search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனேஷ்வர் குமார்
    X
    புவனேஷ்வர் குமார்

    புவனேஷ்வர் குமார் காயம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத கிரிக்கெட் நிர்வாகம்

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட நாட்களாக அணிக்கு திரும்பாதது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்து விளையாடினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

    புவனேஷ்வர் குமார் காயம் குறித்து தேர்வுக்குழு தலைவர் தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஏதும் தெரிவிக்கவில்லை. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்தால் அவர் ஓய்வில் இருக்கிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரக்கெட் அகாடமில் அவருக்கு மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறை பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

    லேசான காயம் என்றால் அது குணமடைய இவ்வளவு நாள் ஆகாது. இதனால் அவரது காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தொடரின்போதே காயம் ஏற்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான அவரை காயத்துடன் விளையாட வைத்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

    ஏற்கனவே சகாவுக்கு காயம் ஏற்பட்டபோது என்சிஏ-வில் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறையில் ஈடுபட்டு வந்தார். திடீரென காயம் வீரியம் அடைந்துவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என இறுதிக் கட்டத்தில் என்.சி.ஏ. தெரிவித்தது. இதனால் சகா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாத நிலை ஏற்பட்டது.

    சமீபத்தில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் இங்கிலாந்து சென்று அறுசை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என என்சிஏ பரிந்துரை செய்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பும்ரா இன்னும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை.

    இதனால் என்.சி.ஏ.-வின் மறுசீரமைப்பு நடவடிக்கை மீது பல கேள்விகள் எழுந்துள்ளன.
    Next Story
    ×