search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்ககரா"

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என இலங்கை ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli
    இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்துள்ளார். தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார்.
    அடிலெய்டில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி 64 சர்வதேச சதங்களுடன் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டுவில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் அவர் அபாரமாக விளையாடி ‘சதம்’ அடித்தார். 218-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலிக்கு இது 39-வது சதமாகும்.

    இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த தெண்டுல்கருக்கு (49 செஞ்சூரி) அடுத்தபடியாக விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதம் அடித்துள்ள விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.



    சர்வதேச போட்டியில் (டெஸ்ட்-ஒருநாள் போட்டி) விராட் கோலி 64-வது செஞ்சூரியை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். சங்ககரா 666 இன்னிங்சில் 63 சதங்கள் அடித்து இருந்தார். கோலி 401 இன்னிங்சில் 64 சதங்கள் எடுத்து தெண்டுல்கர், பாண்டிங்குக்கு அடுத்த நிலையில் உள்ளார்.



    கோலி டெஸ்டில் 25 சதங்களும் (131 இன்னிங்ஸ்), ஒருநாள் போட்டியில் 39 செஞ்சூரியும் (210 மேட்ச்) அடித்துள்ளார். 20 இருபது ஓவர் போட்டியில் விளையாடி சதம் அடித்தது இல்லை. அதிகபட்சமாக 90 ரன் எடுத்து உள்ளார்.
    ஒரே ஆண்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கர் உடன் விராட் கோலி பகிர்ந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
    இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த வருடத்தில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி 11 சதங்கள் விளாசியுள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 1998-ம் ஆண்டு ஒரே ஆண்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 12 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்து வருகிறது.

    நாளைமறுதினம் தொடங்கும் மெல்போர்ன் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    மேலும், இந்த ஆண்டில் விராட் கோலி 2653 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை வீரர் குமார் சங்ககரா 2868 குவித்ததே ஒரே ஆண்டில் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு 216 ரன்களே தேவை.
    ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #ViratKohli #Sangakkara
    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்திய கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.



    இதற்கிடையே, இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான சங்ககரா தொடர்ந்து 4 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக117 ரன்களும்,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்களும் அடித்துள்ளார். இதன்மூலம் சங்ககரா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்நிலையில், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தால், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். #ViratKohli #Sangakkara
    ×