search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட் கம்மின்ஸ்
    X
    பேட் கம்மின்ஸ்

    பேட் கம்மின்ஸ் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரிம் நிராகரித்துள்ளது.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு - வீரர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை நடைமுறை படுத்தப்படும்.  ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்கும்போது பாதுகாப்பு அதிகரிக்கும் என பேட் கம்மின்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

    அவரது கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரி்க்கெட் போர்டு நிராகரித்தது. இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘இந்த வருடம் என்னுடைய கோரிக்கை நிறைவேறாது. இந்த வருடம் ஒரு வருடத்திற்கு மேல் ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

    வருங்காலத்தில் இது மாறும் என நம்புகிறேன். அவர்களிடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும். அதற்கு எப்படிபட்ட ரியாக்சன் வருகிறது என்று பார்க்க வேண்டும்.  யாராக இருந்தாலும், அவர்களுடைய வேலை 12 மாதங்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்’’ என்றார்.
    Next Story
    ×