என் மலர்
விளையாட்டு
கரீபியன் பிரிமீயர் லீக் அணியான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ராபின் சிங், பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் இடம்பிடித்து விளையாடி வருகிறது.
இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த ராபின் சிங். 2020 சீசனில் ராபின் சிங்கை நீக்கி விட்டு சைமன் ஹெல்மோட்டை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. அதேபோல் பிராத்வைட்டை நீக்கிவிட்டு ரயாத் எம்ரிட்டை கேப்டனாக நியமித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் ராம்தினை வாங்கியுள்ளது. ராம்தின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2017 மற்றும் 2019-ல் கோப்பயை வெல்லும்போது அந்த அணியில் இருந்தவர். ராம்தின் ஏற்கனவே கயானா அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
எவின் லிவிஸ், ஷெல்டன் காட்ரெல், பேபியன் ஆலன், அல்ஜாரி ஜோசப், டொமினிக் டிரேக்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கரை விட ரோகித் சர்மாதான் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைன் டவ்ல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் சச்சின் தெண்டுல்கர். அவருக்குப்பின் 2013-ல் இருந்து ரோகித் சர்மா தற்போது வரை தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கர் படைத்துள்ளார். ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை விட ரோகித் சர்மாதான் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைன் டவ்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைன் டவ்ல் கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் கடந்த காலத்தைவிட சிறப்பாக உள்ளது. 70, 80 ரன்களை கடந்து 90 ரன்களை தொடும்போது கூட பதற்றம் அடைவதில்லை. அவர் தனித்துவமான வீரர்.
இந்தியாவை பொறுத்த வரைக்கும் தனிப்பட்ட முறையில் அவரைத்தான் நான் முதலில் தேர்வு செய்வேன். எல்லா காலக்கட்டத்திலும் இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர் ரோகித் சர்மாதான். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சராசரி 49. ஸ்டிரைக் ரேட் 88. சச்சின் தெண்டுல்கரின் சராசரி 44. ஸ்டிரைக் ரேட் 88. ஆகவே, நம்பர் அடிப்படையில் பார்த்தால் ரோகித் சர்மா சச்சினை விட சிறந்தவர். இதனால் அவரை நம்பர் ஒன்னாக தேர்வு செய்துள்ளேன். அதற்கு அடுத்த வரிசையில் விராட் கோலி, எம்எஸ் டோனி ஆர்டரில் வருவார்கள்’’ என்றார்.
விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விராட் கோலி, சாய்னா நேவால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த விஷ வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர்.
சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்படைந்த ஒவ்வொருவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது மிகவும் வலியை ஏற்படுத்தக்கூடிய பேரழிவு. பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கடவுள் துணிச்சலை கொடுப்பதற்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பிவி சிந்து, சானியா மிர்சா, முகமது கைப், ஷிகர் தவான் போன்றோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை விட தற்போது வலுவாக உள்ளது என பிராவோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் வெயின் பிராவோ இடம் பிடித்திருந்தார்.
அதன்பின் ஓய்வு பெற்ற பிராவோ, ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 2016-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியின் பேட்டிங்கை விட தற்போதைய அணியின் பேட்டிங் வலுவானது என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘நாங்கள் கடைசியாக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடினோம். அப்போது எங்கள் அணியின் கூட்டம் நடைபெற்றது. பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பேட்டிங் வரிசை குறித்து விளக்கினார். என்னுடைய பெயர் 9-வது இடத்தில் இருந்தது.
நான் 9-வது இடத்தில் களம் இறங்கினால் அணியில் சம்பந்தப்பட்டவனாக இருப்பேன் என நினைக்கவில்லை என்று சக வீரர்களிடம் தெரிவித்தேன். அதன்பின் அணியின் பேட்டிங் வரிசையை குறித்து புரிந்து கொண்டேன். உலக கோப்பையை வென்ற அணியை விட தற்போதைய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது என்று சக வீரர்களிடம் கூறினேன்’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் போன்றது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே-வுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலின்போது மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
சிஎஸ்கே ஜெர்சியை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. என்னது இது? கனவுதானா என முதலில் எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே-வுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாகவே பார்க்கப்படும்.
இரு அணிகளுக்கும் ஆட்டம் சவாலானதாக இருக்கும். திடீரென மும்பை அணி ஜெர்சியை அணியாமல் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்தபோது எனக்குக் கடினமாக இருந்தது. இதற்குப் பழகுவதற்குச் சிறிது நாட்கள் ஆனது.
2018-ல் முதலிலேயே மும்பைக்கு எதிராக விளையாடினோம். அதனால் நல்லவேளை இந்த ஆட்டம் சீக்கிரமே நடந்து முடிந்தது எனத் தோன்றியது. முதல் சீஸன் முழுக்க எனக்கு விசித்திரமாகவே இருந்தது. இரண்டாவது சீஸனில் அந்தளவுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினோம். நான், இந்த போட்டியை நாங்கள் ஆரம்பத்தில் முடித்திருப்பது நல்லது என தோன்றுகிறது. முதல் சீசன் முழுவதும், அது கடினமாக இருந்தது. அதன் பிறகு, கோப்பையை வென்றோம். இரண்டாவது சீசன் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2017 வரை 10 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககரா எம்.சி.சி. தலைவராக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விதிகளை உருவாக்குவதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) முன்னோடியாக இருக்கும் லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி.) தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா இருக்கிறார். இந்த பதவிக் காலம் ஓராண்டாகும்.
இந்த நிலையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் இந்த கிளப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு சங்ககராவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி அவர் அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் வரை இந்த பணியில் தொடருவார். அடுத்த மாதம் 24-ந்தேதி நடக்கும் இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்.
எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவியை பொறுத்தமட்டில் விராட் கோலி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடுகையில் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 5-வது மற்றும் 6-வது இடம் குறித்து பேசுகையில், அந்த இடத்துக்கு யார் களம் இறங்குவார்கள் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. 5-வது இடத்தில் லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். ஆனால் டோனிக்கு மாற்று வீரராக கருதப்படும் ரிஷாப் பண்ட் தண்ணீர் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். ரிஷாப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டு இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இருப்பினும் அவர் அணியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்றால் 22 வயதிலேயே அவரிடம் இருக்கும் திறமையை பார்க்கின்றனர்.
ஒரு வீரராக விராட்கோலிக்கு எந்தவித அங்கீகாரமும் தேவையில்லை. பேட்டிங் சாதனைகளே அவரை பற்றிய முழுமையான கதையையும் சொல்லும். வீரராக விராட்கோலி வியப்பூட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கேப்டன் பதவியை பொறுத்தமட்டில் அவர் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அவர் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய கேப்டன் என்று என்னால் சொல்ல முடியும்.
1990 மற்றும் 2000-ம் களில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கும், தற்போதைய இந்திய அணிக்குமான வித்தியாசம் ரொம்ப அதிகமானதாகும். அந்த அணியோடு தற்போதைய இந்திய அணியை ஒப்பிடமுடியாது. அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 முறை உலக கோப்பையை வென்றது. 1996-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது. அந்த நிலையை தற்போதைய இந்திய அணியால் எட்ட முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அணியின் கலவை மிகவும் முக்கியமானதாகும். குழப்பம் இல்லாமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை (0-3) இழந்தபிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ‘நாங்கள் இந்த ஆண்டில் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதனால் ஒருநாள் போட்டி முடிவை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை’ என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தொடரை வென்று விட்டு அப்படி சொல்லி இருந்தால் அது வித்தியாசமானதாக இருந்து இருக்கும். தோல்வி கண்ட பிறகு இதுபோல் சாக்கு போக்கு சொல்லுவது தவறானதாகும்.

கொரோனா அச்சத்தால் வீட்டிலேயே முடங்கி உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் களம் இறங்குவதற்கு முன்பாக ஒரு மாத கால பயிற்சி அவசியம் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று ஆன்லைன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா தாக்கம் முடிந்து எத்தகைய கிரிக்கெட் (சர்வதேச அல்லது உள்ளூர்) போட்டிகளில் விளையாடுவது என்றாலும், அதற்கு முன்பாக வீரர்கள் முறையாக பயிற்சி எடுத்து தயாராவதற்கு குறைந்தது 3 அல்லது 4 வாரங்கள் அவசியமாகும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும்.
அணியின் டிரெய்னர் வழங்கும் ஆலோசனைப்படி வீட்டிலேயே தினமும் பயிற்சி மேற்கொள்கிறேன். தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடனும், நேர்மறை எண்ணத்துடனும் இருக்க வேண்டியது முக்கியமாகும். எனது மனைவிக்கு சமையலிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் உதவுகிறேன். எனது மகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். அவளுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். நான் ஜூடோவில் கருப்பு பெல்ட் வாங்கியவன். அதனால் வாரத்துக்கு 3-4 தடவை கராத்தே பயிற்சியில் ஈடுபடுகிறேன்.
மறுபடியும் கிரிக்கெட் எப்போது ஆரம்பிக்கும் என்பது தெரியாது. களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். எது எப்படி என்றாலும் நமது வாழ்க்கை முறையில் இனி நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். அதே சமயம் கிரிக்கெட் களத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
வழக்கமாக விக்கெட் வீழ்த்தியதும் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் கொண்டாடுவோம். இனி இந்த பாணியை தவிர்க்க (கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால்) வேண்டியது வரும். விக்கெட்டை வீழ்த்தியதும் நமஸ்தே (இருகரம்கூப்பி வணக்கம் தெரிவிப்பது) சொல்வது போன்று ஏதாவது ஒன்றை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்.
முந்தைய காலத்தில் விக்கெட் சரிந்ததும் பீல்டர்கள் அங்கிருந்து ஓடிவராமல் தனது பகுதியில் நின்றபடியே கைதட்டுவார்கள். அந்த பழைய நடைமுறையை நாம் பின்பற்றுவோம் என்று நினைக்கிறேன். கைகுலுக்குவதற்கு பதிலாக நமஸ்தே சொல்லலாம். எந்த விஷயத்தையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
இந்திய கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் மிகச்சிறந்த வீரர்கள். இருவரின் ஸ்டைலும், ஆட்ட அணுகுமுறையும் முற்றிலும் வித்தியாசமானது. அவர்கள் வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும் திறம்பட விளையாடக்கூடியவர்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுமித்துடன் இணைந்து மிகவும் ரசித்து அனுபவித்து விளையாடி இருக்கிறேன். கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதும் வேடிக்கையானது. ஒருவருக்கொருவர் சாதனையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வோம். எங்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. பேட்டிங் போது ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து ஆடுவோம்.
இவ்வாறு ரஹானே கூறினார்.

திரும்பவும் இதுபோன்று கிண்டல் செய்தால் முகத்தில் குத்துவேன் என்று மேத்யூ ஹெய்டன் எச்சரித்தார் என பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வயதிலேயே அறிமுகம் ஆனவர் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல். தொடர்ந்து இவரால் இந்திய அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு தகவல்களை தெரியப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் மேத்யூ ஹெய்டனுடன் நடைபெற்ற மோதல் குறித்து பார்தீவ் பட்டேல் நினைவு கூர்ந்துள்ளார்.
பார்தீவ் பட்டேல் இதுகுறித்து கூறுகையில் ‘‘2004-ல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இர்பான் பதான் மேத்யூ ஹெய்டனை அவுட்டாக்கினார். ஏற்கனவே ஹெய்டன் சதம் அடித்திருந்தாலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இர்பான் பந்தில் வீழ்ந்தார். அப்போது நான் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றேன். ஹெய்டன் என்னை கடந்து செல்லும்போது ‘ஹூ ஹூ’ என்று செய்தேன்.
இதனால் என்மீது மிகவும் கோபமாக இருந்தார். பிரிஸ்பேன் வீரர்களின் அறை குகை போன்று இருக்கும். அதில் நின்றிருந்தார். நான் மீண்டும் அறைக்கு செல்லும்போது, இதுபோல் மீண்டும் செய்தால் முகத்தில் குத்து விடுவேன் என்று எச்சரித்தார். நான் அவரிடம் வருத்தம் தெரிவித்து அங்கே நின்றேன். அவர் சென்று விட்டார்’’ என்றார்.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடும்போது நண்பர்களாக மாறிவிட்டோம் எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி 1996, 1999, 2003 உலக கோப்பைகளை வெல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்கியவர் வாசிம் அக்ரம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அமிர் சோஹைல். 1992-ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லும்போது தொடக்க வீரராக களம் இறங்கியவர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வாசிம் அக்ரம். இவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். உலக கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இந்நிலையில் 1992-க்குப் பிறகு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லக்கூடாது என்பதை உருவாக்கியவர் வாசிம் அக்ரம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ளார்.
வாசிம் அக்ரம் குறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘இது மிகவும் எளிது. ஒருபக்கம் 1992 உலக கோப்பையை வைத்துவிட்டு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை பற்றி பேசலாம். 1995-ல் ரமீஸ் ராஜா கேப்டனாக இருந்தார். அதற்கு முன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார். அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவர் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாகியிருக்க முடியாது.
2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலக கோப்பைக்கும் முன் கேப்டன்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரிந்து கொள்ளலாம். அதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்காற்றியிருப்பார்.
பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வாசிம் அக்ரம், 1992-ம் ஆண்டுக்குப்பின் உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார். அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பைகளை வென்றிருக்கலாம்.
இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து நாடகமும் நடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் பின்னால் உள்ள குற்றவாளியை முன்னணியில் கொண்டு வரவேண்டும்’’ என்றார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஓபன் நடைபெறுமா? என்ற கேள்வியுடன் உள்ளது. மேலும் ஏடிபி டென்னிஸ் தொடர்கள் கேள்விக்குறியாக உள்ளன.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு டென்னிஸ்க்கு மிகப்பெரிய இழப்பு. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டென்னிஸ் போட்டி மீண்டும் தொடங்கும் என நம்புவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரபேல் நடால் கூறுகையில் ‘‘டென்னிஸ் போட்டிகள் முடிந்த அளவிற்கு விரைவாக தொடங்கும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வது, ஓட்டலில் தங்குவது, விமான நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்வது குறித்து யோசிக்கிறேன்.
2021 ஜனவரிக்குள் சகஜ நிலைக்கு திரும்பி போட்டிகளை வழக்கம்போல் நடத்தலாம் என்று உத்தரவாதம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட தயாராக இருக்கிறேன். இந்த வருடம் நடைபெற இருக்கும் டென்னிஸ் தொடர்களை காட்டிலும் ஆஸ்திரேலிய ஓபனை அதிக அளவில் எதிர்பார்க்கிறேன். 2020 வருடத்தை இழந்து விட்டதாக பார்க்கிறேன்’’ என்றார்.
ஒயிட்பால் கிரிக்கெட்டில் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணியைக்கூட 1985-ல் விளையாடிய அணியால் வீழ்த்த முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர். அதேபோல் 1985-ல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது. இந்த அணியிலும் ரவி சாஸ்திரி இடம்பிடித்திருந்தார்.
உலக கோப்பையை வென்ற 1983-ல் இருந்த அணியைவிட 1985-ல் இருந்த அணிதான் ஒயிட்பால் கிரிக்கெட் சிறந்தது. அந்த அணியால் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘1985-ல் உள்ள அணியால் எந்த அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். இதில் எந்த சந்தேகமுல் இல்லை.
1985-ல் இருந்து அணி 1983-ல் உலக கோப்பையை வென்ற அணியைவிட சிறந்தது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இரண்டு அணிகளிலும் நான் விளையாடியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 1983 உலக கோப்பையிலும், 1985 உலக சாம்பியன்ஷிப் அணியிலும் விளையாடியுள்ளேன்.
1983-ல் இருந்த 80 சதவீத வீரர்கள் 1985-ல் விளையாடிய அணியில் இருந்தனர். ஆனால், சிவராமகிருஷ்ணன், விஷ்வநாத், அசாருதீன் போன்ற இளைஞர்கள் அணியில் இணைந்தனர். ஏற்கனவே அனுபவ வீரர்கள் இருந்ததால் சிறந்த அணியாக திகழ்ந்தது’’ என்றார்.