search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலிங்கா விக்கெட் செய்யப்பட்ட காட்சி
    X
    மலிங்கா விக்கெட் செய்யப்பட்ட காட்சி

    2-வது 20 ஓவர் போட்டி - ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சில் இலங்கை 117 ரன்னில் ஆல் அவுட்

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்து வீச்சில் இலங்கை அணி 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இதனையடுத்து 2-வது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ஒசாடா பெர்னாண்டோ, ராஜபக்‌ஷா, கசன் ரஜிதா, ஆகியோருக்கு பதிலாக அவிக்‌ஷா பெர்ணாண்டோ, நிரோசன் டிக்வேல்லா, உடானா அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க்-க்கு பதிலாக பில்லி ஸ்டான்லேக் இடம் பெற்றார்.

    இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் முதலில் பேட் செய்தனர். குசல் மெண்டீஸ் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார். இதனையடுத்து குணதிலகா - அவிக்‌ஷா பெர்ணாண்டோ ஜோடி நிதானமாக ஆடினர். குணதிலகா 21 ரன்னிலும் அவிக்‌ஷா பெர்ணாண்டோ 17 ரன்னிலும் குசல் பெரேரா 27 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.
    Next Story
    ×