search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெய்செஸ்டர் சிட்டி"

    இங்கிலாந்து லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர் ஸ்ரீவதன பிரபா ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LeicesterCity #Srivaddhanaprabha
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி.

    2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது.

    லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை ஸ்ரீவதனபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீசுவரரான இவர் 2010-ம் ஆண்டு அந்த கால்பந்து கிளப்பை வாங்கினார்.

    லெய்செஸ்டர்சிட்டி- வெஸ்ட் ஹாம் கிளப் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    இந்தப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், கிங்பவர் ஸ்டேடியத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    ஹெலிகாப்டர் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. ஸ்டேடியத்தின் முன்பு உள்ள பார்க்கிங் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து வெடித்து தீப்டித்தது.

    இந்த விபத்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் விச்சை ஸ்ரீவதன பிரபா பலியானார். அவருடன் மேலும் 4 பேர் பலியானார்கள்.

    அந்த கிளப்பின் ஊழியர்களான நுர்சாரா சுக்நமாமி, கேவே போர்ன், விமானி எரிக்சுவாபர், அவரது உதவியாளர் இசபெல்லா ரோசா ஆகியோரும் இறந்தனர்.

    ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஸ்டேடியம் முன்பு நெருப்பு கோளம் ஏற்பட்டது. போட்டியை பார்த்து விட்டு வெளியே சென்றுக் கொண்டு இருந்த கால்பந்து ரசிகர்கள் இதை பார்த்து பீதி அடைந்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    ஹெலிகாப்டரில் உள்ள விசிறியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உலகின் சிறந்த மனிதனை இழந்து விட்டதாக அந்த கிளப் தனது உரிமையாளர் மரணம் தொடர்பாக தெரிவித்துள்ளது. #LeicesterCity #Srivaddhanaprabha
    ×