என் மலர்
விளையாட்டு
‘கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர வைத்தவர் டிராவிட்’ என்று இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனான புஜாரா இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிரிக்கெட் விளையாடாத நேரத்தில் ஆட்டம் குறித்த சிந்தனையில் இருந்து வெளியே வருவது எவ்வளவு முக்கியம் என்பதை முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தான் எனக்கு உணர வைத்தார். கிரிக்கெட்டையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒருசேர கலக்கக்கூடாது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். ஏறக்குறைய எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. ஆனாலும் இது குறித்து நான் டிராவிட்டுடன் கலந்துரையாடிய பிறகு தான் நல்ல தெளிவு கிடைத்தது. அத்துடன் நான் என்ன செய்ய வெண்டும் என்பதும் புரிந்தது. அந்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
வீரர்கள் தங்களுடைய தொழில்முறை கிரிக்கெட்டையும், சொந்த வாழ்க்கையையும் தனித்தனியாக எப்படி கையாளுகிறார்கள் என்பதை கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகையில் நான் பார்த்து இருக்கிறேன். கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தினாலும், அதில் இருந்து எப்பொழுது வெளியில் வர வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் கிரிக்கெட்டுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.
ராகுல் டிராவிட் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது. அவர் எனக்கு எப்பொழுதும் ஊக்கம் அளிப்பவராக உள்ளார். எப்போதும் அவர் எனக்கு அப்படி தான் இருப்பார். டிராவிட் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. இருந்தாலும் நான் அவரது ஆட்டத்தை காப்பி அடிக்க ஒருபோதும் முயற்சித்தது கிடையாது. எங்களுடைய ஆட்ட பாணியில் ஒற்றுமை இருக்கும். ஆனால் அது அவர் எனக்கு பிடித்தமானவர் என்பதால் உருவான ஒற்றுமை கிடையாது.
குறிப்பாக சவுராஷ்டிரா அணியுடனான அனுபவத்தின் மூலம் இந்த ஆட்ட முறை எனக்கு வந்தது. உங்கள் அணியை முன்னெடுத்து செல்ல சதம் அடித்தால் மட்டும் போதாது, நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் போது கற்றுக்கொண்டேன். அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவுவது எப்படி?, விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை பலவீனமான சவுராஷ்டிரா ஜூனியர் அணிக்காக விளையாடுகையில் புரிந்து கொண்டேன்.
இவ்வாறு புஜாரா கூறினார்.

கொரோனா அச்சம், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது.
ராஞ்சி:
இந்திய நட்சத்திர வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 26 வயதான தீபிகா உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். அவர், சகநாட்டு வில்வித்தை வீரரான 28 வயதான அதானு தாசை காதலித்தார். 2018-ம் ஆண்டு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோய் விட்டது. இப்போதைக்கு எந்த போட்டிகளும், பயிற்சி முகாமும் இல்லை.
இந்த நிலையில் கொரோனா அச்சம், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது. முக்கியமானவர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பிதழில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதலை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. தீபிகா குமாரி கூறுகையில், ‘திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு முககவசம், சானிடைசர் வழங்கப்படும். திருமண நிகழ்ச்சி பெரிய ஹாலில் நடைபெறுகிறது. எனவே சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவோம். நாங்கள் யாரையும் தொடப்போவதில்லை. நாங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும். மொத்தம் 60 அழைப்பிதழ் மட்டுமே வழங்கியுள்ளோம். மேலும் பலருக்கு போனில் அழைப்பு விடுத்திருக்கிறோம். மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களை 2 பகுதியாக பிரித்துள்ளோம். முதல் ஒன்றரை மணி நேரம் 50 பேரும், அதன் பிறகு இன்னொரு 50 பேரும் வரும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளோம். குடும்ப உறுப்பினர்கள் எங்களது வீட்டிலேயே இருப்பார்கள்’ என்றார்.

தனியார் மருத்துவனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது என ஹபீஸ் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது.
இங்கிலாந்து செல்ல இருக்கும் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹர் ஜமான், ஆல்ரவுண்டர் ஷதாப் கான், புதுமுக பேட்ஸ்மேன் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் குளறுபடியா? என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஹபீசுக்கு கொரொனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தனிமையில் இருக்காத அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.
மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்துக்கு பயணமாகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார்கள்.
முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை தொடர்ந்து அவரது பயிற்சியாளர் இவானிசெவிச்சும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மான்டிகார்லோ:
‘அட்ரியா டூர்’ என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சமீபத்தில் நடத்தினார். இதில் பங்கேற்ற கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னோ கோரிச் (குரோஷியா), விக்டர் டிரோக்கி (செர்பியா) ஆகிய வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
அத்துடன் இந்த போட்டியை முன்னின்று நடத்திய ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவி ஜெலினாவும் கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு ஆளானது உறுதியானது. போட்டியின் போது போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று பரவ காரணம் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. நடந்த சம்பவத்துக்காக ஜோகோவிச் வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜோகோவிச்சின் பயிற்சியாளரும், 2001-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 48 வயது முன்னாள் வீரர் கோரன் இவானிசெவிச் (குரோஷியா) புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவானிசெவிச், குரோஷியா சுற்று கண்காட்சி டென்னிஸ் போட்டியின் இயக்குனராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இவானிசெவிச் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘கடந்த 10 நாட்களில் எனக்கு நடத்தப்பட்ட 2 மருத்துவ பரிசோதனைகளில் ‘நெகட்டிவ்’ (கொரோனா இல்லை) என்று முடிவு வந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராதவிதமாக ‘பாசிட்டிவ்’ (கொரோனா தொற்று இருப்பதாக) என்று தெரியவந்துள்ளது. எனக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பேன். கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனை செப்டம்பர் - அக்டோபரில் பிசிசிஐ நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, ஐசிசி தடையாக நிற்கின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. 13-வது சீசன் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஆசிய கோப்பை டி20 தொடர், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் போட்டியை நடத்துவது சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆனால் ஐசிசி இதுவரை டி20 உலக கோப்பையை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்காமல் இழுத்தடிக்கிறது. ஐசிசி-யின் தலைவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர்தான் இதற்கு காரணம் என பிசிசிஐ தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த மாதம் மத்தியில்தான் முடிவு எடுக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடர் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் தொடரை நடத்தும் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் தொடருக்காக டி20 தொடரை ஒத்திவைக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆசிய கோப்பையையும் நடத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னதாகவே ஐபிஎல் தொடருக்கு தயாரானால்தான் வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து அவர்களை தனிமைப்படுத்தி தொடருக்கு தயார்படுத்த முடியும். இதற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தேவைப்படும்.
இதனால் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நேரத்தில் ஆசிய கோப்பையை நடத்த பிசிசிஐ அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தியாகம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தயாராக இல்லை.
ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும் முட்டுக்கட்டையாக இருப்பதால் என்ன செய்யலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ-க்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி எம்.எஸ். டோனியின் தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையில் இன்னும் ஒன்றைக்கூட வெல்லவில்லை.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
இந்நிலையில் 2013-க்குப்பிறகு இந்தியா ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாம் கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதன்பின் 3 அல்லது நான்கு தொடர்களில் விளையாடியுள்ளோம். நாம் அரையிறுதிக்கு அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.
2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றோம். அதேபோல் கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் தோற்றோம். இது அதிர்ஷ்டம் இல்லாதது. மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முன்னதாகவே இழந்ததால் வாய்ப்பை இழந்தோம்.
எதிரணியை 250-க்குள் கட்டுப்படுத்தி நாம் தோல்வியடைந்தது மிகவும் அபூர்வமானது. ஒட்டுமொத்த தொடரில் ரோகித் சர்மா 5 சதங்கள் விளாசினார். கே.எல். ராகுல் நல்ல பார்மில் இருந்தார். விராட் கோலி எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர். அவருடன் டோனியையும் பெற்றிருந்தோம்’’ என்றார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டுகும் போது மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக டுவிட்டரில் JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் தற்போது
சமூக வலைதளத்தில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமூக வலைதளவாசிகள், சினிமா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும் என டுவிட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவானும் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு உரிய நீதி வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு
உரிய நீதி கிடைக்க நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். கைகோர்ப்போம் JusticeForJeyarajAndFenix'’ என அவர் பதிவிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’முடிவு வந்துள்ளது.
இதேபோல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஹபீஸ் எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார் என்று பாகிஸ்தான் சிஇஓ வாசிம் கான் கவலையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘நான் ஹபீஸ் உடன் பேசினேன். அப்போது இந்த பிரச்சினையை அவர் கையாண்ட விதத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம் என்பதை அவரிடம் தெளிவாக கூறிவிட்டோம்.
தனி நபராக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உரிமை உள்ளது. ஆனால் அவர் அதற்கு முன் எங்களிடம் பேசியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் எங்களுக்க பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார். மீடியாக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஹபீஸ் விதிமுறையை மீறுவது இது முதல் தடவை அல்ல.
அவர் மத்திய ஒப்பந்தத்தில் இல்லை. என்றாலும் ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு தேர்வான பின்னர், அனைத்து வீரர்களுக்கான விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், நான் இந்த இன்னும் கவனமாக பார்த்துக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், இங்கிலாந்து அணியுடன் தாமதமாக இணைந்த ஜாப்ரா ஆர்சர் பயிற்சியை மேற்கொண்டார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிறது 8-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 9-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.
14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதேவேளையில் பயிற்சிக்காக 30 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சியை மேற்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு திட்டமிட்டிருந்தது.
அதன்படி நேற்று பயிற்சியை தொடங்கினார்கள். இதற்கிடையே ஜாஃப்ரா ஆர்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் ஆர்சர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாப்ரா ஆர்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில் நெகட்டிவ் வர அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.
சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த 19-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கார், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20-ம்தேதி முழு பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரில் வந்த ராபின் சிங் போலீசார் தடுத்துள்ளனர். அவசரமாக செல்வதற்கான தகுந்த காரணங்கள், இ-பாஸ் இல்லாததால் போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர்.
ராபின்சிங் இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வு பெற்றபின் பல்வேறு லீக் அணிகளில் பணிபுரிந்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமே. ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இரண்டு முறை கூடியும் இந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்த போட்டி நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த மாதத்தில் நடந்த 2-வது கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஐ.சி.சி .தலைவர் தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது.
20 ஓவர் உலக கோப்பை குறித்து ஜூலை மத்தி வரை ஐ.சி.சி. முடிவு செய்யாது என்று தெரிகிறது. ஐ.சி.சி.யின் அடுத்த கூட்டம் ஜூலை மத்தியில் நடக்கிறது. அதற்கு முன்புவரை உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்பதில் ஐ.சி.சி திட்டவட்டமாக உள்ளது.
உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உலகக்கோப்பை விஷயத்தில் முடிவு எடுப்பதில் ஐ.சி.சி தாமதிப்பதால் பி.சி.சி.ஐ. அதிருப்தி அடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் ஷசாங் மனோகர் மீது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் ஐ.சிசியின் முடிவுக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. புதிய தலைவர் குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு செய்யப்படும் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கோலின் கிரேவ்ஸ் இதற்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி போட்டியிடுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கிறது.
மான்செஸ்டர் சிட்டி அணி செல்சியிடம் தோல்வியடைந்ததால் பிரிமீயர் லீக் கால்பந்து சாம்பியன் பட்டத்தை 30 ஆண்டுகளுக்கு பிறகு லிவர்பூல் அணி வென்றுள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து ‘லீக்’ போட்டிகளில் ஒன்று பிரிமீயர் லீக் போட்டியாகும். இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக் போட்டி கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி கடந்த 17-ம்தேதி மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் 20 அணிகள் பங்கேற்ற இங்கிலாந்து பிரிமீயர் 'லீக் 'கால்பந்து போட்டியில் லிவர்பூல் கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. இதன் மூலம் லிவர்பூல் கிளப் பட்டம் வாய்ப்பை பெற்றது.
லிவர்பூல் அணி 31 ஆட்டத்தில் விளையாடி 28 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 86 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. 7 ஆட்டங்கள் இன்னும் எஞ்சி இருக்கும் நிலையில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
மான்செஸ்டர் சிட்டி 31 ஆட்டத்தில் 20 வெற்றி, 3 டிரா, 8 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டி தொடக்கப்பட்டு தற்பொழுதுதான் 30 ஆண்டுகளுக்குப்பிறகு லிவர்பூல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 1989-90-ல் இங்கிலாந்தின் பழைய முதல் டிவிஷன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
பிரிமீயர் லீக் பட்டத்தை அதிகபட்சமாக மான்செஸ்டர் சிட்டி 13 முறை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் அந்த அணி 2-வது இடத்தை பிடித்தது.