளதேச அணியில் சாகிப் அல் ஹசன் இடைபெறுவது சந்தேகம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. 3-ம் தேதி முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்த சூழலில், வங்காளதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. வங்காளதேச கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார்.
வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாகிப் அல் ஹசன் ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த இரு நாட்களாக வங்கதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை.

பிசிசிஐ-யின் கோரிக்கையை வங்காளதேசம் ஏற்றுக் கொள்ளும், கொல்கத்தா்வில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட்டில் விளையாடுவதற்காக நாளை இந்தியா வருகிறது. இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. 10-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிவடைகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த டெஸ்ட்டை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கடிதம் எழுதி உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த பரிந்துரையை வங்காளதேசம் ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்ட்டை பகல்-இரவாக நடத்துவது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹசனுடன் நான் பேசினேன்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக வீரர்களுடன் பேச விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இன்று இரவுக்குள் வங்காளதேசம் தனது முடிவை தெரிவிக்கும். கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடைபெறும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பகல்-இரவு டெஸ்டினை இந்தியா எப்போதும் விரும்பியது இல்லை.
கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகல்-இரவு டெஸ்ட்டை கொண்டுவர விரும்பினார். இது தொடர்பாக கேப்டன் வீராட் கோலியிடமும் பேசி அவரது ஆதரவையும் கங்குலி பெற்றார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் முதல் மைதானம் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை கொண்டுவரப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறினார்.
கொல்கத்தா:
இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்துக்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ‘பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேசம் சம்மதம் தெரிவிக்கும். இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் பேசி இருக்கிறேன். அவர்கள் வீரர்களுடன் கலந்து பேசி இது குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை கொண்டுவரப்படும். புதிய நிதி கமிட்டி இந்த ஒப்பந்த முறை குறித்து திட்டம் உருவாக்கும்’ என்று கூறினார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழப்பதற்கு டாஸ் தோல்வியும் முக்கிய காரணம் என கருதுகிறார் டு பிளிசிஸ்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான் டாஸ் வென்றார்.
டாஸ் வெல்வதுதான் முக்கியம் எனக் கருதிய டு பிளிசிஸ், கடைசி போட்டியில் தனக்கு ராசியில்லை எனக் கூறி மாற்று வீரரை டாஸ் கேட்க அனுப்பினார். அப்போதும் தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை.
இதனால் டாஸ் சுண்டப்படும் முறையை நீக்கினால், அது மற்ற நாடுகளுக்குச் செல்லும் அணிக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 500 ரன்களுக்கு மேல் குவித்து, பின்னர் டிக்ளேர் செய்து மாலை நேரத்தில் எங்களை பேட்டிங் செய்ய வைத்தனர்.
சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்திவிட்டார்கள். அதன்பின் அடுத்த நாள் காலை நாங்கள் விளையாடும்போது நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது. மூன்று போட்டிகளிலும் அப்படியே நடந்தது.
இந்தியாவில் நடைபெற்ற கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறைதான் 2-வது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை இந்தியாவும், ஒரு முறை அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 33 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது.
டாஸ் சுண்டப்படுவது ரத்து செய்யப்பட்டால் அது ஒரு நாட்டிற்கு சென்று விளையாடும் அணிக்கு சிறந்ததாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் இதை நான் நினைக்கவில்லை. புற்கள் நிறைந்து இருக்கும் ஆடுகளத்தில் எப்போது வேண்டுமென்றாலும் நாங்கள் பேட்டிங் செய்வோம்’’ என்றார்.

இந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாதான் என்று பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டுடிருக்கும்போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை அபார பீல்டிங் மூலம் நெருக்குடிக்கு உள்ளாக்க முடியும். அவர் களத்தில் எப்போதுமே ஒரு மிரட்டலாக இருப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜா இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட பப்புவா நியூ கினியா அணி தகுதிப் பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இந்த இரண்டு அணிகளையும் தவிர மேலும் நான்கு அணிகள் குரூப் நிலைக்கு தகுதி பெறும். குரூப் நிலையில் இலங்கை, வங்காளதேசம் உள்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.