என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங், தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரான முன்னாள் குத்துச்சண்டை வீரர் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக டெல்லி சென்று விட்டு திரும்பிய போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார்.

    இதையடுத்து இம்பாலில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மே மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவ்வப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்தது. தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பி உள்ளார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது, அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன் என்று 41 வயதான டிங்கோ சிங் தெரிவித்தார்.
    இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
    டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே  மீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

    இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு முதலில் சூதாட்ட புகாரை தெரிவித்த இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகேவிடம் விசாரணை நடத்தியது. அவர் சில ஆதாரங்களை சமர்ப்பித்தாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 2011 உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு தலைவராக இருந்தவரும், முன்னாள் கேப்டனுமான அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக ஆடிய உபுல் தரங்காவிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்கள்.

    அந்த உலக கோப்பையில் கேப்டனாக பணியாற்றிய சங்ககராவிடம் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டனும், 2011 உலக  கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றியவருமான மகிளா ஜெயவர்த்தனேவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்துனார்கள்.

    விசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இந்திய அணி வெல்ல அனுமதித்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்த இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான முகமது ஷமி, பண்ணை வீட்டில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
    இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்து வீச்சாளர்கள் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் முகமது ஷமி, அவருடைய பண்ணை வீட்டில் வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.  அவர் பந்து வீசும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘‘என்னுடைய பண்ணை வீட்டில் தரமான பயிற்சி செசன். அனைத்து சகோதரர்களுடன் இணைந்து’’ என்று தெரிவித்துள்ளார்.

    <blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Quality practice session 🏏at my farmhouse 🏡all brothers together <a href="https://t.co/UZiG0HEf0y">pic.twitter.com/UZiG0HEf0y</a></p>&mdash; Mohammad Shami (@MdShami11) <a href="https://twitter.com/MdShami11/status/1278710929098600448?ref_src=twsrc^tfw">July 2, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்துள்ள வாசிம் ஜாபர் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரில் சிறந்தவரை தேர்வு செய்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக விளையாடியவர் வாசிம் ஜாபர். தொடக்க காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார். இவர் சச்சின் தெண்டுல்கரை விட விராட் கோலிதான் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி 248 ஒருநாள் போட்டிகளில் 11 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சராசரி 60-ஐ தொட்டுள்ளது. 43 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். 490 சதங்கள் அடங்கும். சராசரி 44.83. இதை குறிப்பிட்டு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    மேலும் ‘‘சவுரவ் கங்குலி 2000-த்திற்குப் பிறகு அணியை சிறப்பாக கட்டமைத்தார். வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு அதிகமாக வாய்ப்புகளை வழங்கினார். சேவாக்கை தொடக்க வீரராக உருவாக்கினார். ஜாகீர் கான்,  யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்றவர்களை உருவாக்கினார்.

    விராட் கோலி, சச்சின், ரோகித் சர்மா

    நீங்கள் ஒன்றை இலக்கும்போது அதி ஏராளமான மாற்றத்தை உருவாக்கும். ஒரு தொடருக்குப்பின் மேட்ச்-பிக்சிங் விவகாரம் நடைபெற்றது. இதனால் டெஸ்ட கிரிக்கெட் தொடர் நீண்ட நாட்களுக்கு நடைபெறவில்லை. அதன்பின் அணியில் ஏராளமான அதிரடி நீக்கம் மற்றும் மாற்றம் நடைபெற்றது. நான் சிறப்பாக விளையாடவில்லை. அது மற்றொருவருக்கு வழிவகுத்தது.

    நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சிறந்த வீரராக மாறினேன். ஆனால், அதன்பின் எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. வருடத்திற்கு வருடம் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தேன். ஆனால், ஒருபோதும் அணியில் மீண்டும் இடம் பிடிக்கவில்லை. 30 வயதை எட்டும்போது சற்று ஏமாற்றம் அடைந்தேன். அதிக அளவில் முதிர்ச்சி அடைந்து என்னுடைய ஆட்டத்தை புரிந்து கொண்டேன். இந்திய அணிக்காக மீண்டும் அழைக்கப்படாதது வருத்தமே’’ என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
    ஆரம்ப காலக்கட்டத்தை ஒப்பிட்டால் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்தவர் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரராக உள்ளார். அதேபோல் பாகிஸ்தான் ஒயிட்பால் அணி கேப்டன் பாபர் அசாமும் தலைசிறந்த வீரராக உள்ளார். இருவரையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

    ஆனால் பாபர் அசாம் பலமுறை என்னை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடக்க காலத்தில் ஒப்பிட்டால் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த வீரர் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்த குறைந்த காலக்கட்டத்தில் ஏராளமான சாதனைகளை பாபர் அசாம் படைத்துள்ளார். தற்போது இதுவரை செய்த சாதனைகளை விட சிறப்பாக அவரால் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்.

    பாபர் அசாம், விராட் கோலி

    விராட் கோலி 10 வருடம் விளையாடியுள்ள நிலையில், பாபர் அசாம் மூன்று, நான்கு வருடங்கள்தான் விளையாடியுள்ளார். ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபர்தான் முன்னிலையில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும்’’என்றார்.
    ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது.

    ஆனால், ஐசிசி இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டமிடுதலை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று முன்னாள் பேட்ஸ்னே் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்த இருப்பது எனக்கு உண்மையிலேயே பயத்தை அளிக்கிறது. அதற்கான காரணம் உள்ளது. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு வருகிறது என்றால் சரியானது. அந்த அணியை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி தொடருக்கு சிறப்பாக தயார் படுத்தி விடலாம்.

    ஆனால் ஏராளமான அணிகள் வரும்போது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பலத்து முன்னெச்சரிக்கையுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கான திட்டத்தை வடிவமைப்பது படுபயங்கரமானது. இதற்கிடையே டி20 உலக கோப்பை 2021 அல்லது 2022 தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

    ஆனால் இந்தியா தொடருக்கு நான் ஆதரவு கொடுப்பேன். ஏனென்றால் ஒரு அணி என்பதால் ஒரே இடத்தில் அவர்களை எளிதாக கையாள முடியும். உதாரணத்திற்கு அடிலெய்டு மைதானம் ஓட்டல் தொடர்புடன் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் அங்கேயே இருக்க முடியும்.

    அதன்பின் பயிற்சி, தொடருக்கு தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட முடியும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பர் மாதம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக செஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் அர்காடி டிவோர்கோவிச் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    துபாய் எக்ஸ்போ நடைபெறும் காலத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பரில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் துபாய் எக்ஸ்போ அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாலும், கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததாலும் உலக செஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் தற்போது உலக சாம்பியனாக இருக்கிறார். 2013-ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். அவர் விஸ்வநாதன் ஆனந்த், செர்ஜி கர்ஜாகின், பேபினோ கருணாவை தோற்கடித்து 4  முறை உலக செஸ் பட்டத்தை கைப்பற்றினார்.

    நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கேண்டிடேட்ஸ் போட்டியில் வெல்பவருடன் மோதுவார். கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ்  போட்டி கொரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது.
    தனது மீதான ஆயுட்கால தண்டனையை குறைக்க வேண்டும் என்று அங்கீத் சவான், பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கடெ் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின்போது சூதாட்டம் நடந்ததை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஸ்ரீசந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆயுட்கால தடை விதித்தது.

    இதற்கிடையே 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி டெல்லி கோர்ட்டு 2015-ம் ஆண்டு அவர்களை விடுவித்தது. ஆனால் கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டது.

    ஸ்ரீசந்த் சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டு தடையை 7 ஆண்டாக குறைத்தார். இதனால் அவரது தடை செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இதன் காரணமாக ஸ்ரீசந்த் கேரள உள்ளூர் போட்டிக்கான தேர்வு அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்த நிலையில் தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அங்த் சவான் வலியுறுத்தியுள்ளார். அவர் ஏற்கனவே மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தனக்கு உதவுமாறு கேட்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். அங்கீத் சவான் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில்  விளையாடி இருக்கிறார்.
    2011 உலககோப்பையில் சூதாட்ட புகார் தொடர்பாக சங்ககராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், ஜெயவர்தனேவை விசாரணைக்கு அழைத்து விடுத்துள்ளது.
    டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே  மீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

    இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு முதலில் சூதாட்ட புகாரை தெரிவித்த இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகேவிடம் விசாரணை நடத்தியது. அவர் சில ஆதாரங்களை சமர்ப்பித்தாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 2011 உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு தலைவராக இருந்தவரும், முன்னாள் கேப்டனுமான அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக ஆடிய உபுல் தரங்காவிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்கள்.

    அந்த உலக கோப்பையில் கேப்டனாக பணியாற்றிய சங்ககராவிடம் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டனும், 2011 உலக  கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றியவருமான மகிளா ஜெயவர்த்தனேவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்துகிறார்கள். அவர் இறுதிப் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சூதாட்ட விசாரணைக்கு வீரர்களை அழைப்பதற்கு தெரிவித்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஐபிஎல் 2020 சீசன் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கொரோனாவின் கோரதாண்டவத்தால் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த போட்டியை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி நடைபெற வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்பட்டாலும், இந்த விஷயத்தில் முடிவெடுக்க காலம் தாழ்த்தி வரும் ஐ.சி.சி. இந்த மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த முன்னுரிமை அளித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ்சின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்திய மண்ணில் இந்த போட்டி அரங்கேறுவது கடினம்தான். எனவே இந்த போட்டியை வெளிநாட்டில் நடத்துவது குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அனேகமாக இந்த போட்டி வெளிநாட்டில் நடைபெறவே வாய்ப்புள்ளது. கொரோனா பரவலால் தற்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில், ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் கூட பொருத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

    இதனால் இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து இந்த போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும்’’ என்றார். 
    பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்தார் என்று கிராண்ட் பிளவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
    பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிராண்ட் பிளவர் தனது  பயிற்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, யூனிஸ் கானை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியில் (2016) பங்கேற்றோம். அப்போது மதிய உணவு இடைவேளை, யூனிஸ் கானுக்கு சில பேட்டிங் 'அட்வைஸ்' வழங்க முயன்றேன்.

    ஆனால் எனது அறிவுரையை கண்டு கொள்ளாத அவர், திடீரென எனது கழுத்தில் கத்தியை வைக்க, பதறிப் போனேன். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த மிக்கி ஆர்தர், இப்பிரச்சினையில் தலையிட்டார்.

    அது சற்று வித்தியாசமாக இருந்தாலும், பயிற்சி பணியில் இதுவும் ஒரு பகுதிதான் என எடுத்துக் கொண்டேன். இருப்பினும், இந்த சம்பவம் அந்த தொடரையே எனக்கு நரகமாக மாற்றியது.

    இவ்வாறு கிராண்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த ஒரே பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் ஆவார். தற்போது பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றுள்ளது. யூனிஸ்கான் பேட்டிங் பயிற்சியாளராக சென்றுள்ளார்.
    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சர் எவர்டன் வீக்ஸ் மரணம் அடைந்தார்.
    பார்படோஸ்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் 1940, 50-களில் சர் எவர்டன் வீக்ஸ், சர் கிளைட் வால்காட், சர் பிராங் வாரெல் ஆகியோர் பேட்டிங் தூண்களாக திகழ்ந்தனர். பார்படோசில் ஓரிரு கிலோமீட்டர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்த இவர்கள் ஒருசேர மூன்று வார இடைவெளியில் வெஸ்ட் இணடீஸ் அணிக்குள் நுழைந்து கோலோச்சினர். ‘மூன்று டபிள்யூ’க்கள் என்ற செல்லப்பெயருடன் வலம் வந்த இவர்களில் வாரெல், வால்காட் ஏற்கனவே இறந்து விட்டனர்.

    இந்த ஜாம்பவான்களில் எஞ்சி இருந்த எவர்டன் வீக்ஸ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.

    ‘மூன்று டபிள்யூ’க்களில் எவர்டன் வீக்ஸ் தான் பேட்டிங்கில் நிறைய சாதனைகளை படைத்தார். 1948-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் 12 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் குறைந்த ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை கடந்த உலக சாதனையை ஹெர்பர்ட் சட்கிளப்புடன் (இங்கிலாந்து) பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் கூட தனது 13-வது இன்னிங்சில் தான் ஆயிரம் ரன்களை எட்டினார்.

    மேலும் டெஸ்டில் தொடர்ச்சியாக 5 இன்னிங்சில் சதம் கண்ட ஒரே வீரர் என்ற பெருமையும் எவர்டன் வீக்ஸ் வசமே இந்த நாள் வரைக்கும் இருக்கிறது. அவர் 1948-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் (141 ரன்), இந்தியாவுக்கு எதிராக 4 சதமும் (128, 194, 162, 101 ரன்) இவ்வாறு தொடர்ச்சியாக இன்னிங்சில் அடித்திருந்தார். தொடர்ந்து 6-வது சதமும் அடித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் 90 ரன்களில் இருந்த போது, நடுவரின் தவறான தீர்ப்பால் ரன்-அவுட் ஆகிப்போனார்.

    அவர் மொத்தம் 48 டெஸ்டுகளில் விளையாடி 15 சதம், 19 அரைசதத்துடன் 4,455 ரன்கள் (சராசரி 58.61) சேர்த்துள்ளார். டெஸ்டில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்களில் அதிக சராசரி வைத்துள்ள டாப்-5 பேட்ஸ்மேன்களில் வீக்சும் ஒருவர். காலில் அடிக்கடி காயம் அடைந்ததால் தனது 33-வது வயதிலேயே கிரிக்கெட்டை விட்டு விலகினார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், விளையாட்டு அலுவலர், ஐ.சி.சி. போட்டி நடுவர் என்று கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    மறைந்த எவர்டன் வீக்சுக்கு புகழாரம் சூட்டியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், ‘எவர்டன் வீக்ஸ் ஒரு ஜாம்பவான், எங்களது ஹீரோ. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தந்தை. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். சிறந்த மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

    சச்சின் தெண்டுல்கர், ரவிசாஸ்திரி, கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், விவியன் ரிச்சர்ட்ஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
    ×