search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹசிம் அம்லா
    X
    ஹசிம் அம்லா

    விராட் கோலி தலைமையிலான அணியை கடந்த காலத்துடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல: அம்லா

    விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியை கடந்த கால இந்திய அணியுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என அம்லா தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது.

    சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி அணிதான் தலைசிறந்த இந்திய அணி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள இந்திய அணியை கடந்த அணியுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என ஹசிம் அம்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசிம் அம்லா கூறும்போது ‘‘நான் தெண்டுல்கர், டிராவிட், லஷ்மண், கங்குலி, சேவாக் ஆகியோருக்கு எதிராக விளையாடிள்ளேன். உலகளவில் இதைவிட சிறந்த பேட்டிங் வரிசை இருக்க முடியாது.

    தற்போதுள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் ஒரு சீரான அணியாக உருவாகியுள்ளனர். சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு எதிராக விளையாடும்போது, அது சிறந்த அணியாக இருந்தது.

    அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சிறந்த பந்து வீச்சாளர்கள். நான் கடந்த 10 வருடங்களாக சிறந்த கிரிகெட் வீரர்களுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். ஒவ்வொரு அணியையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×