search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாகிப் அல் ஹசன்
    X
    ஷாகிப் அல் ஹசன்

    ஷாகிப் அல் ஹாசன் இந்திய தொடரில் இடம் பெறுவது சந்தேகம்

    இந்திய தொடருக்கான வங்காளதேச அணியில் சாகிப் அல் ஹசன் இடைபெறுவது சந்தேகம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. 3-ம் தேதி முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

    இந்த சூழலில், வங்காளதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.  வங்காளதேச கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

    வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாகிப் அல் ஹசன் ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

    கடந்த இரு நாட்களாக வங்கதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை.
    Next Story
    ×