search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்கள்
    X
    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்கள்

    702 பரிசோதனைகள் நடத்தப்பட்டது: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 702 பரிசோதனைகள் செய்துள்ளது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை ) 8-ந்தேதி  சவுத்தம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள், நடுவர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஊழியர்கள், போட்டி நடைபெறும் இடத்தின் ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சோதனை நடத்தப்பட்டது. 

    கடந்த 3-ந்தேதி முதல் 24- ந்தேதி வரை 702  பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில்  முடிவில் இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர்களுக்குநடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டு இருந்தது.
    Next Story
    ×