என் மலர்
விளையாட்டு
சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த 19-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கார், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20-ம்தேதி முழு பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரில் வந்த ராபின் சிங் போலீசார் தடுத்துள்ளனர். அவசரமாக செல்வதற்கான தகுந்த காரணங்கள், இ-பாஸ் இல்லாததால் போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர்.
ராபின்சிங் இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வு பெற்றபின் பல்வேறு லீக் அணிகளில் பணிபுரிந்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமே. ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இரண்டு முறை கூடியும் இந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்த போட்டி நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த மாதத்தில் நடந்த 2-வது கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஐ.சி.சி .தலைவர் தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது.
20 ஓவர் உலக கோப்பை குறித்து ஜூலை மத்தி வரை ஐ.சி.சி. முடிவு செய்யாது என்று தெரிகிறது. ஐ.சி.சி.யின் அடுத்த கூட்டம் ஜூலை மத்தியில் நடக்கிறது. அதற்கு முன்புவரை உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்பதில் ஐ.சி.சி திட்டவட்டமாக உள்ளது.
உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உலகக்கோப்பை விஷயத்தில் முடிவு எடுப்பதில் ஐ.சி.சி தாமதிப்பதால் பி.சி.சி.ஐ. அதிருப்தி அடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் ஷசாங் மனோகர் மீது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் ஐ.சிசியின் முடிவுக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. புதிய தலைவர் குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு செய்யப்படும் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கோலின் கிரேவ்ஸ் இதற்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி போட்டியிடுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கிறது.
மான்செஸ்டர் சிட்டி அணி செல்சியிடம் தோல்வியடைந்ததால் பிரிமீயர் லீக் கால்பந்து சாம்பியன் பட்டத்தை 30 ஆண்டுகளுக்கு பிறகு லிவர்பூல் அணி வென்றுள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து ‘லீக்’ போட்டிகளில் ஒன்று பிரிமீயர் லீக் போட்டியாகும். இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக் போட்டி கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி கடந்த 17-ம்தேதி மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் 20 அணிகள் பங்கேற்ற இங்கிலாந்து பிரிமீயர் 'லீக் 'கால்பந்து போட்டியில் லிவர்பூல் கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. இதன் மூலம் லிவர்பூல் கிளப் பட்டம் வாய்ப்பை பெற்றது.
லிவர்பூல் அணி 31 ஆட்டத்தில் விளையாடி 28 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 86 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. 7 ஆட்டங்கள் இன்னும் எஞ்சி இருக்கும் நிலையில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
மான்செஸ்டர் சிட்டி 31 ஆட்டத்தில் 20 வெற்றி, 3 டிரா, 8 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டி தொடக்கப்பட்டு தற்பொழுதுதான் 30 ஆண்டுகளுக்குப்பிறகு லிவர்பூல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 1989-90-ல் இங்கிலாந்தின் பழைய முதல் டிவிஷன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
பிரிமீயர் லீக் பட்டத்தை அதிகபட்சமாக மான்செஸ்டர் சிட்டி 13 முறை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் அந்த அணி 2-வது இடத்தை பிடித்தது.
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சனை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டிலும், ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டிலும் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க விசா பெறுவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை பெற்று தர வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க 2 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து இருந்தது’ என்று தெரிவித்து இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்று ஐ.சி.சி. விதிமுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிமுறை கிரிக்கெட் வாரியங்களுக்கும் பொருந்தும். எனவே கிரிக்கெட் வாரியங்கள் அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது. ஐ.சி.சி.யில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் தனிப்பட்ட சிலரின் ஏஜெண்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவதை உணர்ந்து கொள்வதுடன், அதனை நிறுத்தி கொள்வதற்கும் இது சரியான தருணமாகும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பான ஊடுருவல் எதுவும் இருக்காது என்றோ அல்லது போர் நிறுத்த மீறல் எதுவும் நடக்காது என்றோ? அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ? அல்லது புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா?’ என்றார்.
எல்லையில் நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் இடையே சுமூக உறவு இல்லை என்பதால் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் எதுவும் நடைபெறவில்லை. ஐ.சி.சி. போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.
சூரிச்:
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன.
இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், கொலம்பியாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து, 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
2020 ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இரண்டு முறை தல்லாவஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
2020 சீசனில் செயின்ட் லூசியா ஜவுக்ஸ் அணிக்கு மாறினார். ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரை சிபிஎல் நடைபெற இருக்கிறது. ஏப்பர் மாதம் செயின்ட் லூசியா அணி கெய்லை வாங்கியது.
இந்நிலையில் சொந்த காரணமாக இந்த வருட சீசனில் இருந்து கிறிஸ் கெய்ல் விலக முடிவு செய்துள்ளார். கரீபியின் பிரிமீயர் லீக் தொடரின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் ‘‘லாக்டவுன் காரணமாக குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இளைய மகள் செயின்ட் சிட்ஸில் இருக்கிறார். நான் ஜமைக்காவில் இருக்கிறேன். அதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இடைவெளி தேவை’’ எனத் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இறுதிப் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை தவறவிட்டேன் என்று ஸ்ரீகாந்த் 1983 உலக கோப்பை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீசை 43 ரன்னில் வீழ்த்தி முதல் உலக கோப்பையை இந்தியா வென்றது. 184 ரன் இலக்கை எடுக்க முடியாமல் அந்த அணியை 140 ரணில் இந்திய வீரர்கள் சுருட்டினர்.
ஜூன் மாதம் 25-ந்தேதி இந்திய அணி உலக கோப்பை வென்ற தினமாகும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத மகத்தான நாள் இதுவாகும். இந்தியா உலக கோப்பையை வென்று இன்றுடன் 37-வது ஆண்டு முடிகிறது.
இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆவார். அவர் 57 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார்.
உலக கோப்பை வென்ற நினைவலைகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. இதனால் இந்த இலக்கை எளிதில் "சேஸ்" செய்துவிடுவார்கள் என்று நினைத்தோம்.
அப்போது கேப்டன் கபில்தேவ் எங்களிடம் ‘‘நாம் 183 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி விட்டோம். இருப்பினும் முழுத் திறமையை வெளிப்படுத்தி போராட வேண்டும். வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது’’ என்றார். அவர் அளித்த இந்த ஊக்கமான வார்த்தைகள் போட்டியில் சாதிக்கத் தூண்டியது. புதிய வரலாறு படைக்க முடிந்தது.
இறுதிப்போட்டியில் நான் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டது இன்னும் என் மனதில் இருக்கிறது.
நான் சிறிய தவறை செய்துவிட்டேன்.. அதிகமான நம்பிக்கையினால் எனது விக்கெட்டை பறிகொடுத்தேன். ராபர்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த நான் மால்கம் மார்சலுக்கு எல்.பி.டபிள்யூ ஆனேன். நேரடியாக வந்த பந்தில் மோசமான முறையில் ஆட்டம் இழந்தேன். அடுத்த பந்துக்காக காத்திருந்துருக்க வேண்டும். கபில்தேவ் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் இறுதிப்போட்டியில் திருப்புமுனையாகும்.

உலக கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இறுதிப்போட்டிக்கு முந்தைய தினம் இந்திய அணி நிர்வாகிகள் எங்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் இறுதிப் போட்டி பற்றி கவலைப்பட வேண்டாம். போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் உங்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றனர்.
மேலும் இறுதிப் போட்டியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை சாம்பியன் அங்கிகாரத்துடன் களம் இறங்கியது.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 702 பரிசோதனைகள் செய்துள்ளது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை ) 8-ந்தேதி சவுத்தம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள், நடுவர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஊழியர்கள், போட்டி நடைபெறும் இடத்தின் ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 3-ந்தேதி முதல் 24- ந்தேதி வரை 702 பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் முடிவில் இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர்களுக்குநடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டு இருந்தது.
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 68 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
பார்சிலோனா:
லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனாவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா கிளப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை வீழ்த்தியது. 71-வது நிமிடத்தில் பார்சிலோனா கேப்டன் லயோனல் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் இவான் ராகிடிச் கோலாக்கினார். நேற்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடிய மெஸ்சிக்கு இந்த வெற்றி பிறந்தநாள் பரிசாக அமைந்தது.
31-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா 21 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 30 ஆட்டத்தில் விளையாடி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு இறங்கியது.

எளிதில் வெல்ல முடியாத அணியாக மிடுக்குடன் வலம் வந்த வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்ட நாள் இன்று (ஜூன்.25).
3-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் அரங்கேறியது. 60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி லீக் சுற்று முடிவில் 4 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் அரைஇறுதியை உறுதி செய்தது.
லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவை தலா ஒரு முறை இந்திய அணி வீழ்த்தினாலும், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து தத்தளித்த நிலையில் கேப்டன் கபில்தேவ் 6-வது வரிசையில் களம் புகுந்து ருத்ரதாண்டவமாடினார். ஜிம்பாப்வே பந்து வீச்சை பொளந்து கட்டிய அவர் 175 ரன்கள் (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து பிரமிக்க வைத்தார். அவரது சரவெடியால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரைஇறுதி வாய்ப்பையும் தட்டிச் சென்றது. உலக கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாக இந்தநாள் வரை கபில்தேவின் ஸ்கோரே நீடிக்கிறது.
அரைஇறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் விரட்டியது.
ஜூன் 25-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மகுடத்துக்காக கோதாவில் குதித்தன. முதல் 2 உலக கோப்பையையும் வசப்படுத்தியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசுர பலத்துடன் திகழ்ந்ததால் அந்த அணிக்கே கோப்பை என்பது தான் பெரும்பாலானவர்களின் கணிப்பாக எதிரொலித்தது.
முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் ஆகிய சூறாவளி பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தது. 54.4 ஓவர்களில் இந்திய அணி 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் (57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.
‘அற்ப ஸ்கோர்....நின்று ஆடினால் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்சே இந்த இலக்கை எட்ட வைத்து விடுவாரே?’ என்று வர்ணனையாளர்கள் கலாய்த்தனர். அப்போதே கோப்பையை வென்று விட்டது போன்ற மாயைக்குள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிதந்தனர்.
இன்னொரு பக்கம் நம்பிக்கையற்று காணப்பட்ட இந்திய வீரர்களுக்கு கேப்டன் கபில்தேவ் புத்துயிர் ஊட்டினார். “வெஸ்ட் இண்டீஸ் நம்மை 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ செய்துள்ளது என்றால், நம்மாலும் அதே போன்று செய்ய முடியும். அதை செய்யக்கூடிய திறமை நமது பந்து வீச்சாளர்களிடம் உண்டு. ஏற்கனவே லீக் போட்டியில் அவர்களை சாய்த்து இருக்கிறோம். அதனால் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். குறைவான ஸ்கோர் என்றாலும் கடைசி வரை போராடுவோம்” என்ற கபில்தேவின் ஒவ்வொரு வார்த்தைகளும் வீரர்களுக்குள் உத்வேகத்தை கிளர்ந்தெழச் செய்தது.
சுலபமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசின் தொடக்க வீரர்களை இந்திய பவுலர்கள் எளிதில் காலி செய்தனர். அவர்களின் ஒரே குறி விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரியுடன் 33 ரன்கள் (28 பந்து) எடுத்த நிலையில் மதன்லால் வீசிய பந்தை ‘மிட்விக்கெட்’ திசையில் தூக்கினார். கிட்டத்தட்ட 20 மீட்டர் ஓடிச்சென்று கபில்தேவ் பந்தை லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச்சே ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு கேப்டன் கிளைவ் லாயிட் 8 ரன்னில் வெளியேற ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. சீதோஷ்ண நிலையை கனகச்சிதமாக பயன்படுத்தி இந்திய பவுலர்கள் ஸ்விங் செய்த விதம் வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. 52 ஓவர்களில் வெறும் 140 ரன்னில் முடங்கினர்.
இதன் மூலம் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து வரலாறு படைத்தது.
இந்த உலக கோப்பை போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய வீரர்கள் மத்தியில் பெரிய அளவில் நம்பிக்கையும் கிடையாது, எதிர்பார்ப்பும் கிடையாது. லீக் சுற்றோடு நடையை கட்டி விடுவோம் என்று கருதி சில வீரர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்று கூட சொல்லப்படுவது உண்டு. ஆனால் 24 வயதான அரியானா எக்ஸ்பிரஸ் கபில்தேவின் சாமர்த்தியமான கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த வெற்றியே அச்சாரம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கும் இதுவே முதல்படியாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது.
37 ஆண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் அந்த மறக்க முடியாத நினைவுகளை நமது வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் மீண்டும் ஒரு முறை அசைப்போட்டு வருகிறார்கள்...!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது. இதே போல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எது எப்படி என்றாலும் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.
கொழும்பு:
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வங்காளதேச அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நடைபெற இருந்த நியூசிலாந்து, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.