search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்
    X

    சர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்

    அடிலெய்டில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி 64 சர்வதேச சதங்களுடன் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டுவில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் அவர் அபாரமாக விளையாடி ‘சதம்’ அடித்தார். 218-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலிக்கு இது 39-வது சதமாகும்.

    இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த தெண்டுல்கருக்கு (49 செஞ்சூரி) அடுத்தபடியாக விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதம் அடித்துள்ள விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.



    சர்வதேச போட்டியில் (டெஸ்ட்-ஒருநாள் போட்டி) விராட் கோலி 64-வது செஞ்சூரியை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். சங்ககரா 666 இன்னிங்சில் 63 சதங்கள் அடித்து இருந்தார். கோலி 401 இன்னிங்சில் 64 சதங்கள் எடுத்து தெண்டுல்கர், பாண்டிங்குக்கு அடுத்த நிலையில் உள்ளார்.



    கோலி டெஸ்டில் 25 சதங்களும் (131 இன்னிங்ஸ்), ஒருநாள் போட்டியில் 39 செஞ்சூரியும் (210 மேட்ச்) அடித்துள்ளார். 20 இருபது ஓவர் போட்டியில் விளையாடி சதம் அடித்தது இல்லை. அதிகபட்சமாக 90 ரன் எடுத்து உள்ளார்.
    Next Story
    ×