என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெல்லியில் நடக்கும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கம்பிர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் கடந்த நில நாட்களாக காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடக்கும் இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘டெல்லியில் கிரிக்கெட் அல்லது மற்ற விளையாட்டுக்கள் நடப்பதை விட காற்று மாசு பிரச்சனைதான் மிக முக்கியமானது. கிரிக்கெட் போட்டி நடப்பதைவிட டெல்லி மக்கள் இந்த பிரச்சனையைத்தான் மிகப்பெரியதாக கருதுவார்கள்.

    ஒட்டுமொத்த டெல்லியே பாதிப்பு உள்ளாகியுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இதற்கு நாம்தான் பொறுப்பு. காற்று மாசு தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதற்கு மக்கள்தான் முக்கிய காரணம். இன்னும் கடினமாக பாடுபட வேண்டும்.

    போட்டி நடந்தாலும், நடக்காவிட்டாலும் அதற்கான நான் உண்மையிலேயே கவலை அடையப் போவதில்லை. போட்டி நடக்கும் என நம்புகிறேன். அது நடக்க வேண்டும். ஆனால், டெல்லி மக்கள் வருடம் முழுவதும் காற்று மாசு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. இது போட்டியை விட மிகவும் முக்கியமானது விஷயமாக எடுத்துக் கொள்ள காரணமாக உள்ளது’’ உள்ளது.
    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட நாட்களாக அணிக்கு திரும்பாதது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்து விளையாடினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

    புவனேஷ்வர் குமார் காயம் குறித்து தேர்வுக்குழு தலைவர் தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஏதும் தெரிவிக்கவில்லை. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்தால் அவர் ஓய்வில் இருக்கிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரக்கெட் அகாடமில் அவருக்கு மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறை பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

    லேசான காயம் என்றால் அது குணமடைய இவ்வளவு நாள் ஆகாது. இதனால் அவரது காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தொடரின்போதே காயம் ஏற்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான அவரை காயத்துடன் விளையாட வைத்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

    ஏற்கனவே சகாவுக்கு காயம் ஏற்பட்டபோது என்சிஏ-வில் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறையில் ஈடுபட்டு வந்தார். திடீரென காயம் வீரியம் அடைந்துவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என இறுதிக் கட்டத்தில் என்.சி.ஏ. தெரிவித்தது. இதனால் சகா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாத நிலை ஏற்பட்டது.

    சமீபத்தில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் இங்கிலாந்து சென்று அறுசை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என என்சிஏ பரிந்துரை செய்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பும்ரா இன்னும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை.

    இதனால் என்.சி.ஏ.-வின் மறுசீரமைப்பு நடவடிக்கை மீது பல கேள்விகள் எழுந்துள்ளன.
    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்து வீச்சில் இலங்கை அணி 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இதனையடுத்து 2-வது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ஒசாடா பெர்னாண்டோ, ராஜபக்‌ஷா, கசன் ரஜிதா, ஆகியோருக்கு பதிலாக அவிக்‌ஷா பெர்ணாண்டோ, நிரோசன் டிக்வேல்லா, உடானா அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க்-க்கு பதிலாக பில்லி ஸ்டான்லேக் இடம் பெற்றார்.

    இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் முதலில் பேட் செய்தனர். குசல் மெண்டீஸ் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார். இதனையடுத்து குணதிலகா - அவிக்‌ஷா பெர்ணாண்டோ ஜோடி நிதானமாக ஆடினர். குணதிலகா 21 ரன்னிலும் அவிக்‌ஷா பெர்ணாண்டோ 17 ரன்னிலும் குசல் பெரேரா 27 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.
    பயங்கரவாதிகள் மிரட்டல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தப் போட்டித் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் சிலருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.க்கு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கடிதம் ஒன்று வந்துள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து அகில இந்திய லஷ்கர் என்ற பெயரில் வந்துள்ள அந்த கடிதத்தில் விராட் கோலி மற்றும் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டல் கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) தேசிய புலனாய்வு அமைப்பு அனுப்பி உள்ளது. இதையடுத்து வங்காளதேச தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே தீவிரவாதிகள் பெயரில் வந்த இந்த கடிதம் பொய்யானது என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கடிதம் பொய்யானதாக இருந்தாலும் விராட் கோலிக்கும், அவரது வீட்டுக்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர்.

    இதேபோல மற்ற இந்திய வீரர்களுக்கும், வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். போட்டி நடக்கும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - வங்காளதேச அணிகள் முதல் பகல் இரவு ஆட்டத்தில் நவம்பர் 22-ம் தேதி மோத உள்ள நிலையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாட உள்ளது.

    கிரிக்கெட் வாரிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்ற கங்குலியின் தீவிர முயற்சியால் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் பங்கேற்கிறது.

    கொல்கத்தாவில் வழக்கமாக பகல்-இரவு ஆட்டங்கள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். ஆனால் பனிப்பொலிவு மற்றும் கூட்டத்தினரை கவர்ந்திழுக்க பகல்- இரவு டெஸ்ட் போட்டியை மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

    இதை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. இதனால் பகல்-இரவு போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் 68 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. அங்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 100, ரூ. 150 என டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகளை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேச அணியும் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நேரில் வந்து பார்க்கிறார்.

    வங்காளதேச அணியின் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ‌ஷகிப்அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டு தடை விதித்துள்ளது.

    சூதாட்ட தரகர்கள் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது.

    இதையடுத்து வங்காள தேச அணியின் 20 ஓவர் போட்டிக்கு மகமத்துல்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைபோல் டெஸ்ட் அணிக்கு மொமினூல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
    ஜார்க்கண்டில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
    ராஞ்சி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஜார்க்கண்டின் ஜே.ஆர்.டி. டாடா ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பரூக் சவுத்ரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின், முதல் பாதியின் முடிவில் ஐதராபாத் அணியின் மார்செலினோ பெரைரா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் அன்கிட் ஜாதவ் மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    மேலும், 75வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
    ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு வகை அணிக்கும் ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருந்து வந்தார்.

    மெஹ்முதுல்லா

    ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் வங்காளதேச டி20 கிரிக்கெட் அணிக்கு மெஹ்முதுல்லா கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்யூ கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    உலகக்கோப்பைக்கான குவாலிபையர் முதல் பிளே-ஆப் போட்டியில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் அணியை துவம்சம் செய்து டி20 உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றது நெதர்லாந்து.
    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

    ‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இன்று முதல் பிளே-ஆப் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 9 விக்கெட் இழப்பிற்க 80 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. அந்த அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 81 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கான முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது.
    மாற்று வீராங்கனையாக களம் இறங்கிய கிகி பெர்ட்டென்ஸ் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்தார்.
    உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்று வருகிறது.

    8 வீராங்கனைகளும் ரெட், பர்பிள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ரெட் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி இடம் பிடித்துள்ளார். இதே பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஒசாகா இடம் பிடித்திருந்தார்.

    தோள்பட்டை காயம் காரணமாக ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக 10-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டென்ஸ் சேர்க்கப்பட்டார். கிகி பெர்ட்டென்ஸ் - ஆஷ்லே பார்ட்டி இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது.

    முதல் செட்டை ஆஷ்லே பார்ட்டி 6-3 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் கிகி பெர்ட்டென்ஸ் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஆஷ்லே பார்ட்டியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இதனால் ஆஷ்லே பார்ட்டி 2-வது செட்டை 3-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் அதிர்ச்சிகரமான வகையில் இழந்து தோல்வியைத் தழுவினார். இரண்டு மணி நேரம் போராடி முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார் கிகி பெர்ட்டென்ஸ்.
    ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று வகையான குற்றச்சாட்டில் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது ஐசிசி.
    வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது சூதாட்டக்காரர்கள் ஷாகிப் அல் ஹசனை நாடியுள்ளனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் விளையாடும்போதும் நாடியுள்ளனர்.

    இதுகுறித்த விஷயம் ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷாகிப் அல் ஹசன் தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

    இதனால் ஓராண்டு சஸ்பெண்ட் உடன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி ஷாகிப் அல் ஹசனுக்கு தடைவிதித்துள்ளது.

    ஷாகிப் அல் ஹசன்

    மேலும், ஷாகிப் அல் ஹசன் தடைக்காலத்தின் ஒரு பகுதியான சஸ்பெண்ட் கண்டிசனை ஒத்துக்கொண்டால், மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் 29-ந்தேதியில் இருந்து அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

    இந்த தடைகுறித்து ஷாகிப் அல் ஹசன் விடுத்துள்ள அறிக்கையில் ‘‘மிகவும் விரும்பும் விளையாட்டில் எனக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கி்றது. ஆனால், என்னை அணுகியது குறித்து தகவல் தெரிவிக்காததற்கு இந்த தடை என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    பிசிசிஐ தலைவர் கங்குலியின் கோரிக்கையை ஏற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது.
    ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக பகல்-இரவு போட்டியை நடத்தி காட்டியது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஒரு போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலியா விரும்பியது. ஆனால், இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயராகவில்லை என பிசிசிஐ அவர்களது கோரிக்கையை நிராகரித்தது.

    தற்போது பிசிசிஐ-யின் தலைவராக பதவி ஏற்றுள்ள கங்குலி, இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் பகல்-இரவு டெஸ்ட் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட விராட் கோலி சம்மதம் தெரிவித்ததாக கங்குலி கூறியிருந்தார்.

    இதனால் உடனடியாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த இருக்கிறோம். நீங்கள் இந்த டெஸ்டில் விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    உறுதியாக வங்காளதேச கிரிக்கெட் போர்டு இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவை அறிவிக்கி்றோம் என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று மாலை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேசம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
    தோள்பட்டை காயம் காரணமாக பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் பைனல்ஸ் தொடரில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார்.
    பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் தலைசிறந்த முன்னணி 8 வீராங்கனைகளுக்கு இடையில் ஆண்டுதோறும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த வருடத்திற்கான பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷென்சென்னில் நடைபெற்று வருகிறது. ஒரு பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா இடம் பெற்றிருந்தார். நேற்று முன்னதினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஒசாகா பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார்.

    இதில் கடும் சிரமத்திற்குப்பின் ஒசாகா 7(7)-6(1), 4-6, 6-4 என வெற்றி பெற்றார். இன்று ஆஷ்லே பார்ட்டியை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால், தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து ஒசாகா விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கிகி பெர்ட்டென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ×