என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘Black Lives Matter’லோகா அணிந்து விளையாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கொடூரமாக கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் இன்னும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இனவெறி விளையாட்டிலும் உள்ளது என்று வீரர்கள் குற்றம்சாட்டினர். கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது கால்பந்து வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டி-சர்ட்டில் ‘Black Lives Matter’ என்ற லோகாவை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்வது ஆகியவை எங்களது கடமை என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
ரிஷப் பண்ட் சிறப்பான வீரர், அணி நிர்வாகம் இன்னும் அவருக்கு துணையாக இருக்கிறது என்று இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார்.
இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள் நுழையும்போது எம்எஸ் டோனியின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்த போதிலும் ரிஷப் பண்ட்-ஆல் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.
இந்நிலையில் இன்னும் ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட்-க்கு கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. அணி நிர்வாகம் இன்னும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர் சிறப்பான வீரர் என்பதை நாங்கள் நம்புகிறோம். அவர் ரன்கள் அடிக்க தொடங்கிவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருப்பார்.
இன்னும் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக விளையாடும் நோக்கில்தான் உள்ளார். அவரது எதிர்காலம் குறித்து என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. ரிஷப் பண்ட் சில போட்டிகளில் சொதப்பியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், இதுபோன்ற சில விஷயங்கள் வலிமையாகவும், சிறந்த வீரராகவும் உருவாக்கும்’’ என்றார்.
டெல்லி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் தோபால் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
டெல்லி மாநில கிரிக்கெட் வீரரும், 23 வயதிற்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியின் சப்போர்ட் ஸ்டாஃபாகவும் இருந்தவர் சஞ்சய் தோபால். 53 வயதான இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் பஹதுர்காரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் உடல்நிலை மோசமடைய திவார்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்திய அணிக்காக விளையாடிய டெல்லியில் சேவாக், கவுதம் காம்பிர் மற்றும் மிதுன் மன்ஹாஸ் ஆகியோருக்கு நன்றாக தெரிந்த நபராவார். இவர் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர். சன்னெட் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடியுள்ளார். தரக் சிக்ஹா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாங்கள் 300 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் என அசார் அலி தெரிவித்துள்ளார்.
3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று லாகூரில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. டெஸ்ட் கேப்டன் அசார் அலி, துணை கேப்டன் பாபர் அசாம், முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது உள்பட 20 வீரர்களும், தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக், மருத்துவ அதிகாரி உள்பட 11 பேரும் சமூக இடைவெளியுடன் விமானத்தில் அமர்ந்து பயணித்தனர். முதற்கட்ட சோதனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 10 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.
பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த நடைமுறை முடிந்ததும் ஜூலை 13-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்குவார்கள். ரசிகர்கள் இன்றி நடக்க உள்ள இந்த போட்டித் தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாகிஸ்தான் கேப்டன் 35 வயதான அசார் அலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது உற்சாகம் அளிக்கிறது. வீரர்களும் களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ‘வாட்ஸ்அப்’ குரூப் மூலம் எங்களுக்குள் தொடர்பை உருவாக்கி, வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து உடல்தகுதியை பேணுவதில் கவனம் செலுத்தினோம். அடிக்கடி மருத்துவ பரிசோதனை என்பது இப்போது விளையாட்டில் ஒரு அங்கமாகி விட்டது. அது போக போக பழகி விடும். அதனால் அது ஒரு பிரச்சினை அல்ல. இந்த கடினமான காலக்கட்டத்தில் கிரிக்கெட் மூலம் மக்களை மகிழ்விக்க முயற்சிப்போம்.
இங்கிலாந்து தொடர் எப்போதும் சவால் மிக்கது. கடந்த (2016-ம் ஆண்டில் 2-2 என்று டிரா), (2018-ம் ஆண்டில் 1-1 டிரா) இரண்டு சுற்றுப் பயணங்களில் விளையாடியது போன்று மீண்டும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.
முந்தைய உள்நாட்டு டெஸ்டுகளில் எங்களது வீரர்களில் நிறைய பேர் சதம் அடித்தனர். அதே நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு பயணிக்கிறோம். இங்கிலாந்தில் ரன் எடுப்பது எப்போதும் கடினம்தான். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் 300 மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்து விட்டால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்.
அலஸ்யர் குக் ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்தின் தொடக்க வரிசை பலவீனமாக காணப்படுகிறது. தொடக்க வரிசைக்கு சில ஜோடிகளை பயன்படுத்தி பார்த்து, இப்போதுதான் கொஞ்சம் சரியாகி இருக்கிறது. ஆனாலும் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் குறித்து அவர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம்.
எங்களது வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பந்து வீசும் விதம் எந்த அணிக்கும் நெருக்கடியை கொடுக்கும். இதேபோல் நசீம் ஷா அதிக வேகத்துடன் வீசக்கூடியவர். முகமது அப்பாஸ் அனுபவம் வாய்ந்தவர். அத்துடன் திறமையான இளம் வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களால் இங்கிலாந்தின் எந்த பேட்டிங் வரிசையையும் சீர்குலைக்க முடியும்.
பந்தை தேய்ப்பதற்கு எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதை பின்னடைவாக பார்க்கவில்லை. ‘டியூக்’ வகை பந்தில் நிறைய மெழுகு பூசப்பட்டு இருக்கும். அதனால் நீண்ட நேரம் பந்தின் பளபளப்பு தன்மை மாறாது. அது மட்டுமின்றி வியர்வையால் பந்தை பளபளப்பாக்க முடியும்.
இங்கிலாந்தும் வலுவான பந்துவீச்சை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதுவும் உள்ளூர் சூழலில் அபாரமாக பந்து வீசுவார்கள். ஆனால் ஜாப்ரா ஆர்ச்சரை நீங்கலாக பார்த்தால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோரின் பந்து வீச்சை நாங்கள் ஏற்கனவே சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அசார் அலி கூறினார்.
சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே விராட் கோலியின் பலம் என்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் கூறினார்.
புதுடெல்லி :
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான விக்ரம் ரதோர் ‘பேஸ்புக்’ மூலம் நடந்த உரையாடலின் போது கூறியதாவது:-
இந்திய கேப்டன் விராட் கோலி குறித்த வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஆட்டத்தின் மீது அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு தான். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறார். நான் பார்த்தமட்டில், மிக கடினமான உழைக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் அவர் தான்.
அதுமட்டுமின்றி சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது ஆட்டபாணியை விரைவில் மாற்றிக்கொள்வது அவரது மிகப்பெரிய பலமாகும். அவர் ஒரே மாதிரியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. அணியின் தேவைக்கு தக்கபடி தனது பேட்டிங்கை மாற்றிக்கொள்வார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி என்று ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வெவ்வேறு விதமான ஆட்டங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 4 சதங்களுடன் 40 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். அப்போது அவர் சூப்பர் பார்மில் இருந்தார். அந்த ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று விளையாடியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 மாதங்கள் அதிரடி ஜாலம் காட்டிய அவர் அதன் பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்தார்.
ஆனால் இதில் ஆச்சரியமான ஒன்று, ஒரு பந்தை கூட அவர் சிக்சருக்கு தூக்கியடிக்கவில்லை. இது போன்று வெவ்வேறு வடிவிலான போட்டிகளில் ஆடும் போது பேட்டிங் அணுகுமுறையை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது எல்லோராலும் செய்ய முடியாது. அது தான் அவரது பலம்.
இவ்வாறு ரதோர் கூறினார்.

பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் எம்எஸ் டோனி, வளர்ந்த தாடியுடன் புதிய தோற்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. அவ்வப்போது புதுவகை தோற்றத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஐபிஎல் தொடரின்போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று காட்சியளிப்பார்.
தற்போது பொது முடக்கத்தால் டோனி பண்ணை வீட்டில் மனைவி, மகளுடன் நேரத்தை செலவழித்தார். மகளுடன் பைக் ரேஸ், செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் வளர்ந்த தாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை டோனியை வழக்கமான வயதை விட மிகவும் வயதானவராக காட்டுவதாக ரசிகர்கள் ஆச்சர்யமாக கூறி வருகிறார்கள்.
சில ரசிகர்கள் எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் மனநிலையில் தல டோனி இல்லை. வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
Teri ek jhalak mil jaye toh, din ban jaye...🥰#MSDhoni#Dhoni#RanchiDiarypic.twitter.com/injZ38m7Q4
— MS Dhoni Fans Official (@msdfansofficial) June 27, 2020
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சு ஜா்மபவான் அம்ப்ரோஸ் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடமாட்டார். ஆனால், அவரது ஆக்ரோஷம் அதைவிட கொடுமையானது என ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 1980-ல் இருந்து 1995-ம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடரை இழக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருந்தது. விவியன் ரிச்சர்ட்ஸ், அம்ப்ரோஸ், மால்கம் பார்சல் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தனர்.
1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது 2-1 என ஆஸ்திரேலியா வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த தொடரின் ஜமைக்கா போட்டியில் ஸ்டீவ் வாக் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் மார்க் வாக்கும் சதம் அடித்தார்.
இந்தத் தொடரில் தனக்கும் அம்ப்ரோஸ்க்கும் இடையில் நடைபெற்ற கடுமையான மோதல் குறித்து ஸ்டீவ் வாக் நினைவு கூர்ந்துள்ளார்.

அம்ப்ரோஸ் குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘கர்ட்லி அம்ப்ரோஸ் சிறந்த பந்து வீச்சாளர். அவர் நம்பமுடியாத வகையிலான எதிரி. ஆனால் நான் மிகவும் மரியாதை கொடுக்கும் எதிரணி பந்து வீச்சாளர். அவர் ஒருபோதும் உங்களிடம் ஏதும் சொல்லமாட்டார். இது ஸ்லெட்ஜிங்கை விட மிகவும் மோசமானது. அவர் உங்களை அவுட்டாக்க நினைக்கிறாரா, உங்களை காயப்படுத்த முயற்சி செய்ய நினைக்கிறாரா என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.
அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை சிலர் சொல்வதைவிட இது மோசமானது. அவர் சரியான லெந்தில் பந்தை வீசுவதுடன், கழுத்தை குறிவைத்து ஷார்ட் பந்துகளையும் வீசக் கூடியவர். அவர் அற்புதமான போட்டியாளர்.’’ என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா போன்று இருந்தது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமல் குல் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் முதன்முதலாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக்கை தொடங்கியது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களும் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்றனர்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சளார் உமர் குல்லை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. கங்குலியின் தலைமையின் கீழ் அவர் விளையாடினார்.
2008 தொடரை நினைவு கூர்ந்த உமல் குல், ஐபிஎல் திருவிழா போன்று இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமர் குல் கூறுகையில் ‘‘முதல் முறையாக தனியார் லீக் தொடங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் ரசித்தோம். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியது. ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்டது. வங்காள தேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது, பிரெண்டன் மெக்கல்லம் முதல் போட்டியிலேயே 150 ரன்கள் விளாசியது என பல ஞாபங்கள் உள்ளன.
நாங்கள் இந்தியாவுக்கு சென்றபோது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஐபிஎல் முற்றிலும் மாறுவிட்ட விஷயம். அது திருவிழா போன்று இருந்தது.
போட்டி நடைபெற்ற பின், ஓட்லில் போட்டி குறித்த நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷாருக் கான் உரிமையாளர் என்பதால் அவர் இருப்பார். தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றாலும் ஸ்பான்சர், பிராண்ட் உடன் போட்டோ எடுத்துக் கொள்வோம். பார்ட்டியும் நடைபெறும். இது மிகவும் சிறப்பாக அனுபவம்.
நான் இளம் வீரர் என்பதால் ரிக்கி பாண்டிங் போன்ற தலைசிறந்த வீரர்களிடம் இருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது’’ என்றார்.
2008-க்குப்பிற எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்த வீரர்களை முறையாக கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்ளாள் வீரர் இன்சமாம் உல் ஹக் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. 28-ந் தேதியுடன் தொடர் முடிகிறது
இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் குளறுபடியா? என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் முகமது ஹபீஸ்க்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது பாசிட்டிவ் வந்தது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மீது முன்னாள் கேப்டன் இன்சமாம் பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களின் செல்போன் அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவர்கள் தவிர்ப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தவறான செயலாகும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற எண்ணம் கொரோனா பாசிட்டிவ் வீரர்களுக்கு ஏற்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.
நான் கூறுவது எல்லாம், பாதிக்கப்பட்ட வீரர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் முகமது ஹபீஸ் பிரச்சினையை அடுத்து மற்ற வீரர்களும் அதேபோன்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
பாசிட்டிவ் வீரர்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதை விட தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு போதுமான இட வசதி உள்ளது. அவர்கள் நம்முடைய வீரர்கள். முழுமையாக குணமடையும் வரை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இன்சமாம் கூறியுள்ளார்.
ஜூலை 2-ந்தேதி எம்எஸ் டோனி ஆன்லைன் அகாடமியை திறப்பதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி குறித்து கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2 உலக கோப்பை வென்று அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 38 வயதான அவர் எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் ஆடிவிட்டு அதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் டோனி ஓய்வு பெற முடிவு செய்து இருந்ததாக கூறப்பட்டது. தற்போது கொரோனாவால் ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவது சந்தேகமே.
இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் டோனி வருகிற 2-ந்தேதியில் இருந்து ஆன்லைன் மூம் இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்.
இதற்காக பயிற்சி மையத்தை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் இருப்பார். அதே சமயத்தில் தோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் செயல்படும்.
இதுகுறித்து டோனியுடன் கைகோர்த்துள்ள ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறும்போது ‘‘நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பேர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஜூலை 2-ம் தேதியில் இருந்து பயிற்சி அளிக்க உள்ளோம். டோனி இதற்கு தலைமை பொறுப்பாளராக இருக்கிறார். மற்ற பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் உயர்மட்ட அளவிலான போட்டிகளுக்கு வீரர்களின் உறவினர், நிர்வாகிகளின் சொந்த பந்தம் என்ற அடிப்படையில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. அப்படி ஒருபோதும் நடக்காது. குறிப்பிட்ட ஒருவரின் மகன் அல்லது உறவினர் என்பதற்காக ஐ.பி.எல். போட்டியில் எந்தவொரு வீரருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் மகன் என்பதற்காக ரோகன் கவாஸ்கர் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடிவிடவில்லை. பெங்கால் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் தான் அவர் இந்திய அணிக்கு தேர்வானார். அவரது பெயரில் கவாஸ்கர் என்று இருந்தாலும் ரஞ்சி போட்டிக்கான மும்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதேபோல் தான் அர்ஜூன் தெண்டுல்கரையும் சொல்லலாம். தெண்டுல்கரின் மகன் என்பதால் அவருக்கு எதுவும் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை. இந்திய அணிக்குள் அவரால் எளிதில் நுழையமுடியவில்லை. கீழ்மட்ட அளவிலான போட்டிகளில் வேண்டுமானால் சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். ஆனால் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் கூட இதுபோன்ற பயனற்ற தேர்வுகள் நடைபெறுவதில்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பில் சிக்கியவர்களை தவிர்த்து மற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ரசிகர்கள் இன்றி ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் இந்த போட்டிக்குரிய அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இங்கிலாந்து தொடருக்காக பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 29 வீரர்களில் மூத்த வீரர் சோயிப் மாலிக் தவிர அனைவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், இளம் பேட்ஸ்மேன் ஹைதர் அலி, வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் முகமது ஹபீஸ் தனியாக வேறொரு ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்திருப்பதாக கூறினார். அவரது செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்திக்குள்ளானது.
இதையடுத்து கொரோனாவில் சிக்கிய 10 வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ், பஹார் ஜமான், ஷதப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்னைன் ஆகிய 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. மற்ற 4 வீரர்களுக்கும் கொரோனா இருப்பதால் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 6 வீரர்களையும் இங்கிலாந்து தொடருக்கு உடனடியாக அனுப்ப முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் 2 ‘நெகட்டிவ்’ முடிவு வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிபந்தனை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் அனைவருக்கும் அடுத்த வாரம் 3-வது முறையாக சோதனை நடத்தப்படும். அதிலும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தால் அவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாற்று ஆட்டக்காரர்களான வேகப்பந்து வீச்சாளர் முசா கான், விக்கெட் கீப்பர் ரோகைல் நசிர் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 20 வீரர்களும், பயிற்சியாளர், உதவியாளர் 11 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லாகூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
பாகிஸ்தான் வீரர்கள் அங்கு சென்றதும் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிறகு அவர்கள் ஒர்செஸ்டரில் உள்ள சொகுசு விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நடைமுறை நிறைவு பெற்றதும் ஜூன் 13-ந்தேதியில் இருந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து இரண்டு 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அணி வருமாறு:- அசார் அலி (டெஸ்ட் கேப்டன்), பாபர் அசாம் (20 ஓவர் அணியின் கேப்டன்), அபித் அலி, இமாம் உல்-ஹக், ஷான் மசூத், ஆசாத் ஷபிக், பவாத் ஆலம், இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, சர்ப்ராஸ் அகமது, பஹீம் அஷ்ரப், முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, சோகைல் கான், உஸ்மான் ஷின்வாரி, இமாத் வாசிம், யாசிர் ஷா, முசா கான், ரோகைல் நசிர்.