என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்தில் மண்ணில் முச்சதம் அடிப்பதுதான் என்னுடைய டார்கெட் என்று பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.
தற்போது அந்த அணி வீரர்கள் வொர்செஸ்டர்ஷைரில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துருப்புச்சீட்டாக நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முச்சதம் அடிப்பதுதான் டார்கெட் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘என்னை இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த பேட்டிங் ஜாம்பவான்கள் ஜாவித் மியான்தத் மற்றும் முகமது யூசுப் உடன் ஒப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.
இங்கிலாந்தில் இதற்கு முன் நடைபெற்ற தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். இதனால் வீரர்கள் இந்த தொடரை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது எங்களுடைய கவனம் இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான். இதுதான் இந்த தொடரின் முதல் இலக்கு.
இங்கிலாந்து அணிக்கு சொந்த மண் சாதகமக இருக்கும். ஆனால் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். அவர்களின் பலவீனமான தொடக்க பேட்ஸ்மேன்களை நாங்கள் குறிவைப்போம். முகமது அப்பாஸ் அனுபவமான வீரர். நசீம் ஸா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் அதிகமான திறன் உள்ளது. நாங்கள் எங்கள் பந்து வீச்சாளர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளோம்.
நீங்கள் சதம் அடிக்கும்போது, இயற்கையாகவே அதனை டபுள் அல்லது டிரிபிள் செஞ்சூரியாக மாற்ற விரும்புவீர்கள். இந்த விஷயத்தை நான் இந்த தொடரில் கட்டாயம் செய்ய விரும்புகிறேன். நான் எனது வழக்கமான ஆட்டத்தை போல விளையாட விரும்புவேன். ஆனால் என்னுடைய ஷாட் செலக்சன் கண்டிசன் மற்றும் பந்து வீச்சாளர்களை சார்ந்திருக்கும்’’என்றார்.
ஐசிசி-யின் தலைவர் ஷசாங்க் மனோகர் பதவி விலகியதால் பிசிசிஐ மிக்க மகிழ்ச்சி அடையும் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்தார். நேற்று பதவியில் இருந்து விலகினார். இவர் இருந்த காலத்தில் பிசிசிஐ-யின் முக்கியத்துவத்தை குறைத்தார். இதை பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஷசாங்க் மனோகர் விலகியது பிசிசிஐ-க்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட பார்வையில், இந்திய கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் காயப்படுத்திவிட்டார். அவர் விலகியதால் இந்திய கிரிக்கெட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஷசாங்க் மனோகர் கிரிக்கெட்டில் இந்தியாவின் நிதி ஆதாரத்திற்கும், ஐசிசி பதவிக்கும் தடையாக இருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரானவர். உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்தார். தற்போது அவர் வெளியேறிவிட்டார். ஏனென்றால், இந்திய தலைவர்களிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியாது என்பது அவருக்கும் தெரியும்’’ என்றார்.
ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் லீக்கை அடுத்த மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா பிக் பாஷ், பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரிமீயர் லீக் என ஒவ்வொரு நாடுகளும் நடத்தி வருகின்றன.
இலங்கை அணி முதன்முறையாக இந்த வருடம் டி20 லீக்கை அறிமுகம்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின் எல்லை மூடப்பட்டதால் அந்த திட்டம் தள்ளிப்போனது.
தற்போது இலங்கையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆகஸ்ட் 8-ல் இருந்து 22-ந்தேதி ஐந்து அணிகள் பங்கேற்கும் டி20 லீக்கை தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக ஒவ்வொரு அணிகளும் 6 வெளிநாட்டு வீரர்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இலங்கை அரசு ஆகஸ்ட் 1-ந்தேதி வரை சர்வதேச எல்லையை மூடியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதால் சர்ச்சைக்குள்ளானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. உயிர் பாதுகாப்பு சூழ்நிலைக்குள் நடக்கும் இந்த தொடரில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்ற அவரது மாமனார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இதனால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பர்படோஸ் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. சிந்தனையற்ற மற்றும் பொறுப்பற்ற செயல் என்று பர்படோஸ் கிரிக்கடெ் சங்கத்தின் தலைவர் கோன்டே ரிலே கடுயைாக சாடியிருந்தார்.
இந்நிலையில் பில் சிம்மன்ஸ் பதவிக்கு ஆபத்து இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தலைவர் ரிக்க ஸ்கெர்ரிட் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு பில் சிம்மன்ஸ்க்கு ஆதரவாக இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். என்ன நடந்தது என்பது பெரிய விஷயல் அல்ல.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக தலைமை பயிற்சியாளருக்கான தேடுதலை தொடங்கினோம். சிறந்த நபரை அந்த வேலைக்கு அமர்த்தியுள்ளோம். இன்னும் அவர் சிறந்த நபர்தான்’’ என்றார்.
பிரிமீயர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் செல்சி, லெய்செஸ்டர் சிட்டி அணிகள் தோல்வியடைந்ததால் சாம்பியன் லீக் வாய்பபை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கும் ஒன்று. ஏற்கனவே இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி 2-3 என வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதேபோல் லெய்செஸ்டர் எவர்டன் அணியிடம் தோல்வியடைந்தது. லெய்செஸ்டர் ஜனவரியில் இருந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முன் சிறப்பாக விளையாடி வந்தது.
தற்போது புள்ளிகள் பட்டியலில் லிவர்பூல் 86 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 63 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. லெய்செஸ்டர் சிட்டில் 55 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செல்சி 54 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
மான்செஸ்டர் யுனைடெட், வோல்ஸ் அணிகள் 52 புள்ளிகள் பெற்ற முறையே ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறும்.
இன்னும் 6 போட்டிகளில் உள்ளன. செல்சியும், லெய்செஸ்டர் சிட்டியும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோற்றால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும். இதனால் இரண்டு அணிகளும் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்றும் 3 முதல் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த ஊரடங்கு கூட விராட் கோலிக்கு நல்லதாக இருக்கலாம். இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் விராட் கோலியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்.
ஒரு பேட்ஸ்மேனாக கோலி என்னை விட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் களம் கண்டால் 15 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று விரும்புவார்’’ என்றார்.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்குரிய 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியா இதுவரை இந்த போட்டியை நடத்தியதும் இல்லை. கோப்பையை வென்றதும் இல்லை.
5 நாடுகள் ஆர்வம் காட்டுவதை வரவேற்றுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, 19-வது ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்குரிய 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியா இதுவரை இந்த போட்டியை நடத்தியதும் இல்லை. கோப்பையை வென்றதும் இல்லை.
5 நாடுகள் ஆர்வம் காட்டுவதை வரவேற்றுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, 19-வது ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில் மூன்று அணிகளுக்கு இடையிலான காட்சி கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு ஒவ்வொரு நாடுகளும் மீண்டும் கிரக்கெட் போட்டிகளை தொடங்க தயாராகி வருகின்றன. முதற்கட்டமாக இங்கிலாநது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகி்ஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்று அணிகள் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி முடிவு செய்தது. ,இதற்கு 3TC போாட்டி எனப் பெயரிட்டிருந்தது. முதலில் ஜூன் 27-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அரசின் அனுமதி கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 102-வது பிறந்த நாள் வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று இந்த போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
மூன்று அணிகளுக்கும் ஏபி டி வில்லியர்ஸ், குயின்டன் டி காக், ரபடா ஆகியோர் கேப்டன்களாக இருப்பார்கள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு போட்டியும் 12 ஓவர் கொண்டதாக இருக்கும்.
ஒரு அணியில் 8 பேர் பேட்டிங் செய்யலாம். 7 விக்கெட் வீழந்தாலும் 8-வது நபர் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். இரண்டு, நான்கு, சிக்சர்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒரே நாளில் இந்த போட்டிகள் நடைபெறும். மொத்தம் 36 ஓவர்கள் ஆகும்.
டி வில்லியர்ஸ் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஐபிஎல் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணிக்கு தல டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட் மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.
ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். நண்பரும், இந்திய அணியின் கேப்டனும், ஆர்சிபி-யின் சக வீரருமான விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்ற அழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்கவில்லை.
அவரது அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-
1. எம்எஸ் டோனி (கேப்டன்), 2. சேவாக், 3. ரோகித் சர்மா, 4. விராட் கோலி, 5, டி வில்லியர்ஸ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜடேஜா, 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. ரபடா, 11, பும்ரா.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் விடைபெற்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷகாங்க் மனோகர், பின்னர் ஐசிசி உறுப்பினராகி, தலைவராக பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்த பின்னர், மேலும் இரண்டரை காலம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் இன்று ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார். இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் ஷசாங்க் மனோகர் விலகியுள்ளார். அடுத்த வாரம் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிகிறது.
ஐசிசி தலைமை நிர்வாகி மானு சாவ்னெய் கூறுகையில் ‘‘ஐசிசி போர்டு, ஸ்டாஃப்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட் குடும்பம், நான் ஆகியோர் ஐசிசி தலைவர் பதவில் சிறப்பாக செயல்பட்ட ஷசாங்க் மனோருக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர் மற்றும் அவரது குடும்பம் சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துகிறோம்’’ என்றார்.
இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றாலும், பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நன்மையாக அமையவில்லை. கிரிக்கெட் உலகில் கொடிகட்ட பறக்கும் பிசிசிஐ-யின் நிதி பங்கீட்டில் தொகையை குறைப்பதில் முக்கிய நபராக விளங்கினார். இதனால் பிசிசிஐ அவர் மீது அதிருப்பதியில் இருந்து வந்தது.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து முன்னதாகவே முடிவை அறிவிக்காமல் ஐபிஎல் தொடருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் தாமதப்படுத்துவதாக பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிவர்பூல் அணிக்காக இந்த சீசனில் அதிக கோல் அடித்த முகமது சாலா, நீண்ட காலம் விளையாடி அதிக டைட்டில் வெல்ல வேண்டும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த கால்பந்து வீரரான முகமது சாலா லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அந்த அணிக்காக 17 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார். லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இவரது ஒப்பந்தம் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லிவர்பூல் அணிக்காக நீண்ட காலம் விளையாடி அதிக கோப்பைகள் வெல்ல வேண்டும் என் முகமது சாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகமது சாலா கூறுகையில் ‘‘நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். 30 வருடத்திற்குப் பிறகு இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கை வென்ற உணர்வை விவரிக்க முடியவில்லை. ரசிகர்களின் சந்தோசத்தை எங்களால் காண முடிந்தது. இதுதான் எங்கள் எல்லோருக்கும் முக்கியமானது. இந்த சூழ்நிலையை சந்தோசமாக அனுபவிக்கிறேன். இந்த இடத்தை விரும்புகிறேன். இங்கு நீண்ட காலம் இருப்பேன் என்று நம்புகிறேன்.
மற்ற இடங்களை விட இந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஒரு அணியாக நாங்கள் அதற்கு ஏற்றபடி மாறிக் கொண்டோம். புரிந்து கொள்ளுதல் சரியாக உள்ளது. இது அப்படியே தொடர்ந்தால் இன்றும் அதிகமான சாதனைகள் படைக்க முடியும். தற்போதைய நிலையை அப்படியே கொண்டு செல்ல கடினம். இருந்தாலும் முடியாதது அல்ல’’ என்றார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக எழுந்த விவகாரத்தில் மூன்று பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.
இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூதாட்ட குற்றச்சாட்டை அப்போதைய கேப்டன் சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே நிராகரித்து இருந்தனர். இது அபத்தமானது. இதற்கான ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்தக் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கூறப்படும் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
போலீசார் விசாரைணயை தொடங்கியுள்ளனர். அப்போதைய காலக்கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் உபுல் தரங்கா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது கேப்டனாக இருந்த சங்ககராவிடம் அறிக்கை அளிக்கும்படி போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.






