search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hashim Amla"

    • பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
    • இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லாவின் சாதனை ஒன்றை கோலி சமன் செய்துள்ளார். அதாவது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் கோலி தொடர்ச்சியாக 4-வது சதம் விளாசியுள்ளார். ஏற்கனவே இங்கு கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சதம் ( 128 ரன், 131 ரன் மற்றும் 110 ரன்) அடித்திருந்தார்.

    இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதே மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்து இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லாவின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார்.
    • எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருகிறார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா வீரரான ஹசீம் ஆம்லா, எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா தற்போது அறிவித்துள்ளார்.

    ஹசீம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும். அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும். மேலும் , 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    2019 உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது.

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹசிம் அம்லா 32 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். #hashimAmla #Smith
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ரன் எடுத்தார்.

    4-வது ரன்னை எடுத்த போது அவர் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். சுமித்தை அவர் முந்தினார். அம்லா 124-வது டெஸ்டில் 9282 ரன் எடுத்துள்ளார். சுமித் 9253 (116 டெஸ்ட்) 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். காலிஸ் 13,206 ரன்னுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார். #hashimAmla #Smith
    ×