என் மலர்
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேச அணி இன்று டெல்லி வந்துள்ளது.
ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டு தடையால் விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என வங்காளதேச டி20 அணி கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஹ்முதுல்லா கூறுகையில் ‘‘ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களை மேலும் உழைக்க உத்வேகமாக உருவாக்கும். நாட்டுக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய கவுரவம் ஏதும் இருக்க முடியாது. அணியை நடத்தும் பொறுப்பு எனக்குள்ளது. அதனால் என்னுடைய ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அணிக்காக வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.

டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0-0 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ள கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
உலகக்கோப்பை குவாலிபையர் பிளே-ஆப் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. முதல் பிளே-ஆப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி நெதர்லாந்து 3-வது அணியாக தகுதி பெற்றது.
இன்று நடைபெற்ற 3-வது குவாலிபையிங் பிளே-ஆப் பேட்டியில் ஸ்காட்லாந்து - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 198 ரன்கள் குவித்தது. முன்சே 65 ரன்களும், பெர்ரிங்டன் 18 பந்தில் 48 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து டி20 உலகக்கோப்பைக்கான முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது.

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்று வருகிறது.
8 வீராங்கனைகளும் ரெட், பர்பிள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவில் உள்ள நான்கு வீராங்கனைகளும் மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பர்பிள் பிரிவில் இடம் பிடித்துள்ள சிமோனா ஹாலெப் - எலினா ஸ்விடோலினா மோதினார்கள்.
முதல் செட்டை எலினா 7-5 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா, அதையும் 6-3 எனக் கைப்பற்றினார். ஏற்கனவே, கரோலினா பிளிஸ்கோவாவை 2-0 என வீழ்த்தியிருந்தார். இரண்டு வெற்றிகள் மூலம் முதல் நபராக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய ரோஜர் பெடரர், ஏடிபி கோப்பை டென்னிஸில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற இருக்கிறது. உலகளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் 24 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கிறது.
ஸ்பெயின் அணிக்காக நடாலும், செர்பியா அணிக்காக ஜோகோவிச்சும் விளையாட இருக்கின்றனர். சுவிட்சர்லாந்து அணிக்காக ரோஜர் பெடரர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டி நடைபெறும் இரண்டு வாரங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்தத் தொடரில் இருந்து பெடரர் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். துணைப் பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் துணைப் பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் போன்றோர் ஆலோசகராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆண்ட்ரூ மெக்டொனால்டு துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரிம் நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு - வீரர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை நடைமுறை படுத்தப்படும். ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்கும்போது பாதுகாப்பு அதிகரிக்கும் என பேட் கம்மின்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரி்க்கெட் போர்டு நிராகரித்தது. இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘இந்த வருடம் என்னுடைய கோரிக்கை நிறைவேறாது. இந்த வருடம் ஒரு வருடத்திற்கு மேல் ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.
வருங்காலத்தில் இது மாறும் என நம்புகிறேன். அவர்களிடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும். அதற்கு எப்படிபட்ட ரியாக்சன் வருகிறது என்று பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும், அவர்களுடைய வேலை 12 மாதங்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்’’ என்றார்.

வங்காளதேச அணிக்கெதிராக முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது இந்தியாவுக்கு புதிய சவால் என சகா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேச அணிக்கெதிரான இந்த போட்டி நவம்பர் 22-ந்தேதி ஈடன் கார்டனில் தொடங்குகிறது.
பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவது இந்திய அணிக்கு புதிய சவால் என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘இந்த போட்டி எங்களுக்கு முன் இருக்கும் புதிய சவால். பிங்க் பந்தில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. நான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உள்ளூர் போட்டியில் விளையாடிய அனைத்து சம்பவங்களையும் நினைவு கூற முடியவில்லை. முகமது ஷமி மிகவும் வேகமாக பந்து வீசினார். அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், விக்கெட் கீப்பராக பந்து பிடிக்கும் பணி மிகவும் கடினம்’’ என்றார்.

இலங்கை அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரின் அரை சதத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன்:
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
ஆஸ்திரேலியா அணி 13 ஓவரில் 118 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 36 பந்துகளில் 56 (6 பவுண்டரி) ரன்களும் டேவிட் வார்னர் 41 பந்துகளில் (9 பவுண்டரி) 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவரை தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.

டெல்லியில் நடக்கும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கம்பிர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த நில நாட்களாக காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடக்கும் இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘டெல்லியில் கிரிக்கெட் அல்லது மற்ற விளையாட்டுக்கள் நடப்பதை விட காற்று மாசு பிரச்சனைதான் மிக முக்கியமானது. கிரிக்கெட் போட்டி நடப்பதைவிட டெல்லி மக்கள் இந்த பிரச்சனையைத்தான் மிகப்பெரியதாக கருதுவார்கள்.
ஒட்டுமொத்த டெல்லியே பாதிப்பு உள்ளாகியுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இதற்கு நாம்தான் பொறுப்பு. காற்று மாசு தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதற்கு மக்கள்தான் முக்கிய காரணம். இன்னும் கடினமாக பாடுபட வேண்டும்.
போட்டி நடந்தாலும், நடக்காவிட்டாலும் அதற்கான நான் உண்மையிலேயே கவலை அடையப் போவதில்லை. போட்டி நடக்கும் என நம்புகிறேன். அது நடக்க வேண்டும். ஆனால், டெல்லி மக்கள் வருடம் முழுவதும் காற்று மாசு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. இது போட்டியை விட மிகவும் முக்கியமானது விஷயமாக எடுத்துக் கொள்ள காரணமாக உள்ளது’’ உள்ளது.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட நாட்களாக அணிக்கு திரும்பாதது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்து விளையாடினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
புவனேஷ்வர் குமார் காயம் குறித்து தேர்வுக்குழு தலைவர் தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஏதும் தெரிவிக்கவில்லை. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்தால் அவர் ஓய்வில் இருக்கிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரக்கெட் அகாடமில் அவருக்கு மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறை பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.
லேசான காயம் என்றால் அது குணமடைய இவ்வளவு நாள் ஆகாது. இதனால் அவரது காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தொடரின்போதே காயம் ஏற்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான அவரை காயத்துடன் விளையாட வைத்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே சகாவுக்கு காயம் ஏற்பட்டபோது என்சிஏ-வில் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான நடைமுறையில் ஈடுபட்டு வந்தார். திடீரென காயம் வீரியம் அடைந்துவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என இறுதிக் கட்டத்தில் என்.சி.ஏ. தெரிவித்தது. இதனால் சகா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாத நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் இங்கிலாந்து சென்று அறுசை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என என்சிஏ பரிந்துரை செய்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பும்ரா இன்னும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை.
இதனால் என்.சி.ஏ.-வின் மறுசீரமைப்பு நடவடிக்கை மீது பல கேள்விகள் எழுந்துள்ளன.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்து வீச்சில் இலங்கை அணி 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து 2-வது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ஒசாடா பெர்னாண்டோ, ராஜபக்ஷா, கசன் ரஜிதா, ஆகியோருக்கு பதிலாக அவிக்ஷா பெர்ணாண்டோ, நிரோசன் டிக்வேல்லா, உடானா அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க்-க்கு பதிலாக பில்லி ஸ்டான்லேக் இடம் பெற்றார்.
இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் முதலில் பேட் செய்தனர். குசல் மெண்டீஸ் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார். இதனையடுத்து குணதிலகா - அவிக்ஷா பெர்ணாண்டோ ஜோடி நிதானமாக ஆடினர். குணதிலகா 21 ரன்னிலும் அவிக்ஷா பெர்ணாண்டோ 17 ரன்னிலும் குசல் பெரேரா 27 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.