என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம் காம்பிர்
    X
    கவுதம் காம்பிர்

    கிரிக்கெட்டை விட காற்று மாசுதான் டெல்லி மக்களுக்கு முக்கியமானது: கவுதம் காம்பிர்

    டெல்லியில் நடக்கும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கம்பிர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் கடந்த நில நாட்களாக காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடக்கும் இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘டெல்லியில் கிரிக்கெட் அல்லது மற்ற விளையாட்டுக்கள் நடப்பதை விட காற்று மாசு பிரச்சனைதான் மிக முக்கியமானது. கிரிக்கெட் போட்டி நடப்பதைவிட டெல்லி மக்கள் இந்த பிரச்சனையைத்தான் மிகப்பெரியதாக கருதுவார்கள்.

    ஒட்டுமொத்த டெல்லியே பாதிப்பு உள்ளாகியுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இதற்கு நாம்தான் பொறுப்பு. காற்று மாசு தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதற்கு மக்கள்தான் முக்கிய காரணம். இன்னும் கடினமாக பாடுபட வேண்டும்.

    போட்டி நடந்தாலும், நடக்காவிட்டாலும் அதற்கான நான் உண்மையிலேயே கவலை அடையப் போவதில்லை. போட்டி நடக்கும் என நம்புகிறேன். அது நடக்க வேண்டும். ஆனால், டெல்லி மக்கள் வருடம் முழுவதும் காற்று மாசு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. இது போட்டியை விட மிகவும் முக்கியமானது விஷயமாக எடுத்துக் கொள்ள காரணமாக உள்ளது’’ உள்ளது.
    Next Story
    ×