search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோயிப் அக்தர்
    X
    சோயிப் அக்தர்

    ஆஸி. பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும்: பாக். பவுலர்களுக்கு அக்தர் அட்வைஸ்

    ஆஸ்திரேலியா தொடரின்போது பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும் என பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு அக்தர் அட்வைஸ் கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மூன்று பேர் 19 வயதிற்கு உட்பட்டோர். இதனால் பாகிஸ்தான் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவில் எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் நாம் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் என்பதை பாகிஸ்தான் இளம் வீரர்கள் அசத்தலான பந்து வீச்சால் தெரியப்படுத்த வேண்டும் என அக்தர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ‘Back Foot’ சென்று விளையாட வைக்க விரும்பினால், அவர்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும். இந்த நோக்கம் மிகமிக முக்கியமானது. ஓவருக்கு இரண்டு பந்துகளை பேட்ஸ்மேனின் கழுத்து மற்றும் தலையின் பக்கவாட்டை தாக்க வேண்டும்.

    கேப்டன் பந்து வீச்சாளர்களை விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தும் நோக்கத்தில் பந்து வீசும்படி கொண்டு செல்லக்கூடாது. பாதுகாப்பான கேப்டனை நான் விரும்பியதில்லை. பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது, கேப்டன் கட்டாயம் அட்டாக் நோக்கத்தில் இருக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×