என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்தில் மாமனார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதால், உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என பார்படோஸ் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உயிர் பாதுகாப்பு வளையம் (bio-secure location)என்ற அடிப்படையில் வீரர்களை ஒருங்கிணைத்து மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட இருக்கிறது.

    இதற்காகவே ஒரு மாதத்திற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றது. புறப்படும் முன் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர்தான் வீரர்கள் புறப்பட  அனுமதித்தனர்.

    இங்கிலாந்துக்கு சென்றதும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்பின் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து வீரர்களுக்கும் இது நடைமுறைதான். வீட்டில் இருந்து 14 நாட்களுக்கு முன்னர் முகாமிற்கு வந்துவிட வேண்டும். இரண்டுமுறை பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கபடுவார்கள்.

    8-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இங்கிலாந்தில் அவரது மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக பார்படோஸ் கிரிக்கெட் சங்கம் அவரை உடினடியாக நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. தற்போது பில் சிம்மன்ஸ் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள 14 வீரர்களில் 9 பேர் பார்படோசை சேர்ந்தவர்கள். 14 இளம் வீரர்களின் உயிர் முக்கியம் என்று அந்த சங்கத்தின் தலைவரும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் தலைவருமான கோன்டே ரிலே கவலை தெரிவித்துள்ளார். மேலும், பில் சிம்மன்ஸ் செயல் சிந்தனையற்ற மற்றும் பொறுப்பற்றது எனவும் சாடியுள்ளார்.

    இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய உடன் சிம்மன் அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு முறையில் நெகட்டிவ் வந்துள்ளது. இன்னொரு  டெஸ்ட் செய்த பிறகு அணு வீரர்களுடன் இணைய அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இன்று மட்டுமல்ல தினந்தோறும் டாக்டர்கள் தினத்தை கொண்டாட வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    இன்று உலக டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இவர்கள்தான் கடவுளாக தோன்றுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள்தான் முன்னின்று அதை எதிர்கொண்டு வருகிறார். இந்த போரில் ஊராளமான டாக்டர்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் தினத்தை முன்னிட்டு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று மாதங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த ஸ்மித் முதன்முறையாக பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மைதானங்கள் சென்று பயிற்சி மேற்கொள்ளாத நிலை ஏற்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

    இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் பயிற்சி மேற்கொண்டுள்ளன.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

    அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘3 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் முதல் பந்தை சந்திக்கிறேன். குட் நியூஸ்....பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    2012-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆன ஜடேஜா 49 போட்டிகளில் 213 விக்கெட், 1689 ரன்களும் அடித்துள்ளார்.
    விஸ்டன் பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில் 21-ம் நூற்றாண்டின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவை மிகவும் மதிப்புமிக்க இந்திய டெஸ்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.

    2009-ம் ஆண்டு ஒயிட் பால் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன ஜடேஜா, 2012-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 213 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 1689 ரன்களும் அடித்துள்ளார்.

    ஜடேஜா

    முத்தையா முரளீதரன் சர்வதேச அளவில் மிகவும் சிறப்புமிக்க வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ஜடேஜா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    கால்பந்து போட்டிகளில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பார்சிலோனா புகழ் லயோனல் மெஸ்சி.
    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லயோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் ஆடி வருகிறார். இந்த நிலையில் லயோனல் மெஸ்சி 700- வது கோலை அடித்து முத்திரை பதித்தார்.

    ஸ்பெயினில் உள்ள லா லிகா கால்பந்து லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா - அட்லேடிகோ மாட்ரீட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா-வில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்தார்.

    இது அவரது கால்பந்து விளையாட்டில் இது 700-வது கோலாகும். லயோனல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 630 கோலும் (724 ஆட்டம்), அர்ஜென்டினா அணிக்காக 70 கோலும் (138) அடித்துள்ளார். கால்பந்து போட்டிகளில் 700 -வது  கோலை அடித்த 7-வது வீரர்  என்ற என்ற பெருமையை மெஸ்சி பெற்றார்.

    பீலே, ரொமாரியோ (பிரேசில்), ஜோசப் பிகான் (ஆஸ்திரியா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), பெரன்க் புஸ்காஸ் (அங்கேரி), ஜெரார்டு முல்லர் (ஜெர்மனி)  ஆகியோர்  700 கோல்களுக்கு மேல் அடித்துள்ளனர். இதில் பிகான் 805 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

    ஒரு கிளப்பில் அதிக கோல்கள் அடித்தவர் பீலே. அவர் ஒரு கிளப் அணிக்காக 643 கோல்கள் அடித்துள்ளார். பீலேயை முந்துவதற்கு மெஸ்சிக்கு இன்னும் 14 கோல்களே தேவை.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஜோ ரூட் விலக இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே  4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக  இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந் தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆடாததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜோ ரூட் மனைவிக்கு  இந்த வாரம் 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அவர் விளையாடவில்லை.

    உலக கோப்பை ஹீரோவான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருக்கிறார். தற்போது முதல் முறையாக கேப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொதுவாக போட்டிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையை எப்போதும் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கருதுபவன். கேப்டன் ஆகிவிட்டேன் என்பதற்காக எனது அணுகுமுறையில் மாற்றம் எதுவும் செய்ய மாட்டேன்.

    இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகிப்பது கவரமாகும். ஒரு போட்டிக்கு மட்டும் என்றாலும் கூட இங்கிலாந்து அணிக்கு நானும் கேப்டனாக இருந்தேன் என்று எப்போதும் சொல்லலாம்.

    இவர் பென்ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

    முன்னதாக அவரை கேப்டனாக நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையும் மீறி இங்கிலாந்து தேர்வுக்குழு அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.
    வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு, ஜார்கண்ட் முதல்-மந்திரி நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கீதா குமாரி. நடைப்பந்தயத்தில் மாநில அளவிலான போட்டியில் 8 தங்கப்பதக்கமும், தேசிய போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும் வென்று இருக்கும் கல்லூரி மாணவியான கீதா குமாரி வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்து தனது குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனால் அவரது தடகள பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    அவரது ஏழ்மை நிலை குறித்து தனது டுவிட்டருக்கு வந்த தகவல் மூலம் அறிந்த ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரென், தடகள வீராங்கனை கீதா குமாரிக்கு உதவி செய்யும்படி ராம்கார்க் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ராம்கார்க் மாவட்ட துணை கமிஷனர் சந்தீப் சிங், கீதா குமாரியை அழைத்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கியதுடன், அவருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அவர் பயிற்சியை தொடருவதற்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
    தல டோனியின் 39-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெயின் பிராவோ பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இல்லை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்று கூட சொல்லலாம். டி20 லீக்கை பிரபலப்படுத்த மிகப்பெரிய தூதுவராக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

    இவர் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். இவரை ரசிகர்கள் தல  என்றே அழைப்பார்கள்.

    ஜூலை 7-ந்தேதி தல டோனியின் 39-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை வெயின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

    டோனியின் டி-சர்ட் நம்பர் 7, முதல் முறையாக 2007-ல் டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தார். ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர்தான். இதை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்.

    இந்த பாடலின் டீசரை வெளியிட்ட பிராவோ, ‘‘நாங்கள் ஜூலை 7-க்கு தயாராகி கொண்டிருக்கிறோம். சாம்பியன் அணியுடன் சிறந்த டிராக்கோடு அவரது பிறந்த நாளை  கொண்ட சென்று கொண்டிருக்கிறோம். @djanamusic @ultrasimmo @collegeboyjesse @arielle.alexa @dexterrthomas இதற்கு டேக் செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது ஹெலிகாப்டர் ஆட்டத்தை காண்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    இதை வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ்  தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டு ‘‘ஹெலிப்பாடர் வாய்ப்பு. உங்களது வீடியோவை @DJBravo47 -க்கு அனுப்புங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளது.
    2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை முன்னாள் மந்திரி கூறிவந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

    இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த சூதாட்ட குற்றச்சாட்டை அப்போதைய கேப்டன் சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே நிராகரித்து இருந்தனர். இது அபத்தமானது. இதற்கான ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

    மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார். மற்றொரு முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா இறுதிப்போட்டியில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்தக் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில்  கூறப்படும் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சக செயலாளர் ருவன்சந்திரா  கூறியதாவது:-

    சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்துகிறது. இந்த குற்றவியல் விசாரணை தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் மான்செஸ்டரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊக்கமருந்து, மேட்ச் பிக்சிங் போன்றவற்றுக்கும், இனவெறியுடன் ஒரு வீரரை பேசுவதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனவெறியுடன் சக வீரரை ஒரு வீரர் பேசினால், அதை ஊக்கமருந்து, மேட்ச் பிக்சிங் குற்றத்துக்கு இணையாகவே கருத வேண்டும்.

    ஐ.சி.சி. விதிப்படி இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்க வேண்டும். முதல்முறையாக குற்றம்செய்தால் 4 சஸ்பென்சன் புள்ளிகள் வழங்க வேண்டும்.

    இரு புள்ளிகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார். அந்த அடிப்படையில் இரு டெஸ்ட் அல்லது 4 ஒரு போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு தொடருக்கும் முன்பு இனவெறிக்கு எதிரான விஷயங்களை வீரர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். ஊக்கமருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் போட்டித் தொடர் தொடங்கும் முன் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் இனவெறி பேச்சு குறித்தும் கூற வேண்டும். இதன் மூலம் வீரர்களுக்கு இனவெறி பேச்சு குறித்த அதிகமான விழிப்புணர்வு களத்தில் ஏற்படும்.

    கறுப்பினத்தவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரமாக ஆதரவு அளிக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல உலகில் எங்கு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடந்தாலும் அதை ஆதரி்ப்போம். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கான ஆதரவைத் தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரிக்கெட்டில் நடைபெறும் இனவெறி  விவகாரத்தை சுட்டிக்காட்டி வருகிறார்கள். டேரன் சமி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு இனவெறி நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தனர்.
    லா லிலா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது.
    மாட்ரிட்:

    20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள எஸ்பன்யோல் கிளப்பை எதிர்கொண்டது.

    இதில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பது அந்த அணிக்கு சவாலாகவே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி கோல் அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா பின் குதிகாலால் அற்புறமாக தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் கேஸ்மிரோ கோலுக்குள் திணித்தார்.

    பின் பாதியில் பதில் கோல் திருப்ப எஸ்பன்யோல் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. ரியல் மாட்ரிட் அணி மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளும் கைநழுவிப்போனது. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்பன்யோல் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியில் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி, நடப்பு சாம்பியன் பார்சிலோனா கிளப்பை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மீண்டும் தனதாக்கியது. ரியல் மாட்ரிட் அணி 32 ஆட்டத்தில் விளையாடி 21 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 71 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பார்சிலோனா அணி 32 ஆட்டத்தில் ஆடி 21 வெற்றி, 6 டிரா, 5 தோல்வியுடன் 69 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா கருத்து தெரிவிக்கையில், ‘இது மிகவும் முக்கியமான வெற்றியாகும். பார்சிலோனா அணியை நாங்கள் கண்டுகொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. அவர்களது செயல்பாடுகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இருப்பினும் நாங்கள் எங்களது ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். இன்னும் நிறைய ஆட்டங்கள் எஞ்சியிருக்கவில்லை. இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் இறுதிப்போட்டி போன்றதாகும்‘ என்றார்.
    ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள். போட்டிகளில் அவர்களது செயல்பாடு நன்றாக இருந்தால் அந்த பொறுப்பில் தொடர முடியும். திருப்திகரமாக இல்லையெனில் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்படுவார்கள். வரும் சீசனுக்கான (2020-21) ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜெல் லாங் ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிதின் மேனனுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள். கடைசியாக இந்திய நடுவர் சுந்தரம் ரவி கடந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது இந்த நடுவர் குழுவில் அலீம் தார் (பாகிஸ்தான்), குமார் தர்மசேனா (இலங்கை) உள்பட 12 பேர் இடம் வகிக்கின்றனர். இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நிதின் மேனன் 3 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டியில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். 2 ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிதின் மேனன் தனது 22 வயதில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அடுத்த ஆண்டிலேயே அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடுவராக தேர்வானார். ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவர் குழுவில் இடம் பிடித்து இருப்பது குறித்து நிதின் மேனன் கருத்து தெரிவிக்கையில், ‘சிறந்த நடுவர் குழுவில் இடம் பெற்று இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய சவாலை எதிர்நோக்குவதுடன், ஒவ்வொரு வாய்ப்பிலும் எனது சிறந்த பணியை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இந்த நடுவர் பட்டியலில் வருங்காலத்தில் நிறைய இந்தியர்கள் இடம் பிடிப்பார்கள் என நம்புகிறேன்’ என்றார்.
    ×