என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஓபன் நடைபெறுமா? என்ற கேள்வியுடன் உள்ளது. மேலும் ஏடிபி டென்னிஸ் தொடர்கள் கேள்விக்குறியாக உள்ளன.

    இந்நிலையில் 2020-ம் ஆண்டு டென்னிஸ்க்கு மிகப்பெரிய இழப்பு. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டென்னிஸ் போட்டி மீண்டும் தொடங்கும் என நம்புவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரபேல் நடால் கூறுகையில் ‘‘டென்னிஸ் போட்டிகள் முடிந்த அளவிற்கு விரைவாக தொடங்கும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வது, ஓட்டலில் தங்குவது, விமான நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்வது குறித்து யோசிக்கிறேன்.

    2021 ஜனவரிக்குள் சகஜ நிலைக்கு திரும்பி போட்டிகளை வழக்கம்போல் நடத்தலாம் என்று உத்தரவாதம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட தயாராக இருக்கிறேன். இந்த வருடம் நடைபெற இருக்கும் டென்னிஸ் தொடர்களை காட்டிலும் ஆஸ்திரேலிய ஓபனை அதிக அளவில் எதிர்பார்க்கிறேன். 2020 வருடத்தை இழந்து விட்டதாக பார்க்கிறேன்’’ என்றார்.
    ஒயிட்பால் கிரிக்கெட்டில் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணியைக்கூட 1985-ல் விளையாடிய அணியால் வீழ்த்த முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர். அதேபோல் 1985-ல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது. இந்த அணியிலும் ரவி சாஸ்திரி இடம்பிடித்திருந்தார்.

    உலக கோப்பையை வென்ற 1983-ல் இருந்த அணியைவிட 1985-ல் இருந்த அணிதான் ஒயிட்பால் கிரிக்கெட் சிறந்தது. அந்த அணியால் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘1985-ல் உள்ள அணியால் எந்த அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். இதில் எந்த சந்தேகமுல் இல்லை.

    1985-ல் இருந்து அணி 1983-ல் உலக கோப்பையை வென்ற அணியைவிட சிறந்தது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இரண்டு அணிகளிலும் நான் விளையாடியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 1983 உலக கோப்பையிலும், 1985 உலக சாம்பியன்ஷிப் அணியிலும் விளையாடியுள்ளேன்.

    1983-ல் இருந்த 80 சதவீத வீரர்கள் 1985-ல் விளையாடிய அணியில் இருந்தனர். ஆனால், சிவராமகிருஷ்ணன், விஷ்வநாத், அசாருதீன் போன்ற இளைஞர்கள் அணியில் இணைந்தனர். ஏற்கனவே அனுபவ வீரர்கள் இருந்ததால் சிறந்த அணியாக திகழ்ந்தது’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றை எளிதில் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த உடன் போட்டிகளை மீண்டும் தொடங்கலாம் என ஒவ்வொரு நாடுகளும் நினைத்துக் கொண்டிருந்தன.

    கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் இறந்த போதிலும், மறுபக்கம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் போட்டிகளை நடத்த கால்பந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளையும இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகளை நடத்தினாலும் சரியானதாகத்தான் இருக்கும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நம்முடைய நாட்டிற்காக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறோம். ஆகவே, ரசிகர்களுக்கு முன் விளையாடினாலும் சரி, ரசிகர்கள் இல்லாவிடிலும் சரி. போட்டி இதன் அடிப்படையில்தான் செல்லும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2015-ல் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரு அணிகளில் ஒன்றான டிரினாட் அணியை வாங்கியது.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நூறு பந்து கிரிக்கெட் தொடரை (The Hundred) நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் தொடர் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தனியார் முதலீட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது 300 மில்லியன் பவுண்டுகள் இழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் தனது கொள்கையில் மாற்றம் கொண்டு வர இருக்கிறது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
    ஒட்டுமொத்த மக்களின் மனநிலையையும் மாற்றுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த 13-வது ஐபிஎல் சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்வதால் இத்தொடர் நடப்பது சந்தேகம்தான் எனத் தெரிகிறது.

    இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பை பெற்று தந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பிர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த சூழ்நிலையும் மக்களுக்கு கடினமாக மாறிவிட்டன.

    நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டு மக்களின் மனஉறுதி சற்று குலைந்து போயுள்ளன. ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எது முக்கியம் என என்னிடம் கேட்டால், மக்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் முக்கியம் என்பேன். எனினும் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையையும் மாற்றுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி என கருதுகிறேன். 

    இதற்கு ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட வேண்டும். இதைவிட வேறு சிறந்த வழி எதுவும் இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., முக்கியமா என எல்லோரும் கேள்வி எழுப்புவார்கள்.

    ஆனால் ஐ.பி.எல்., நடத்தப்பட்டால் எந்த அணி கோப்பை வெல்கிறது, எந்த அணி தோற்கிறது என்று பார்க்க மாட்டார்கள். ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை மாற்றியதாகத்தான் இத்தொடரை பார்ப்பர்.

    கட்டாயம் வேண்டும். தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த உலகமும் நின்றுவிட்டது. நம்மைச் சுற்றிலும் தவறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மக்கள் ஐ.பி.எல். போட்டிகளை பார்க்கத் துவங்கி விட்டால், அனைத்து சூழ்நிலையும் மாறிவிடும். கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல். தொடர்களை காட்டிலும் இந்த ஆண்டு தொடர் நடப்பது மிக முக்கியம் என கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் நடுவரிசையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த சுரேஷ் ரெய்னா 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகு அணியில் இடம் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். கடந்த ஆண்டு கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட ரெய்னா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல். போட்டி தள்ளிபோய் விட்டது.

    33 வயதான ரெய்னா இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 36 அரைசதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 78 இருபது ஓவர் ஆட்டம், 18 டெஸ்டுகளிலும் ஆடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன்பு தேர்வாளர்கள் மீது குற்றம் சாட்டிய ரெய்னா, அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை. அத்துடன் சீனியர் வீரர்கள் விஷயத்தில் தேர்வாளர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். என்னிடம் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சுட்டிகாட்டினால் தானே சரி செய்ய முடியும். அது என்னவென்றே தெரியாத போது எப்படி முன்னேற்றம் காண முடியும் என்றும் ரெய்னா கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பதவிகாலத்தை நிறைவு செய்த முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் ரெய்னா விவகாரம் குறித்து நேற்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    வி.வி.எஸ்.லட்சுமணன் 1999-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கி 1,400 ரன்கள் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அணிக்கும் திரும்பினார். அணியை விட்டு கழற்றி விடும் போது, மூத்த வீரர்களிடம் இருந்து நாங்களும் அதைத் தான் (உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவது) எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளூர் போட்டிகளில் அத்தகைய அபார ரன் குவிப்பை நாங்கள் பார்க்கவில்லை. அதே சமயம் மற்ற இளம் வீரர்கள் முதல்தர போட்டி மற்றும் இந்திய ‘ஏ’ அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார்கள்.

    தேர்வாளர்கள் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது. தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை ரஞ்சி ஆட்டங் களை நேரில் பார்த்தார்கள் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆவணங் களை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

    ரெய்னாவை எனது அறைக்கு வரவழைத்து தனிப்பட்டமுறையில் பேசினேன். அப்போது நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும், வருங்காலத்தில் இந்திய அணிக்கு திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் விளக்கினேன். இத்தகைய முயற்சியை அவர் வெகுவாக பாராட்டி இருந்தார். ஆனால் இப்போது நடந்த சம்பவத்துக்கு நேர்மாறாக அவர் பேசுவது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது.

    தனிப்பட்ட முறையில் உத்தரபிரதேச அணிக்குரிய 4 ஆட்டங்களை (ரெய்னா விளையாடும் அணி) கான்பூர் மற்றும் லக்னோவில் பார்த்து உள்ளேன். அந்த அணியின் இதர ஆட்டங்களை சக தேர்வாளர்கள் பார்த்து உள்ளனர். பதவி காலத்தில் எங்களது தேர்வு கமிட்டியினர் 200-க்கும் மேற்பட்ட ரஞ்சி ஆட்டங்களை பார்த்து உள்ளனர் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். அணியில் சரியாக சோபிக்காமல் ஒரு வீரர் அணியில் இருந்து நீக்கப்படும் போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்க வேண்டும். சிறந்த வீரர்களில் ஒருவரான மொகிந்தர் அமர்நாத்தின் கிரிக்கெட் பயணத்தை நீங்கள் திரும்பி பார்த்தால், பல தடவை அணியில் இருந்து நீக்கப்பட்டதையும், பிறகு உள்ளூர் போட்டிகளில் அசத்தி வலுவாக மீண்டு வந்ததையும் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.

    சுரேஷ் ரெய்னா 2018-19-ம் ஆண்டு ரஞ்சி சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 243 ரன்கள் எடுத்தார். இதேபோல் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக 17 ஆட்டங்களில் 383 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தான் எம்எஸ் டோனியின் தீவிர ரசிகை என்றும் அவருடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நடந்த உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த ருசிகர பதில்கள் வருமாறு:-

    கேள்வி: எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசை?

    பதில்: டோனியை தேர்வு செய்கிறேன். டோனியிடம் சில தடவை ஹலோ சொல்லி இருக்கிறேன். ஆனால் நாங்கள் நண்பர்களாக இல்லை. அவருடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன். நான் டோனியின் மிகப்பெரிய ரசிகை.

    கேள்வி: உங்களது சாதனை பட்டியலில் விடுபட்டது?

    பதில்: ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    கேள்வி: உங்களது வாழ்க்கையில் கடினமான தருணம்?

    பதில்: 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் அரைஇறுதியில் தோற்றது, அதன் பிறகு நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

    கேள்வி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய டென்னிஸ் வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் வீராங்கனைகளை அந்த அளவுக்கு பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம்?

    பதில்: இளம் வயதில் பெண்களை விட ஆண்கள் உயர்மட்ட பயிற்சியை பெறுவது தான் காரணம்.

    கேள்வி: உங்களுக்கு பிடித்தமான டென்னிஸ் வீராங்கனை?

    பதில்: ஸ்டெபி கிராப் (ஜெர்மனி).

    கேள்வி: நீங்கள் டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுக்காமல் இருந்திருந்தால்....?

    பதில்: உள் அலங்கார வடிவமைப்பாளராகி இருப்பேன்.

    இவ்வாறு சானியா கூறினார்.
    அஸ்வின் மீது நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் கூறிய நிலையில் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹர்பஜன்சிங்கும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினர். கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஹர்பஜன்சிங் கூறும் போது, ‘எங்களிடையே நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் சொல்வார்கள். ஆனால் அஸ்வின் மீது ஒரு போதும் பொறாமை கொண்டதில்லை. இப்போது உலகின் சிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின் தான். இதேபோல் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் சிறந்த ஆப்-ஸ்பின்னராக திகழ்கிறார். அஸ்வின் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. உலக அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் கூட இடம் பிடிக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

    இந்திய அணியில் அஸ்வினின் சுழல் ஜாலம் மேலோங்கியதும், ஹர்பஜன்சிங் ஒரேயடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 33 வயதான அஸ்வின் இதுவரை 71 டெஸ்டுகளில் ஆடி 365 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
    உலகின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற மெஹ்முதுல்லா தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
    உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர்தான் தலைசிறந்ததாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.

    வங்காளதேச அணியின் மோர்தசா, அப்துர் ரசாக், முகமது அஷ்ரபுல், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். இதில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    வங்காள தேசம் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டன் மெஹ்முதுல்லா சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மெஹ்முதுல்லா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் ஏலம் எடுக்க மெஹ்முதுல்லா தகுதியானவர். குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த மூன்று நான்கு வருடங்களாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதது துரதிருஷ்டவசமானது’’ என்றார்.
    இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணிக்கு கேஎல் ராகுலை கீப்பராக தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் எம்எஸ் டோனி விளையாடாமல் உள்ளார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ அடுத்த விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தயார்படுத்தி வருகிறது.

    அவருக்கு போதுமான அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார். இதனால் இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்தது.

    கேஎல் ராகுல் பேட்டிங் செய்ததுடன் விக்கெட் கீப்பர் பணியையும் சிறப்பாக செய்தார். இதனால் நியூசிலாந்து தொடரிலும் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.

    இந்நிலையில் டி20 அணிக்கு கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்கலாம் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தீப் தாஸ்குப்தா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும். எப்படி கீப்பிங் செய்ய வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளார். அவர் முறையான விக்கெட் கீப்பர். அவரிடம் டெக்னிக்கல் திறமையும் உள்ளது’’ என்றார்.
    பார்சிலோனா அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக வாரச் சம்பளத்தில் சுமார் 2.83 கோடி ரூபாயை இழக்க நெய்மர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து பிஎஸ்ஜி அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். கால்பந்து வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு 198 மில்லியன் பவுண்டுக்கு பிஎஸ்ஜி அவரை வாங்கியது.

    பார்சிலோனா அணி நெய்மரின் டிரான்ஸ்பரை தடுக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் நெய்மர் வெளியேறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவரை விடுவித்தது. பிஎஸ்ஜி அவருக்கு போதுமான அளவிற்கு சம்பளம் கொடுத்தாலும் பார்சிலோனா அணியில் விளையாடிய அளவிற்கு நெய்மருக்கு புகழ் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப முடிவு செய்தார். நெய்மர் வருவதை மெஸ்சியும் வரவேற்றார்.

    ஆனால் பிஎஸ்ஜி நெய்மரை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் பார்சிலோனாவுக்கு செல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார். ஆனால் பிஎஸ்ஜி சம்பளத்தை அதிகப்படுத்தி அவரை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறது. தற்போது வாரத்திற்கு ஆறு லட்சம் பவுண்டு (ரூ. 5,65,85,850) சம்பளமாக கொடுக்கிறது. இதை மேலும் அதிகரித்து கொடுக்க தயாராக இருக்கிறது.

    பார்சிலோனா அவருக்கு 18 மில்லியன் பவுண்டுதான் சம்பளமாக கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. இதனால் நெய்மர் பார்சிலோனாவுக்கு வர விரும்பினால் அவரது வாரச் சம்பளத்தில் சுமார் 3 கோடி ரூபாயை இழக்க வேண்டியதிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் 3 கோடி ரூபாய் சம்பளத்தை இழக்க நெய்மர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொரோனா தொற்று பிரச்சனை முடிந்த பின்னர், வீரர்கள் டிரான்ஸ்பர் நடைமுறையின்போது நெய்மர் பார்சிலோனாவுக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
    நான் கற்றுக்கொண்ட கிரிக்கெட் அறிவை பரப்ப வேண்டும் என்பதே எனது நோக்கம் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் வேலையில், இந்திய கிரிக்கெட் மீது அவருக்கு மதிப்பு உண்டு.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று சோயிப் அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சோயிப் அக்தர் பதில் அளிக்கையில் ‘‘நிச்சயமாக நான் பணிபுரிவேன். என்னுடைய வேலை அறிவை பரப்புவதுதான். நான் கிரிக்கெட் குறித்து கற்றுக்கொண்ட அறிவை மற்றவர்களுக்கு பரப்புவேன். நான் ஆக்ரோசமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன்’’ என்றார்.
    ×